காவிரிக்கரை அனல் தகித்தது !
ஒரு காலத்தில்,
கரை புரண்டோடிய காவிரி,,,,
குறுகி,சுருங்கி,,,தமிழக நகரங்களின் பேராறுகள் எல்லாம்,,,
அந்தந்த நகரங்களின் சாக்கடைகளாய்,,,மாறியது போல,,,,
சிராப்பள்ளி நகரத்தின் கழிவு நீர் ஓடையாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறது,,,,?
,காவிரி,,,
காவிரியில்,,முங்கி குளிக்கணும்,,,
காவிரியில்,நீந்திக் களிக்கனுமென்கிற நினைப்புகளையெல்லாம்,,,,கனவுகளாய்த் தேக்கி வைத்து விட்டு, காலை பத்தரை மணிக்கே, சுட்டெரிக்கிற வெயிலுடன்,,,,
மரங்களில்லா சிராப்பள்ளியிலிருந்து,,,,ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்திலேறி,,,திருவானைக்காவில்,,இறங்கினேன்,
விரைந்து நடந்தேன்,,,,
நமச்சிவாய என்றது ராஜகோபுரம் !
பஞ்சபூதத்தலங்களுள் நீர்த்தலம்,,,!
ஜம்பு என்கிற வெண்நாவல் மரத்தடியில் ,வீற்றிருக்கிற ஈசன் ,,
சிலந்தியும்,,யானையும்,,,வழிபட்ட தலம்,,,
முன்பொரு காலத்தில்,,,
ஜம்புகேஸ்வரர் இருக்கும் கருவறையைச் சுற்றிலும்,,நீரோடிக் கொண்டிருக்குமாம்,,,
இந்த வெயிலுக்கு,,
இதமாய்,,
குளிர்ச்சியாய்,,,,அவனைக் கண்டு வருவோம்,,,!
ஊராரிடமும்,,
உறவுகளிடமும்,,,
சொல்ல முடியாத எம் சோகங்களை எல்லாம்,,,
அவன் தான், தேமே என்று கேட்டுக் கொள்வான் ?
மற்றவர் போல,,,
குறுக்கே பேச மாட்டான் ?
செய்தது குற்றமென,
குறை கண்டு பிடிக்க மாட்டான் ?
மனம் வருந்தச் செய்ய மாட்டான் ?
இதையெல்லாவற்றையும்,விட,,,முக்கியம்,,,
அவன் கல்லாய் இருப்பதனால்,,,
பேசவும், மாட்டான்,,,
ஆனால்,,,
அவன், !
தன் தலையிலுள்ள,,,பூவினை விழச்செய்து,,,
அல்லது,,,
அர்ச்சகர் , மூலம், அவனுக்கு மட்டும்,,,வாசமுள்ள பூவினைக் கொடுக்கச் செய்து,,,
குற்றமெனில்,,
கால் தடுக்க வைத்து,,,
தடுமாற வைத்து,,,
கூட்ட நெரிசலில்,,,சிக்க வைத்து,,
குறிப்பால் உணர்த்துவான்,,,!
அவன்
ஏகன் !
அநேகன் ! அவன்,,,
பஞ்ச பூதத்தலத்தின்,,,
முதற்கோபுரம் தாண்டி,,அகண்ட தெருக்களைத்தாண்டி,,,
தேர் நிலை , அருகேயுள்ள மண்டபங்கள் கண்டு ,,,
வியந்து,,,வருந்தி,,,
தாமரைப் பூக்கள் வாங்கிச்சென்றால் தான்,,,,?
உங்கள் காலணிகளை,,
இங்கே,,இவ்விடத்திலே விட்டுச் சென்றால் தான்,, ?
நெய் தீபமென்கிற பெயரில்,விற்கிற ,டால்டா தீபம் வாங்கிச் சென்றால் தான்,,
உங்களுக்குப் புண்ணியம் கிடைக்குமென்கிற குரல்களைப் புறந்தள்ளியபடியே,,,
நடந்தவனின் கண்ணில்,,,
கோபுர வாயில் அருகே,,,
ஒரு மனிதன்,,!
