குலசேகர நங்கை அம்மன் திருக்கோவில்
------------------------------------------
குலசேகரபுரம்.
புலம் பெயர்தல் என்பது மனிதன் தோன்றிய நாள்முதல் தொடர்ந்து வருவது ! அதிலும் தண்ணீர் இருக்கும் இடந்தேடி மனிதன் புலம் பெயர்தலே சிறப்பானது !
அதிலும் வேளாண்மையைத் தொழிலாக்க் கொண்ட வேளாண் பெருமக்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் ,பாதுகாப்பாக, தங்கள் குடியிருப்பினை அமைத்துக் கொள்ள இடந் தேடி வருகையில் ,
’’ஒர் இட்த்தில் தவளை ஒன்று தன் வாயில் பாம்பினைக் கவ்விப் பிடித்திருந்தது !’’
பாம்பு தவளையைப் பிடிப்பது சகஜம் ! அதுதான் உலக நீதி !
ஆனால் எத்தகைய வீரம் செறிந்த மண்ணாக இருந்தால் தவளையே பாம்பினைப் பிடிக்கும் ? என்று சொல்லி அந்த இட்த்திலேயே ....
தங்கள் குடியிருப்பினை அமைத்துக் கொண்டனர் ! எம்மூர் முன்னோர் !
உயரமான இட்த்திலிருப்பதால் ஒசரவிளை என்றும், வேளாண்பெருங்குலத்தோர் ஒரே இட்த்தில் சேகரமாயிருப்பதால் குலசேகரபுரம் என்றும் அழைக்கப் பட்ட , இவ்வூரின் தொடக்கத்தில் மேற்கு எல்லையில் குலசேகர நங்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
குலசேகரநங்கை அம்மன் கையில் சூலமுடன் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறாள் !
இத் திருக்கோவிலின் கன்னி மூலையில் கணபதியும், கிழக்கு நோக்கியபடி முருகன்,அய்யப்பன், மேலாங்கோட்டு அம்மன் சந்நிதிகளும், அமைந்துள்ளன !
குலசேகரநங்கை அம்மன் கருவறை முன்மண்டபத்தின் ஜல மூலையில், திருக்கோவிலின் உள்ளேயே திருக்கிணறும் அமைந்துள்ளது ! இங்கிருந்தே அம்மனின் அபிசேக நீர் எடுக்கப்படுகிறது !
குலசேகர நங்கை அம்மன் கருவறையின் வலது புறத்தில் புதிதாய்க் கட்டப்பட்ட உத்ஸவர் அம்மன் மண்டபமும்,அதன் நேரெதிரே தென்திசை நோக்கியபடி காவல் தெய்வமான பைரவரும், வெகு நேர்த்தியாக அருளாட்சி செய்கின்றனர் .
நங்காய் நங்காய் நமோ ! நமோ !
குலசேகர நங்காய் நமோ ! நமோ !
பங்கயச் செல்வி ! நமோ ! நமோ !
No comments:
Post a Comment