Tuesday, 18 April 2017

கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்குழுமம்
பல்லடம் தமிழ்ச் சங்கம்
இணைந்து நடத்திய,,,,,,,,,,,,,,
இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரம் ஆண்டுகள் நிறைவு விழாவின் இரண்டாம் பகுதி !



உண்ட மயக்கம் ! தொண்டனுக்கும் உண்டு !
ஆனால்,,,,
திரு.கோமகனார் அழைக்கின்றார் !

நெட்டித் தள்ளுகின்ற ,,,,
அந்த மத்தியான நேரத்துத் தூக்கத்தினை,,
சற்றே பொறும் பிள்ளாய் !,,
என்றபடி தள்ளி வைத்து விட்டு,,,,,,,,,,,,,,,,,
அமர்ந்த போது,,,,,,,,,,,,,,,,
விழா மேடைதனில்,,,,வெள்ளித் திரை நிறுத்தப்பட்டது,,,,,,,,,,,,,,,,,,?
ஆஹா,,,
ம்ம்
திரைப்படம் காட்டப் போகிறார்களோ ?,,ம்ம்,,,ரசிக்கலாம்,,,
ஆண்டாண்டு காலமாய்,,,வாக்களித்து ஏமாந்து போன பின்னும்,,புத்தியில் உறைக்காத,,, திரைப்படம் பார்க்கிற கழக புத்தி மாறாத நிலையினில்,,,,,,,,,,,,,,,,,,?
 சோழர்கால வாழ்விடங்கள் என்ற தலைப்பினில் முனைவர் செல்வகுமார் அவர்கள் பேச வந்தார் !,,,,,,,,,,,,,,,,,,,,,

   பண்டைய தமிழன்,,கடலோடியதனையும்,,,,,அதுவும்,,
அலெக்சாண்டிரியா வரை சென்று வந்த கடல் வழி பற்றியும்,,,பயணியாய் வந்த பெரிப்ளக்ஸ்க்கு முன்னரே தமிழன் கடலோடிய கதையினை,,திரையில் படங்களோடு  சொன்ன போது,,,, தமிழ் வீரம் கொஞ்சம் தலை நிமிரத்தான் செய்தது !
      இரண்டாம் அமர்வினில்,,,இரண்டாவதாய்ப்  உரையாற்ற வந்த பேராசிரியர் கண்ணன் சோழர்கால கட்டிடக் கலை பற்றி பல அரிய புகைப்படங்களை,,,வெள்ளித்திரையில் காட்டி விளக்கினார் !

    ஆதித்த சோழன் காலம்,,,
பராந்தக சோழன் காலம்,,
ராஜராஜன்,,ராஜேந்திரச் சோழன் காலம்,,,,
குலோத்துங்கச்சோழன் காலம்,,,, என வகை பிரித்த போது,,,,,
முத்தரையர் காலத்திய கோவில்களின் தாக்கம் ஆரம்பத்திலிருந்து,,படிப்படியாக,,,உயர்ந்து,,முழுதாக சோழ அடையாளங்கோடு,,,
கலைச் சின்னங்களின்,,கலைச்சிற்பங்களின் உச்சமாக,,,
தஞ்சை பெரிய கோவிலும்,,
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும்,,இருப்பதனை குறிப்பிட்ட போது,,,
எத்தனை மகானுபவர்கள்,,,
வாழ்ந்த பூமியில் பிறந்திருக்கிறோம்,,என்கிற பெருமை,,பூரிக்க வைத்தது,,,நிஜம் தானெனினும்,,,   அதில் எத்தனையெத்தனை கோவில்களையெல்லாம்,,,பாழடைய விட்டு வைத்திருக்கிறோம்,, என்றெண்ணுகையில்,,,,,
நெஞ்சம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது !
     காலையில் எழுந்த சூரியன்,,,,!
மாலைச் சூரியனாய் மாறிக் கொண்டிருந்த போது,,,,,,,,,,,,,,,,,
திரைப்படத்தின் இடையிலே வருவது போன்று,,
தேநீர் இடைவேளையும் வந்தது !
தேநீர் குடித்து விட்டு தொடரலாமென்கிற பொறியாளரின் வலியுறுத்தலில்,,,, பிஸ்கெட்டும்,,,தேநீரும்,,,,,இதமாகத்தானிருந்தது !
     அடுத்து சோழர்களின் சமயப் பொறை பற்றி பேராசிரியர் செந்தலைக் கவுதமன் உரையாற்ற வந்தார் ! பல்லடத்தின் முந்தைய பெயரான ராசராச நல்லூரிலேயிருந்து பேசத்தொடங்குகிறேன் ! என்றதுமே !,,அவை
செந்தலைக் கவுதமன் அவர்களின் வசமானது !