தன் தலையினை இடக்கையால்,,பிடித்தபடி,,,
வலதுகையால்,,கழுத்தினை வாள் கொண்டு அறுத்துக் கொண்டிருந்த, சிலை கண்டேன்,,,!
ஐயனே !
நீர்
எக்காலத்தவரோ ? அறிந்தேனில்லை,,,
நீர்,,
இந்நாட்டினை ஆண்ட மன்னருக்காக,,
உம் கழுத்தரிந்து கொண்டீரோ ?
எவர் பொருட்டு,,
இச்செயல் செய்தீரோ ? அறிந்தேனில்லை,,,?
ஆனால்,,
நல்ல செயல் ஒன்றுக்காய்த்
தன் தலை கொடுக்கத் துணிந்த மக்கள் வாழ்ந்த பூமி இந்த பரத கண்டம் என்பதனை அறிந்திருக்கிறேன்.
உம்மை வணங்குகிறேன் !
என்றபடி,,,
குனிந்து வணங்குகையில்,,
என் பின்னால்,,நவகண்டத்தாரை மறைத்தபடி இளநீர் விற்றுக் கொண்டிருந்தவர் கையில் உள்ள இளநீர் வெட்டும் கத்தி,,,
ஒருகணம்,,
என் கண்ணில் பட்டு மறைந்தது,,,,?
பயம்,,,
என் கண்ணில்,,?
இளநீர் வெட்டுபவர் கண்ணில் புன்னகை,,,?
வேர்த்துக் கொட்டும்,,,
உடலுடன்,,,கோவிலின் வாசலில் உள்ள ,,
மெட்டல் டிடெக்டரைக் கடந்தேன்,,,
நான்கைந்து அண்டாக்கள் நிறைய மோரினை வைத்தபடி
இருவர் , பக்தர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தனர்
ஒரு குவளை வாங்கிக் குடிக்கச் சொல்லியது,,,வேர்த்து ஊற்றும்,,,உடல்,,,
கரம்,,
நீட்ட யோசித்துக் கொண்டிருந்த,,
என் கரங்களில்,,மோர் குவளை,,,,,!
தேர்தலில் யார் ஜெயிப்பார்களென்று வாக்களித்தவர்களிடமே,,’ ’எக்ஸிட் போல்’’ திணிக்கப்பட்டதைப் போல,,,
மோர்க்குவளை,,,
என் கரங்களில்,,திணிக்கப்பட்டது,,!
என்னென்னவோ ? மிதக்கிறதே,,,
பச்சை மிளகாயோ ?
கருவேப்பிலையோ ?
பிள்ளையின்,,புத்தி,,
பிள்ளை மாதிரியே,,,? வேலை செய்தது,,,,!
சிறிது சிறிதாய் , துண்டுகளாய்,,,அரிந்த, வெள்ளரிக்காய்,,மாங்காய்,,,
மல்லித்தத் தழையிட்ட,,,மோர்,,,,!
ஆஹா,,,
அடிக்கிற வெயிலுக்கு,,
இதுதான்,,
தேவாமிர்தமோ ?
மீண்டும் ஒரு குவளை,,,?
கேட்டது,,உடல்,,
வேண்டாம்,,பிள்ளாய்,,,
உன்னைப் போல,,,அடுத்தவர்களும்,,வருவார்கள் தானே ?
அவர்களுக்கும்,,
இந்த தேவாமிர்தம்,,வேண்டும் தானே ?
என்றது மனசு,,,
பிள்ளையின் மனசு ஜெயித்தது !
இடது புறம்,,,
உயர்ந்த மண்டபங்கள்,,,
வலது புறம்,,
நீரில்லாத தீர்த்தக்குளம் ?
இரண்டுமே இரும்புக் கம்பி அளிகளுக்குள் சிறைபட்டுக் கிடந்தது,,,,,
மூத்தபிள்ளை[விநாயகர்]யும்,,
இளைய பிள்ளை[முருகர்]யும்,,
இந்த பிள்ளையை
வரவேற்பது போல,,
கோபுர வாசலின் இருபுறமும்,,சிறு கோவில்களில்
நின்று கொண்டிருந்தார்கள்,,
அம்மையையும்,,
அப்பனையும்,,
பார்த்து வருகிறேன்,,,,
நீங்கள் தான்,,வீதிக்கு வீதி காட்சி கொடுக்கிறீர்களே?
ஆதலின்,,அவசரம்,,, என்றபடி,,,
பெருங்கோவிலுக்குள் வேகமாய் நுழைந்தேன்,,,,
ஆஹா,,
நீள் மண்டபம்,,,!
பொற் கொடி மரம்,,,
கொடி மரத்தின் முன் பலி பீடம்,,,
அதற்கும்,,முன்,,
எனக்குப் பிடித்த நந்தி தேவர் !
இவை
அனைத்தையும்
சூழ்ந்தாற்போல,,,
நான்கு பெருந்தூண்கள்,,,
அப் பெருந்தூண்களில்,,,
அம்மையப்பன்,,தம்பதியராய்
நின்றும்,,அமர்ந்தும்,,
ஆஹா,,,
சிற்பியின் கலை வடிவங்கள்,,,
தூண்களில்,,
தேவதைகள்,,கொடிப் பூக்கள்,,,
நீள் வரிகள்,,
அணிகலன்கள்,,
ஒன்றா ? இரண்டா ?
ஓராயிரம் உண்டுமே,,,,!
அத்தனையும் சொல்ல,,,, இப்பக்கம் போதாது,,,
நேரில் கண்டாலன்றி,,,
அதனை உணர வைப்பதென்பது ? எங்ஙனம் ?
மெல்ல,,
வெண் நாவலடியானைப் பார்க்கச் சென்றேன் !
அவன்!
வாயிற் கதவுகள்,,சாத்தியிருந்தன,,,
உட்பிராகாரம் வலம் வந்தேன் !
வெண்நாவல் மர நிழலில் கருவறையில்,,,
தண்ணீரில் பாதம் நனைக்க அமர்ந்திருக்கிறவனைப் பார்க்க முடியாதோ ?
ஏன் ?
ஏன் ?
கேள்வி எழுந்தது,,,,,
யாரிடம்,,கேட்பது ?
எவர் பதில் சொல்லுவார் ?
ஏன் ? அடுத்தவரிடம் கேட்பது ?
அவனிடமே கேட்டுவிட்டாலென்ன ?
நான்,
வரும் போதுதானா ?
நீர் கதவடைத்துக் கொண்டிருக்க வேண்டும் ?
இது தகுமோ ? சிவனே,,,
அடேய் பிள்ளாய்,,,
நீ நினைப்பது போல இல்லையடா ?
நேரமென்ன இப்பொழுது பார்த்தாயா ?
பசிக்கிறதடா ?
பூசனை செய்கிறவரைப் பார்த்தேன்,,,,
நீர்,
என்னை முறைக்காதிரும்,,,
உமக்கு மதிய உணவு,,,
உம் மனையாள்,,
அகிலாண்டேஸ்வரி அம்மையின் கையால் தான்,,,
என்பது உமக்குத் தெரியும் தானே ? என்கிறார்,,,,
நானென்ன செய்யட்டும்,,? சொல்,,,பிள்ளாய்,,,
அதற்காக,
கதவைச் சாத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பது கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லையா ?
அடேய் பிள்ளாய்,,,
பக்தர்கள்,,
நீங்கள் பண்ணும் தொல்லையும்,,தொந்தரவும்,,
தாங்க முடியவில்லையடா ?
அப்படியென்ன ?
செய்து விட்டோம் ?
நாங்கள் ?
இரண்டு வெற்றிலை, பாக்கு, பழம்,,,
தேங்காய் கூட வேண்டாமடா ? விலை அதிகம்,,
ஒரு முழம் பூ ! கையோடு வாங்கி வந்து,,,
வணங்கினால் கூட பரவாயில்லை,,,
ஆனால்,,
நீங்களென்ன செய்கிறீர்கள்,,,
பூசனை செய்பவரின் கையில்,,,ஒற்றை நோட்டினை நீட்டி,,,
தன் பெயரில் ஆரம்பித்து,,,
பாட்டன்,பாட்டி,,காதலன்,காதலி,,என ஆரம்பித்து
பிறந்த குழந்தை,,,இல்லையில்லை,,
பிறக்கப் போகிற குழந்தைக்கும்,,கூட,,,அர்ச்சனை செய்ய வைத்து,,,
பூசனை செய்பவரோ ?
