Tuesday, 23 July 2019




நம் புகலே எனவந்த நந்தகுல மானிடர்க்கும்,
நம்புகலே என நின்ற நந்தகுல கோக்களுக்கும்,
நம் புகலிடம் தான் இதுவென்று ஒற்றைவிரல் நீட்டி,
நம்புகலிடந் தனைக்காட்டிக் கோவர்த்தனந்தூக்கி,

நின்றவனே ! நந்தகுல மாதவனே ! நெடுமாலாய்
நின்றவனே ! ஓரைந்து இல்லங்கேட்ட தூதுவனே ! சாரதியாய்
நின்றவனே ! துரியரினமழித்த மாலவனே ! திருமாலாய்
நின்றவனே ! பீக்ஷ்ம, கர்ணனுக்கும் பெருந்திருக்காட்சி தந்த கோவிந்தா !

உனைச் சூழ்ந்த கோகுலத்தார்க்கு கண்ணன்!  ஆனாய் !
உனைச் சூழ்ந்த கோபியர்க்கு கிருக்ஷ்ணன்!  ஆனாய் !
உனைச் சூழ்ந்த கோக்களிக்கோ கோவிந்தன் ! ஆனாய் !
உனைச் சுமந்த கோவினை, நீ சுமக்க ! என்னவானாய் ?