குலசேகரபுரத்தின் இயக்குநர் சிகரம் !
*************************************
ஆண்டுகள்தோறும் நடைபெறுகிற நவராத்திரி விழா ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை அன்று, மறைந்த திரு.சண்முகம் பிள்ளை தாத்தா நடத்தும் கலைமகள் விழா !
கலைமகள் விழாவின் சிறப்பு அம்சமே ! இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழின், மூன்றாம் தமிழான நாடகம் நடைபெறுவதுதான் !
அத்தகைய நாடகங்களின், கதை ,வசனம், எழுதி, இயக்கி, குலசேகரபுரத்தின், இளைஞர்களை நடிக்கவும், வைத்தவர் !
பள்ளி ஆசிரியராகத் தன் பணியினைத் தொடங்கியவர்,
ஆசிரியர்
சோதிடம்,
ஆன்மீகம்,
கதாசிரியர்,
நாடகாசிரியர்,
இயக்குநர், என பல் துறைகளிலும்,முத்திரை பதித்த வித்தகர் !
குலசை, வே.தாணு அவர்கள் .
குலசேகரபுரம் புத்தகாலயத்திற்க்கு அடுத்தபடியாக, அதிக புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறவர் !
என் கவிதைகளுக்கும் கூட கருத்துரை வழங்கிய, இனியவர் !
என் கவிதைக் குழந்தையை,
உங்கள் விழித் தரிசனத்திற்க்காக அனுப்பி வைக்கிறேன் !
அது ஆணா ? பெண்ணா ? என்று பார்க்காதீர்கள் !
அது குழந்தைதானா ? என்று பாருங்கள் ! என்கிற என் எழுத்திற்கு,,,,
‘’ அது குழந்தை அல்ல ! எதிர்காலம் சொல்ல வருகிற ஒரு யுகசந்தி’’’
என எழுதி எனை வாழ்த்தியவர் !
நான் அவரின் எழுத்து ஏகலைவன் ?
No comments:
Post a Comment