கையிலே,,
நோட்டினைப் பார்த்த குதூகலத்திலே,,
என் கழுத்து மாலையைக் கூடப் பற்றிப் பறித்து,,உங்களுக்கு இட்டு,,,
அத்தனைப் பேர்களையும்,,
அறிந்திருக்கிற,,
எனக்கே அலுத்துப் போகிறதடா ? பிள்ளாய்,,,
கூடவே,,
பசி மயக்கம்,,வேறா ?
பசி காதை அடைக்கிறதடா ?
ஏன் ?
உமக்குப் பூசனை செய்பவரிடம் சொல்லி விரைந்து உணவு கொண்டு வரச் சொல்வதுதானே ?
சொன்னேனடா ?
சொன்னேன்,,!
அதற்கு,,
என்ன சொன்னார்த் தெரியுமா ?
சற்ருப் பொறுமய்யா,,, பொறும்,,
நீர் அரண்மனையின் முன்னால் வீற்றிருக்கிறீர் !
ஆனால்,,,
அம்மையோ ?
இரண்டு சுற்றுத் தள்ளி,,, அல்லவா ? இருக்கிறார்கள்,,,!
அதுவும்,,,,
உம்மைப் பார்க்க ,,
உமக்கு, உணவு படைக்க வரும் போது,,,
யானை முன்னே வர,,
மேள, தாளங்களுடன்,,,
அவளும்,,பட்டுடுத்தி,,,அலங்கரித்தல்லவா ? வர வேண்டும்,,,
வரும்,,வரும்,,,
அதுவரை,,
அமைதியாக இரும்,,
நான் போய்,,
உணவு அருந்தி விட்டு வருகிறேனென்று சொல்லியபடி,,
கதவைச் சாத்தி விட்டுச் சென்றிருக்கிறாரடா,,,?
எல்லாம்,,
என் நேரம் ? சிவனே,,
என் நேரமும்,,அப்படித்தானடா ? பிள்ளாய்,,
அதுசரி,,
அப்படியானால்,,,
இப்பொழுது,,
கதவைத் திறந்து, காட்சி கொடுக்க மாட்டீர் ? அப்படித்தானே ?
ம்ம்ம்,,,
என்ன இழுக்கிறீர்,,
ஒன்றுமில்லையடா,,,பிள்ளாய்,,,
இனி,,
உம்மிடம்,,பேசிப் பிரயோஜனமில்லை,,,
அங்கே போய்ப் பேசிக் கொள்கிறேன்,,,,
நீ,,
இதைத்தானடா ? செய்வாய் ?
எனக்குத் தெரியுமடா,,,பிள்ளாய்,,,
அப்பனே !
உமக்குப் பசிப்பது போல,,
எனக்கும்,,
பசிக்குமில்லே,,,,
அதான்,,
உம்மிடம் பேசிக் கொண்டிருந்ததில்,,,,
எனக்கும்,,வயிற்று மணி அடித்து விட்டது,,,
வருகிறேன்,,ஈசரே,,,
அடேய்,,பிள்ளாய்,,
அவளிடம்,,பேசும் போது,,,,
கொஞ்சம்,,அமைதியாகப் பேசு,,,,
அவள் அன்பானவள் தான்,,,
ஆனால்,,
கூட கொஞ்சம் கோபக்காரியும்,,கூடப் பார்த்துப் பேசடா,,,
கட்டியவன்,,
நீர்
மனையாளுக்குப் பயப்பட வேண்டும்,,?
அம்மாவிடம் பேச,,
நான் ஏன் பயப்பட வேண்டும்,,,?
அப்புறம்,,,
அப்படியே,,ஏதேனும்,,நடந்து விட்டால்,,,?
நீர் எதற்கு இருக்கிறீர்,,
சமாளித்து விட மாட்டீரா ? அப்பனே ! சிவனே !
சென்று வா !
வென்று வா ! பிள்ளாய்,,,,
நான்,,
இந்த வெண்நாவல் மர நிழலில்,,, காத்திருக்கிறேன்,,
அன்னைக்காகவும்,,,