அதி காலையில்
,,,
மழைத்துளிகளுடன்,,மப்பும்,மந்தாரமுமாக
இருந்த இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குளித்து,,,,,
மேலெல்லாம்
அரிக்க,,,, இருபத்தியொரு தீர்த்தங்களிலும்,,,,நீராடி,,,,,!?
நீராடினாயா
? பிள்ளை,,,
இல்லை,, இல்லை,,,
நனைந்து,,,,,முடித்து ராமநாதரை தரிசித்து விட்டு வெளி வருகையில்,,,, பன்னிரண்டு மணி வெயில் தகித்தது.
பக்கத்தில்
உள்ள கோவில்களுக்கு செல்லலாமென்ற முடிவில் ஆட்டோ ஏறி ஸ்ரீராமர் பாதம் இருக்குமிடம்
சென்றோம்,,,
செருப்பினை ஆட்டோவிலேயே விட்டுச்செல்லுங்கள்,,,,,
குரங்குகள் தூக்கிச் சென்றுவிடுமென்ற அறிவுறுத்தலில்,,, வெறும் கால்களில் நடந்த போது,,,,
கால் தகித்தது,,,,
உயர கட்டிடம்,,,,
ஆல, அரச மரங்களின்
நிழல் கொஞ்சம் இருக்க,,,,
படிக்கட்டுகள்
உயர்ந்திருந்தன,,,,,
படிக்கட்டுகளின்
இரு புறத்திலும்,,,துவார பாலகர்கள் என இருவர்
!
ஏறும் வழியில்
வலது பக்கம் இருந்தவருக்கு வலதுகை இல்லை,,,, இடது கையினால்,,,, அவ்வப்போது பாஞ்சஜன்யமென
சங்கெடுத்து ஊதிக்கொண்டிருந்தார்…
இடது கை பக்கம்,,,
சற்றே அஜானுபாகுவாய்,,,தளர்ந்த முகத்துடன்,,,,, படிக்கட்டு சுவரில் தலை சாய்த்தபடி,,
அவ்வப்போது கை நீட்டிக் கொண்டிருந்தார்…
வழக்கம் போலவே
மனசு குறு குறுத்தது,,,,,
சில்லறை காசுகள்
தேடி,,, சில்லறை இல்லை,,,என்று முணு முணுத்தபடி,,,,,,?
அதில் ஒரு
ரூபாய் எடுத்துப் போட்டபடி,,, படிக்கட்டுகளேறினேன்,,,,
இருந்தா போட்டிருப்பியா
? மனசு கேட்டது,,,கஞ்சன் மனசாட்சி கெக்கலித்தது,,,,
பொய் சொல்லக்
கூடாது,,,, குரல் கேட்டது,,,,
யாரது,,,,?
மனசாட்சியா ?
அடேய் பிள்ளாய்,,,,,,,
பொய் சொல்லக்
கூடாதென நான் சொல்லுவேனாடா ?,,,,,
பொய்களிலே
தானே,,,,? சகடம் ஓடிக் கொண்டிருக்கிறது,,,,,!
என்பதனை அறியாதவனா ? நான்,,,,,
பொய் மட்டும்
சொல்லவே கூடாது,,,,, மீண்டும் குரல் கேட்டது,,,,,
படிக்கட்டுகளில்
மேலேறிக் கொண்டிருந்த உறவுகள் சொல்லியிருக்குமோ ?
அவர்களோ
?
மூச்சு வாங்கியபடி,
படி ஏறிக் கொண்டிருந்தார்கள்
? இல்லை,,,, அவர்களில்லை,,,,
பின்னே,,,
திரும்பிப் பார்த்தேன்,,,,,
அந்த அஜானு
பாகுவான மனிதர் தான்,,,, !