   காலையிலிருந்து,,உரையாற்றிய அனைவரும்,,ராஜராஜன் என்றும்,,அவர் மகன் ராஜேந்திரன் என்றும்,,,,உரையாற்றிய அவைதனில்,,,
 இராசராசன் ! என்றும்,,,இராசேந்திரன் என்றும் உச்சரித்த்து,,,அதனை அவர் உச்சரித்த லாவகம்,,,,அசத்தல்,,,,திராவிடத் தனித்தமிழ் !
    சமணர்களுக்கு,,பெளத்தர்களுக்கு,,,,வைணவர்களுக்கு,,என ராசராசனும்,,ராசேந்திரனும்,,,அளித்த கொடைகள் ! நிவந்தங்கள் ! பற்றி மட்டுமல்ல,,,
 அன்றைய சைவ சமயத்தின் உட்பிரிவுகளாகயிருந்த பாசுபத சைவ மதத்தின் அடிப்படையில் தான், இராசராசன்  தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினான் ! என்ற புதிய தகவலை என் போன்றோர்க்கு அளித்தார் .
 தான் படையெடுத்துச் சென்ற கடாரம் போன்ற நாடுகளில் கூட,,, சமயப் பொறையோடு இராசேந்திரன் நடந்து கொண்டான் ! என்று அறிந்த போது,,,,
எம் தமிழர் ! வீரம்,,
எம் தமிழர் ஈரம் ! அத்தனையும்,,,,,
விழலுக்கு இறைத்த நீராய் மாறிப் போன அவலத்தினையும் மறக்க இயலவில்லை !
 இன்னும்,,இன்னமும்,,கருத்துக்களை அள்ளி இறைப்பாரென்று நினைத்த நிலையினில்,,, அவர் உரையினை நிறைவு செய்த போது,,,,, இன்னும் கொஞ்சம் தமிழ் கேட்கும் ஆவல்,,,நெஞ்சினோரம் இருக்கத்தான் செய்தது !
        மீண்டும் கோமகன் மேடையேறினார் ! கருத்தரங்க அமர்வின் நிறைவுரையாற்றினார் ! அடுத்து விருது வழங்கும் விழா விரைவில் தொடங்கும் ! அதற்கு முன்,,,
 பரத நாட்டியம் ! என்கிற அறிவிப்பினை,,,
நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அறிவிக்க,,,,,
பரத நாட்டியமும் ஆரம்பமானது !
நாட்டியம் நடக்கட்டும்,,,,,,,,,,,,,,,,,,,,
அதுவரை,,நான் கொஞ்சம் இளைப்பாறுகிறேனே ?,,, என்று கோமகன் அவர்கள் இருக்கையில் அமராமல்,,,,,
 மேடையில்  ஆடிய பெண்ணுக்குச் சற்றும் குறையாமல்,,,அரங்கமெங்கும் பரபரவென உலா வந்து கொண்டிருந்தார்,,,,,,,,,,,,,,

சிறப்பு விருந்தினர் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் வருகைக்காக,,,,,,,,,,,,,,,,,,,,,,

அவர் வரும் வரை,,நான் கொஞ்சம் இளைப்பாறுகிறேனே,,,,,,,,,,,,,,,,,,,,,?

தொடரும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


 

   


Monday, 17 April 2017


"ஸ்வஸ்திஸ்ரீ்
திருமகள் போல பெருநிலச் செல்வியுந்
தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி
வேங்கை நாடும் கங்கைபாடியும்
நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும்
கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர
ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்
திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில்
வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை
விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள்
ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்."

        என்று தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு சொல்லும் அருள்மொழி வர்மர் எனும் ராஜராஜ சோழரின் புதல்வர் ,,,,
கங்கை கொண்டவனும்,,
கடாரம் கொண்டவனும்,,,,
உலகிலேயே முதன்முதலில் கப்பல் படை அமைத்தவருமாகிய

      ஸ்ரீ ராஜேந்திர சோழர் அவர்கள் அரியணை ஏறி ஆயிரம் ஆண்டுகள் நிறைவுற்றதனையொட்டி,, முனைவர் ராஜாராம் கோமகன் அவர்கள் ,,கங்கை கொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமம் அமைத்து,,,

              கங்கை கொண்ட சோழ புரத்தினில்,,,,பல்லாண்டுகளுக்குப் பின்,,, கங்கை கொண்ட சோழபுரத்து  திருக்கோவிலுக்கு கும்பாபிக்ஷேகம் நடத்தியதன் தொடர்ச்சியாக,,,,,,,,,,,,,,,,
    
    கங்கை கொண்ட சோழனாகிய ராஜேந்திரரின் புகழ் பரப்பும் பொருட்டு கடந்த ஞாயிறன்று [16-04-2017 ] காலை பல்லடம் வைஸ் திருமண மண்டபத்தில் ,,,பல்லடம் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து ஒரு விழா இனிதே நடைபெற்றது,,,,!
  விழாவினில் மிக மகிழ்வுடன் கலந்து கொண்ட,,,,,,,,,,,,,,,,நான்,,!
என் அனுபவங்களை,,,உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் !,,,,,,,,,,,,,,,

    இனி,,,,
விழா அரங்கு நோக்கி,,,,,,,,,,,,,,,,,,,,
             
      வழக்கம் போல,,காலை பத்து மணிக்கே
சித்திரை மாதத்திய கத்தரி வெயில் ’’நிலாவாகக் ’’ காய்ந்து கொண்டிருந்த பொழுதினில்,,,,,,,,,,,,,,,கோவையிலிருந்து திருப்பூர் செல்லும் பேருந்திலேறி பல்லடம் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி வைஸ் திருமண மண்டபத்தினை நோக்கி,,,
சித்திரை வெயிலினை உள்வாங்கியபடி நடக்கலானேன் !

 வழியெங்கும்,,,,
எழுத்துச்சித்தர் பாலகுமாரன் பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருந்தார் !

   ஒரு இருநூற்றைம்பது நாவல்களுக்கு மேல் எழுதியுள்ள எழுத்தாளருக்கு இத்தனை பெரிய வண்ணபதாகைகள் வைக்குமளவிற்கு அருட்கொடை வழங்கிய அருள்மொழிவர்மரான உடையார் ராஜராஜரை நினைந்த படி,,,,

அவரை வியந்தபடி,,,,சோழம் சோழம் என்று மனக்குறளி காதுகளில் ரீங்கரிக்க,,,,,திருமண மண்டபத்தின் நுழைவாயில் வந்தடைந்தேன்,,,,,!

     அங்காடித் தெருவாகியிருந்தது,,,,,,,,,,,,,,,,
மண்டபத்தின் நூழைவாயில்,,,,,,,,,,,,,,,,,!
விவேகானந்தர் கூட செண்பகப் பூக்களைப் பரப்பி அதன் மேல் அமர்ந்து,,புத்தகம் விற்குமா? என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார் !


    மெல்லக் கடந்தேன்,,,,,,,,,,,,,,,,,
அரங்கத்தின் உள்ளே,,,,,,,,,,,
பிரம்மாண்டமாய் கங்கை கொண்ட சோழபுரத்து சண்டேஸ்வரர் ஓரத்தில் முடிசூடிக் கொண்டிருக்க ,,மறுபுறத்தே பாலகுமாரன் ! அரங்கின் வெளியே எங்கும் முழுதும் காட்டிய பாலகுமாரன் முகம் மட்டும் காட்ட விழாவின் விளம்பரப் பதாகை அழகிய அட்டகாசம் தான்,,,,, !
   சுமார் எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு பின் கும்பாபிசேகம் நடந்ததனை நினைவூட்டவோ ? என்னவோ ? நுழைவாயிலில் , வரவேற்பாளர்கள், புத்தகவிற்பனையாளர்கள் உட்பட அரங்கினில் எண்பத்தி மூன்று பேர்கள் இருக்க,,,,எண்பத்தினான்காவது பேராக,, பொறியாளர் ராஜாராம் கோமகன் விழா மேடையில் ஒலி வாங்கியினைத் தொடுகையில்,,, எண்பத்தியைந்தாவதாய் நானும்,,,மனதுள் சோழம் சோழம் என்றபடி,,,,காலியாய் கிடந்த நாற்காலிகளில் ஒன்றில் ஒன்றினேன் !

