நம் புகலே
எனவந்த நந்தகுல மானிடர்க்கும்,
நம்புகலே
என நின்ற நந்தகுல கோக்களுக்கும்,
நம் புகலிடம்
தான் இதுவென்று ஒற்றைவிரல் நீட்டி,
நம்புகலிடந்
தனைக்காட்டிக் கோவர்த்தனந்தூக்கி,
நின்றவனே
! நந்தகுல மாதவனே ! நெடுமாலாய்
நின்றவனே
! ஓரைந்து இல்லங்கேட்ட தூதுவனே ! சாரதியாய்
நின்றவனே
! துரியரினமழித்த மாலவனே ! திருமாலாய்
நின்றவனே
! பீக்ஷ்ம, கர்ணனுக்கும் பெருந்திருக்காட்சி தந்த கோவிந்தா !
உனைச் சூழ்ந்த
கோகுலத்தார்க்கு கண்ணன்! ஆனாய் !
உனைச் சூழ்ந்த
கோபியர்க்கு கிருக்ஷ்ணன்! ஆனாய் !
உனைச் சூழ்ந்த
கோக்களிக்கோ கோவிந்தன் ! ஆனாய் !
உனைச் சுமந்த
கோவினை, நீ சுமக்க ! என்னவானாய் ?
No comments:
Post a Comment