படிக்கட்டு
ஏறினேன்,,,,,
ராமர்,,,லங்காபுரிக்குப்
போக,,,,இங்கே இருந்து தான்,,,,,, வானர சேனைகளுடன் கூட்டம் போட்டு கலந்தாலோசித்தார்,,,
இங்கே போட்டோ
எடுக்கக் கூடாது,,,,
வெளிய போர்டு
வச்சிருக்குப் பாருங்க,,,,
ஸ்ரீராமச்
சந்திர மூர்த்தியோட பாதம்,,,, நேரே நிக்காதீங்கோ,,,,
செல் போனை
உள்ளே வையுங்கோ,,,போட்டோ எடுக்கக் கூடாது,,,,
சுற்றி வந்து
பின்னால நின்னு பாருங்கோ,,,,
அர்ச்சகர்
வாய் வலிக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்…
கருமமே கண்ணாக,,,,
ராமா,,,!
ஸ்ரீராமா,,,,,
ஆலோசனைக்
கூட்டத்திலயும்,,,,நின்று கொண்டே இருந்தாயோ ?
உன் பாதம்
,,இந்தக் கல்லிலே பதிந்திருந்திருக்கிறதே,,,,?
எப்படி ஐயனே !
இப்பொழுதெல்லாம்
கொஞ்சம் நடந்தாலே கால்கள் வலிக்கிறதடா !
ஆகையினால்,,,,,
உன் பத்ம
பாதங்களைப் படமெடுத்து வைத்துக் கொள்கிறேன் !
என்றபடியே புகைப்படமெடுத்து விட்டு,,,,,
மேல் மண்டபம் சென்று,,, இலங்காபுரி தெரிகிறதா ? என்று கண் சுருக்கியும்,,கண்ணாடி போட்டும்
பார்த்தேன்,,,,,
தூரத்தில்,,,
இராமநாதசுவாமி
கோவில் கோபுரம் மஞ்சள் வண்ணத்தில் தெரிந்தது,,,,
தொலைக்காட்சிக்
கோபுரம் குதுப்மினாரை ஞாபகப்படுத்த நீண்டு உயர்ந்து நின்றது,,,,
இலங்கபுரி,,,
ஸ்ரீலங்கா,,,,
இலங்கை,,,
சேது பாலம்,,,,
தலை மன்னார்,,
ஒன்றும் தெரியவில்லை,,,,
ராமநாதரின்
கோபுரம் பார்த்து,
கைகள் இரண்டும்,
தன்னிச்சையாய் கன்னத்தில் போட்டுக் கொண்டன ! மீண்டும் , மெல்ல படிகளில் கீழிறங்கலானேன்,,,,,
மீண்டும்,,,,அந்தக்
குரல்,,
பொய் சொல்லக்
கூடாதென,,,,,!
ஐயா ! என்னாயிற்று,,,,,,உங்களுக்கு,,,,
அவரு பேச
மாட்டாரு,,,,,பக்கத்திலிருந்து ஒரு குரல்,,,,,,
ஏன் ? பொய்
சொல்லக் கூடாது,,,,,
நன்மை பயக்குமெனின் பொய் சொல்லலாமுன்னு வள்ளுவரே சொல்லி
இருக்காரு,,, !
நாம மனுசங்க தான,,,என்கிறாயா ?
ஆமாங்,,,
ஹா,,ஹா,,,,
பொய்யப்பா,,,,,
இல்லிங்,,மெய்,,,,,
மெய்யென்று
,,,,,பொய்யே சொல்லிக் கொண்டிருந்தா,,,,, வாழ்க்க இங்க,,,இந்த எடத்துல தான் கொண்டு விடும்,,,
புரியல,,,,,,,,,,,,,,,,
ஒருத்தங்கிட்ட
நீ உண்மை மட்டுமே பேசினா,,,,,,நீ சத்யவான் ஆயிர முடியாது,,,,
ஏன் ?