     அரங்கின் வெம்மை தாக்க,,
     அழகு முகத்தில் வேர்வை முத்துகள் கோர்க்க,,,,பிசிறில்லாத
     அழகு தமிழில் கங்கை கொண்ட சோழபுரத்தின் பெருமை தொட்டு இணைய முனைவோர்கள் கருத்தரங்கின்  நோக்கவுரையாற்றி,,,,
முனைவர் பூங்குன்றன் அவர்களை ’’சோழர்களும் கொங்கு நாடும்,,,,’’ என்ற தலைப்பினில் உரையாற்ற , ராஜாராம் கோமகன் அவர்கள் அழைத்தார் !
      உருவு கண்டு எள்ளாமை வேண்டாம் ! என்ற வள்ளுவ பாட்டனின் குறளுக்கு பொருள் புரிந்த நேரங்களில் ,,இதுவும் ஒன்று !
     அந்நேரத்தில் தான் ராஜராஜசோழனின் சிவபாதசேகரன் விருதினை பெரவிருக்கிற எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் விழா அரங்கினுள் ,,,,,

    அந்த வயது முதிர்வின் விளைவு ,,
    அந்த மென்னடையில்,,,,,
    அந்த தளர்வினில்,,,, தெரிந்த போதிலும்,,,

    அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்,,, சத்சங்கத்து நண்பர்களின் கைத் தாங்கலுடன் அழகாய் வந்தமர்ந்தார் !
   நாளை நமக்கும் இப்படித்தானோ ? ஒரு கணம்,,,சிந்தை கலைய,,,,
இது !
இந்த தளர்ச்சி !
அவருக்கு மட்டுமல்ல,,
எவருக்கும் வரக்கூடியதுதான்,,,,,என்கிற நிஜம் முகத்திலறைய,,,,,,
அரங்கமே நெகிழ்ந்து எழுந்து நின்று அவரை வரவேற்றது !

   பாலகுமாரனின் வருகையினால் சற்றே நின்ற முனைவர் பூங்குன்றன் அவர்களின் உரை மீண்டும் தொடங்கிற்று !

     ஆம் ! அன்றைய குறுமுனி அகத்தியன் போல அத்தனையும் அறிந்த
   மிகச் சிறப்பான உரை ! ராஜகேசரி பெருவழிப் பாதை முதன்முதலில் அமைந்திருந்ததே கொங்கு நாட்டில் தான் என்பதில் தொடங்கி,,,,,
  கொங்கு சோழர்களின் மணத் தொடர்பு தொட்டு ,,
சோழர் படைதனில் பெரிதும் பேசப்பட்டது ! வலங்கை , இடங்கை, வீரர்கள் தான் !
   ஆனால் கொங்கு நாட்டில் வலங்கை வீர்ர்கள் கிடையாது ! இடங்கை வீர்ர்கள் மட்டும் தான் ! இருந்தனர் ! என்பது போன்ற பல புதிய தகவல்களையும் எடுத்துரைத்தார் !
  பூங்குன்றன் அவர்களின் கருத்துரைக்குப் பின் கேள்வி கேட்கும் நேரத்தில்,,,,
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள்,,,,
‘’ இடங்கை வீரர்கள் யார் ? அவர்கள் பஞ்சமரா ?,,என்று, தான் ஒரு நாவலாசிரியர் எனும் நோக்கில் கேட்க,,,,
 இருக்கலாம் ?
ஆனால்,,
இந்த அவையில், அதனை  உரக்கச் சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை ! என்றவர்,,,தன் சொல்லாடலில்,,அதனை இலாவகமாக அதனைத் தவிர்த்தார் !
    கொங்கு நாட்டில் அமைந்த பெருவழி எங்கிருந்து ஆரம்பித்து 
எங்கே முடிவுற்றது ?
   சூலூர் வெற்றிலைக்காக ரோமானியர்கள் நொய்யலாற்றில் படகோட்டி வந்தார்கள் என்பது நிஜம் தானா? போன்ற ,,என் பிள்ளைக் கேள்விகளுக்கும்,,, அழகாகவே பதிலிறுத்தார் !
     மீண்டும் திரு.கோமகன் அவர்கள் மேடையேறி சோழர்கால ஆவணப் பதிவுகள் பற்றி உரையாற்ற தொல்பொருள் ஆராய்ச்சித்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்ற பின்னரும்,,,,இப்பொழுதும்,,இக்கணமும்,,,தன்னை தொல் பொருள் ஆய்வாளராகவே நினைத்து வாழ்ந்து வருகிற திருமதி பத்மாவதி அவர்களை ’’ சோழர்கால ஆவணப் பதிவுகள் ‘’ என்ற தலைப்பினில் உரையாற்ற அழைத்த போது,,,,,
  வெம்மைக்கு குளிர்ச்சியாக மாங்காய்த் துண்டுகளோடு மல்லித் தளைகளுமிட்ட மோர் வழங்கப்பட்டது,,,,,,
   ஆஹா ! ஆஹா,,அமிர்தம் ! அமிர்தம் என்றபடி,,
குடித்தவர்களில் ,,,,,,
ஒழுகும் மூக்கோடு நானுமொருவன் !,,,,,,,,,,,,,,?

