கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்குழுமம்
பல்லடம் தமிழ்ச் சங்கம்
இணைந்து நடத்திய,,,,,,,,,,,,,,
இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரம் ஆண்டுகள் நிறைவு விழாவின் இரண்டாம் பகுதி !
உண்ட மயக்கம் !
தொண்டனுக்கும் உண்டு !
ஆனால்,,,,
திரு.கோமகனார்
அழைக்கின்றார் !
நெட்டித்
தள்ளுகின்ற ,,,,
அந்த மத்தியான
நேரத்துத் தூக்கத்தினை,,
சற்றே பொறும்
பிள்ளாய் !,,
என்றபடி தள்ளி
வைத்து விட்டு,,,,,,,,,,,,,,,,,
அமர்ந்த
போது,,,,,,,,,,,,,,,,
விழா மேடைதனில்,,,,வெள்ளித்
திரை நிறுத்தப்பட்டது,,,,,,,,,,,,,,,,,,?
ஆஹா,,,
ம்ம்
திரைப்படம்
காட்டப் போகிறார்களோ ?,,ம்ம்,,,ரசிக்கலாம்,,,
ஆண்டாண்டு
காலமாய்,,,வாக்களித்து ஏமாந்து போன பின்னும்,,புத்தியில் உறைக்காத,,, திரைப்படம் பார்க்கிற கழக புத்தி மாறாத நிலையினில்,,,,,,,,,,,,,,,,,,?
சோழர்கால வாழ்விடங்கள் என்ற தலைப்பினில் முனைவர்
செல்வகுமார் அவர்கள் பேச வந்தார் !,,,,,,,,,,,,,,,,,,,,,
பண்டைய தமிழன்,,கடலோடியதனையும்,,,,,அதுவும்,,
அலெக்சாண்டிரியா
வரை சென்று வந்த கடல் வழி பற்றியும்,,,பயணியாய் வந்த பெரிப்ளக்ஸ்க்கு முன்னரே
தமிழன் கடலோடிய கதையினை,,திரையில் படங்களோடு
சொன்ன போது,,,, தமிழ் வீரம் கொஞ்சம் தலை நிமிரத்தான் செய்தது !
இரண்டாம் அமர்வினில்,,,இரண்டாவதாய்ப் உரையாற்ற வந்த பேராசிரியர் கண்ணன் சோழர்கால
கட்டிடக் கலை பற்றி பல அரிய புகைப்படங்களை,,,வெள்ளித்திரையில் காட்டி விளக்கினார்
!
ஆதித்த சோழன் காலம்,,,
பராந்தக சோழன்
காலம்,,
ராஜராஜன்,,ராஜேந்திரச்
சோழன் காலம்,,,,
குலோத்துங்கச்சோழன்
காலம்,,,, என வகை பிரித்த போது,,,,,
முத்தரையர்
காலத்திய கோவில்களின் தாக்கம் ஆரம்பத்திலிருந்து,,படிப்படியாக,,,உயர்ந்து,,முழுதாக
சோழ அடையாளங்கோடு,,,
கலைச்
சின்னங்களின்,,கலைச்சிற்பங்களின் உச்சமாக,,,
தஞ்சை பெரிய
கோவிலும்,,
கங்கை கொண்ட
சோழபுரம் கோவிலும்,,இருப்பதனை குறிப்பிட்ட போது,,,
எத்தனை
மகானுபவர்கள்,,,
வாழ்ந்த
பூமியில் பிறந்திருக்கிறோம்,,என்கிற பெருமை,,பூரிக்க வைத்தது,,,நிஜம் தானெனினும்,,, அதில் எத்தனையெத்தனை
கோவில்களையெல்லாம்,,,பாழடைய விட்டு வைத்திருக்கிறோம்,, என்றெண்ணுகையில்,,,,,
நெஞ்சம்
கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது !
காலையில் எழுந்த சூரியன்,,,,!
மாலைச்
சூரியனாய் மாறிக் கொண்டிருந்த போது,,,,,,,,,,,,,,,,,
திரைப்படத்தின்
இடையிலே வருவது போன்று,,
தேநீர்
இடைவேளையும் வந்தது !