நீ யாருகிட்ட
உண்மையை மட்டும் பேசுறியோ ?,,அதக் கேக்கிற அந்த எதிராளியும்,,,உங்கிட்ட உண்மையைத்தான்
பேசணும்,,,, அப்பத்தான் அது சத்தியம்,,,உண்மை,,வாய்மை,,,புண்ணாக்கு,பொடலங்காய் ,,,எல்லாம்,,,
நீங்க ரொம்ப
கோபப் படுதிய,,,
கோவமெல்லாம்
இல்ல,,,,ஆத்தாமை,,,,,
அவரப் பேச
வைக்காதீயன்னு சொன்னேன,, கேட்டியா,,,? அவரு பேச மாட்டாருன்னு சொன்ன அந்த பழைய குரல்,,,,
எனக்கொன்னும்
புரியலை,,,,,,
ஒன்னுமில்ல
போ,,,,,
இல்ல,,,சொல்லுங்க
தெரிஞ்சுக்கறென்,,,,
இப்ப,,,பசிக்கு,,,
அந்த மாங்கா
திங்கணும் போல இருக்கு,,,,,
எங்கிட்ட
ரவாலாடு இருக்கு,,,,பையிலிருந்து உறவுகள் கொண்டு வந்த ரவாலாடு எடுத்தேன்,,,,
ஹா,,ஹா,,,,எனக்கு
இப்ப மாங்கா திங்கணும் போலத்தான் இருக்கு,,,,
கீழே,,,மாங்காய்ப்
பத்தைக் கீற்றுகளாகப் போட்டு வித்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தார்,,,,
மாங்கா எவ்வளவு,,,
இருவது ரூவா,,,,
இருவதா ?
ஆமா
இந்தாங்க,,,ஐம்பது
ரூவாவை நீட்டினேன்,,,,,
மாங்காய்யும்,,மூன்று
பத்து ரூவா நாணயமாய்க் கொடுத்தா,,
இது செல்லுமா
?
வேண்டாம்,,,,நோட்டாக்
கொடு,,,
இல்ல்ல,,,,
இதான் இருக்கு,,,,,வேணான்னா,,மாங்காயை வச்சிரு,,,,
நான் விழித்தேன்,,,,,பேசாமல்,,,திரும்பி
நடந்தேன்,,,,
அவர் !
சிரித்துக்
கொண்டிருந்தார் ,,,,
குலுங்கிக்
குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தார்,,,,,,
சிரித்துக்
கொண்டிருந்ததில்,,அவரின் பெருத்த உடல் ஆடிக் கொண்டிருந்தது.
மாங்காயை
நீட்டினேன்,,,,அவரிடம்,,,,,
என்னா ?
அத்தனையும்
சில்லறையா வந்துடுச்சா,,,,,,,?
பத்து ரூவா
மாங்காயை இருவது ரூவாக்கி வாங்கினையா ?
பாக்கெட்டில
இருக்கிற சில்லறைகளில் ஒத்தை ரூவாயை பொறுக்கி எடுத்துக் கொடுத்தியே ?
இது,,இது
தான் வாழ்க்க,,,,,,,,,,,,,,,,,,,,
ஓ !
ஞானம் பிறந்த
கதை இது தானோ ?
அட,,,
இங்கேயும்,,,
அரச மரத்தடி
நிழல் தான்,,,,
அட,,,இது
தானே ? போதி மரம் !,,,,,,
ஞானம் இங்கும்
கிடைக்கும்,,,! விளம்பரப் பலகை வைத்திடலாமோ ?
என்னப்பா,,,,,
ரொம்ப யோசிக்கிற,,,,?