என் பக்கலில் இணைய சகோதரர் வேலுதரன் அவர்கள் ! சற்றே தள்ளி திருமதி சக்தி கணேக்ஷ், ஆதிரை சின்னச்சாமி, காளியப்பன் ஸ்ரீனிவாசன், தென்கொங்கு சதாசிவம், வரிசை கட்டி அமர்ந்திருக்க,,,,

              திருமதி பத்மாவதி அம்மா ! அவர்களின் பிரவாகமானப் பேச்சு !
சோழர்கால ஆவணங்களை,,
ஒலைச்சுவடியாக,,,
சுடுமண்பலகைகளாக,,
செப்பேடுகளாக,,
கல்வெட்டுகளாக,,என வைக்க்படுத்திப் பேசிய போது,,,,,,,
இடையூறாக நின்றது,,,,ஒலி வாங்கியும்,,ஒலி பெருக்கியும் தான்,,,,,,,?
என் செய்ய,,,,,
சில அரிய தகவல்களை அனைவரும் அறியும் படியாகச் சொல்ல நினைக்கையில்,,, விதி இப்படித்தான்,,,
தேடல் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கட்டுமென,,,,,,,,,,,,,,,,,,,,,
சதி செய்யுமாம் ?

 இடையிடையே,,,
நான் பேசுவது கேட்கிறதா ?,,
எனக்கே கேட்கவில்லை ?
உங்களுக்கெப்படிக் கேட்கும் என்றபடி,,,,,,
கேட்கிறதா ? கேட்கிறதா ? என்றபடி,,,,,,
என் ஆரம்பப் பள்ளிக் காலத்து ஆசிரியை பாடம் நடத்துவது போல உரையாடி,,நெஞ்சம் கவர்ந்தார் ! ,,,,

   சோழர் கால நிவந்தங்கள்,,மற்றும் அரசு உதவிகள்,,பற்றியெல்லாம் பேசியவர் ,,,
தமிழுக்காக,,தமிழ் வளர்ச்சிக்காக எந்த சோழ அரசர்களும்,,எந்த விதமான உதவியும்,,,நிதியும்,,வழங்கவில்லை ! என்பதனை வேதனையோடு அல்ல,,
கோபத்தோடு பதிவு செய்த போது,,,,
பாலகுமாரன் உட்பட,,,அரங்கம் அதிர்ந்தது !
    கருத்துரை நிறைவுற்று,,,,
கேள்வி நேரம் எழுந்த போது,,,
சதுவேதி மங்கலம் !
பிரமதேயம்,,
தேவதானம்,,
இறையிலி நிலங்கள்,,,, பற்றிய பிள்ளைக் கேள்விகளுக்கும்,,, பொறுமையாய்ப் பதிலிறுத்த பாங்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    பத்மாவதி அம்மாவின் பேச்சினிடையே,, திரு.பாலகுமாரன் அவர்கள் சொன்னது போல,,,உடையார், கங்கை கொண்ட சோழன் ஆகிய நாவல்களுக்கான பல்வேறு விக்ஷயங்களை சம்பவங்களை கல்வெட்டு ஆதாரங்களுடன்,,,எனக்குத் தந்தவர் பத்மாவதி அம்மையார் தான் ’’ என்று கூறியது போல,,,
நிறைகுடம் !
நிறைகுடம் தான் ! வாழ்த்துக்கள் அம்மையே !