தேநீர்
குடித்து விட்டு தொடரலாமென்கிற பொறியாளரின் வலியுறுத்தலில்,,,,
பிஸ்கெட்டும்,,,தேநீரும்,,,,,இதமாகத்தானிருந்தது !
அடுத்து சோழர்களின் சமயப் பொறை பற்றி
பேராசிரியர் செந்தலைக் கவுதமன் உரையாற்ற வந்தார் ! பல்லடத்தின் முந்தைய பெயரான
ராசராச நல்லூரிலேயிருந்து பேசத்தொடங்குகிறேன் ! என்றதுமே !,,அவை
செந்தலைக்
கவுதமன் அவர்களின் வசமானது !
காலையிலிருந்து,,உரையாற்றிய
அனைவரும்,,ராஜராஜன் என்றும்,,அவர் மகன் ராஜேந்திரன் என்றும்,,,,உரையாற்றிய
அவைதனில்,,,
இராசராசன் ! என்றும்,,,இராசேந்திரன் என்றும்
உச்சரித்த்து,,,அதனை அவர் உச்சரித்த லாவகம்,,,,அசத்தல்,,,,திராவிடத் தனித்தமிழ் !
சமணர்களுக்கு,,பெளத்தர்களுக்கு,,,,வைணவர்களுக்கு,,என
ராசராசனும்,,ராசேந்திரனும்,,,அளித்த கொடைகள் ! நிவந்தங்கள் ! பற்றி மட்டுமல்ல,,,
அன்றைய சைவ சமயத்தின் உட்பிரிவுகளாகயிருந்த
பாசுபத சைவ மதத்தின் அடிப்படையில் தான், இராசராசன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினான் ! என்ற புதிய
தகவலை என் போன்றோர்க்கு அளித்தார் .
தான் படையெடுத்துச் சென்ற கடாரம் போன்ற
நாடுகளில் கூட,,, சமயப் பொறையோடு இராசேந்திரன் நடந்து கொண்டான் ! என்று அறிந்த
போது,,,,
எம் தமிழர் !
வீரம்,,
எம் தமிழர்
ஈரம் ! அத்தனையும்,,,,,
விழலுக்கு
இறைத்த நீராய் மாறிப் போன அவலத்தினையும் மறக்க இயலவில்லை !
இன்னும்,,இன்னமும்,,கருத்துக்களை அள்ளி
இறைப்பாரென்று நினைத்த நிலையினில்,,, அவர் உரையினை நிறைவு செய்த போது,,,,, இன்னும்
கொஞ்சம் தமிழ் கேட்கும் ஆவல்,,,நெஞ்சினோரம் இருக்கத்தான் செய்தது !
மீண்டும் கோமகன் மேடையேறினார் !
கருத்தரங்க அமர்வின் நிறைவுரையாற்றினார் ! அடுத்து விருது வழங்கும் விழா விரைவில்
தொடங்கும் ! அதற்கு முன்,,,
பரத நாட்டியம் ! என்கிற அறிவிப்பினை,,,
நிகழ்ச்சித்
தொகுப்பாளர்கள் அறிவிக்க,,,,,
பரத
நாட்டியமும் ஆரம்பமானது !
நாட்டியம்
நடக்கட்டும்,,,,,,,,,,,,,,,,,,,,
அதுவரை,,நான்
கொஞ்சம் இளைப்பாறுகிறேனே ?,,, என்று கோமகன் அவர்கள் இருக்கையில் அமராமல்,,,,,
மேடையில்
ஆடிய பெண்ணுக்குச் சற்றும் குறையாமல்,,,அரங்கமெங்கும் பரபரவென உலா வந்து
கொண்டிருந்தார்,,,,,,,,,,,,,,
சிறப்பு
விருந்தினர் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் வருகைக்காக,,,,,,,,,,,,,,,,,,,,,,
அவர் வரும்
வரை,,நான் கொஞ்சம் இளைப்பாறுகிறேனே,,,,,,,,,,,,,,,,,,,,,?
தொடரும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment