Monday, 15 April 2013

தேசப்பிதாவே !



ஏ !
தேசப் பிதாவே !
நாங்கள் !
உங்கள் வழியிலேயே,,,
நடக்கிறோம் ?

நீ !
தண்டி யாத்திரை சென்றாய் !
நாங்கள்,
கிண்டி யாத்திரை செல்கிறோம் ?

நீ !
எங்கள்
மருதைக்கு வந்து,
கழனியிலே கலப்பை
பிடித்தவனைப் பார்த்து,,,,
கலங்கிப் போய்,,,,
அரை யாடை உடுத்தவனே !

நாங்கள்,
நீ !
உடுத்த
அரை ஆடைகளையே !
எங்கள்,
தேசீயச் சின்னமாக்கி யிருக்கிறோம் ?

நீ !
சுதந்திரம்,
கிடைத்த பொழுதுகளில் கூட,
கைத்தறியை வளர்க்க
கை ராட்டை நூற்றாயமே ?

இப்போதும்,
நாங்கள்,
கைத்தறி நெய்கிறோம் !
மின்சாரம் இல்லையென்பதால்,,,,,?
அதுவும்,
இலவசங்களுக்காக,,,மட்டுமே !

No comments:

Post a Comment