    ஆயின்,,
பத்மாவதி அம்மா அவர்களுக்கு பிள்ளை !
 என்  வேண்டுகோள் !
      எழுத்துச்சித்தர் அவர்கள் சொன்னது போல,,நீங்கள் சென்னை சென்று ,, நீங்கள்  சுற்றிச் சுற்றி வந்து பேசினாலும்,,,,,
       எப்பக்கம் திரும்பிப் பேசினாலும்,,உங்கள் குரல் கேட்கிற,,அந்த ஒலிவாங்கியினை  ,,, திரு.பாலகுமாரன் அவர்கள் வாங்கித் தருகிற அந்த மைக்கினை,,
நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்,,,,
பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும் !
உங்கள் குரல்,,அனைத்தும்,,
எங்கள் மனங்களில் ஆவணப்படுத்தப் பட வேண்டுமெனில்,,,,

இது தேவை !
இது காலத்தின் கட்டாயம் !
 செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படுமென்ற ,,
பழமொழியினைப் புறந்தள்ளி,,,

மதியம் மணி ஒன்றினைத் தாண்டி விட்டது,,,
ஆதலின்,,
ஆதலின்,,அடுத்த அமர்வு இரண்டு மணிக்கு ஆரம்பிக்க வேண்டும்,,
ஆதலின்,,ஆதலின்,,,

முதலில்,,அனைவரும்,,உணவருந்தச் செல்வோம் ! வாருங்கள் என்றபடி திரு.இராஜாராம் கோமகன் அழைக்க,,,,,,,,,,,,,,

சுவையான எலுமிச்சை சாதம் !
தேங்காய் சாதம் !
தயிர் சாதம் !
மாங்காய் ஊறுகாய் !
கொத்தமல்லித் துவையல்,,அப்பளம் ! ,,,,,,
அத்தனையினையும்,,,,
ஒன்றாய் ஏற்றுக் கொண்டது,,,,
வந்திருந்தோர் அனைவரின் வயிறும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,!

ஆளுக்கொரு தட்டினை ஏந்தியபடி நின்றும் ,,அமர்ந்தபடியும்,,,,உண்டு கொண்டிருக்கையில்,,,,,,,,,,,,


சென்னையிலிருந்து இந்நிகழ்விற்கு வந்திருந்த நண்பர் ஒருவர் , பத்மாவதி,அம்மா அவர்களுடனும்,,கோமகன் அவர்களுடனும்,,,,,சாப்பிட விடாமல்,,கேள்விகளால்த் துளைத்துக் கொண்டிருந்த போது,,,,, தன் புன்முறுவல் முகம் மாறாமல் பதிலளித்துக் கொண்டிருந்தார் கோமகன் !
        என் விழிகள் சுழலுகையில்,,, சற்று,,,தூரத்தில்,,,
இப்பொழுதும்,,எப்பொழுதும்...சோழ தேசத்தை மட்டும் அல்ல,,,,பழங்கால கோவில்களைச் சுற்றிக் கொண்டிருக்கிற இனியவன் சசிதரன் பச்சை வண்ண சட்டையுடன்,,,,இளந்துருக்கியர் என்றொரு காலத்தில் சொல்லப் பட்ட குறுந்தாடியுடன்,,,,நின்று உணவருந்திக் கொண்டிருந்தார் !
     வாழ்த்த நினைத்தது !
என் நெஞ்சு ! பக்கலில் சென்று,, சசி என்றபடி,,கட்டி அணைத்தேன் ! அந்த மெல்லிய கெச்சலுடம்பிணை,,,,

 வாழ்க ! சோழம் ! வாழ்க சோழம் ! என்றபடி,,,,,,,,,,,,,,,,,,,
என்னவொரு பண்பு !
என்னவொரு பணிவு !
பெருவுடையார் படைத்த ராஜராஜரின் நாமம் சொல்கிற பிள்ளைகளுக்கெல்லாம்,,இப்படியொரு குணம் வந்து விடுமோ ?,,,,,,,,



தொடரும்,,,,,,,,,,,,,,,,,