இன்னமும்
யோசிச்சா,,,,இந்த வெள்ளைத்தலை,,,பழுப்புத் தலையா மாறிடும்,,,பா
நான்,,மெல்ல
இதழ் திறந்தேன்,,,
புன்னகை கீற்று
படர்ந்தது,,,,,
வாயத் தொறந்து
தான் சிரி,,,
ம்ம்
நானும்,,,இப்படித்தான்,,,,
ஒரு காலத்துல,,,,
நல்லா சிரிச்சதில்ல,,,நல்லா
சாப்பிட்டதில்ல,,,,,,,,ஓடி,,ஓடி,,,உழைச்சேன்,,,,
ஒரு கம்பெனில
அதிகாரியா இருந்தேன்,,,,
கை நிறைய
சம்பாதிச்சேன்,,,,,
எனக்குன்னு,,,ஐஞ்சு
பைசா செலவழிக்க மாட்டேன்,,,
கடையில,,ஒரு
டீ கூட சாப்பிட மாட்டேன்,,,,,பீடி சிகரெட் , தண்னி,,இதுக பக்கமெல்லாம் போனதேயில்லை,,,,
சம்பாதிச்ச
காசை எல்லாம்,,,,, அப்படியே அவ கையில தான் கொடுத்தேன்,,,,, அவ,,,பாத்துப்பா,,,எல்லாத்தையும்,,அவ பாத்துப்பான்னு
இருந்தேன்,,,,,,
அவ பாத்துகிட்டா,,,,,
தன்னை மட்டும்,,,,
கையில காசு இருந்தா,,,உறவும்,,,நட்புகளும்,,ஈ
மொய்க்கிற மாதிரி மொய்க்குமுல்லா,,,,இதுல கூடா,,நட்பு,,,, வேற,,,,
என்னத்தச்
சொல்ல,,,,,,
போன வருக்ஷம் இந்த செப்டம்பர்ல தான் ரிட்டயர்டு ஆனேன்,,,,,
கடந்த சொதந்திர
தெனத்தன்னிக்குத் தான் அவகிட்ட கேட்டேன்,,,, தாயீ,,,, அடுத்த மாசம் ரிட்டயர்டு,,, இன்னும்,,ஒரு
மாசந்தான்,,,,இந்த ஓட்டமெல்லாம்,,, அப்புறம்,,,,தாண்டி,,,வாழ்க்கைய அனுபவிக்கணுமுன்னேன்,,,,,
அதுக்கு,,அவ,,கேட்டா,,,,,,
அப்புறம்
சும்மாவா,,,? இருப்பீங்க,,,,,
அப்புறம்
என்னத்த திம்பீங்க,,,,,?
எம்மா,,,,,தாயீ,,,,,இவ்வளவு
வருக்ஷமா ? வாங்கின சம்பளத்த அப்படியே உங்கிட்ட
தான கொடுத்தேன்,,,,
ம்ம்ம்
இப்ப,,,எவ்வளவு
பாங்க்ல இருக்கு,,,,,
எடங் கிடம்
வாங்கிப் போட்டிருக்கியா ?
வூடு கட்டணுமுன்னு
சொன்னியே,,,,? இப்ப எப்படி இருக்கு,,,,?
ஆமா,,,,
நம்ம எடம்
எங்க இருக்கு ?
நம்ம எடமா
?
அதான்மா ஒம் பேர்ல வாங்கின எடந்தான்,,,,
அது கெடக்கு,,,அங்கயே,,,
காசு பணமெல்லாம்,,,,ஏது,,,,?
வாங்கிட்டு
வந்த சம்பளம்,,வாய்க்கும்,,வயித்துக்குமே பத்தல,,,, அதுல,,,,
செல் போன்
மணியடிக்கிறது,,,,
அவள் பேசுகிறாள்,,,,!,,இன்னிக்கா,,,
இப்பவா,,,?,,,,
அந்தாளு இருக்கான்,,,,
நாளைக்கு மார்னிங் வச்சுக்கலாமா ?
யாரும்மா,,,?
யாரா இருந்தா
? உனக்கென்ன ? எம் பிரண்ட் சரசு,,,
எந்த சரசு
?
என்னா,,எந்த
சரசா ?,,,,ஏன் ?
அவகிட்ட ஒரசுனுமோ
? வயசாச்சுங்கிற நெனைப்பு இருக்கட்டும்,,,
புத்தி போகுது
பார்,,புத்தி,,,,
நான் என்னம்மா
? சொல்லிட்டேன்,,,,
ஒனும் சொல்லாண்டாம்,,,
போயி,,படு,,,,
கொஞ்சம் வெளிய
போயிட்டு வாரேன்,,,,
மணி பத்தாச்சு,,,இந்நேரத்துல,,எங்கம்மா
?,,
ஒன்னும் ஓடிற
மாட்டேன்,,,,
துக்கம் வரல,,,,மெடிக்கல்
ஸ்டோருக்குப் போயிட்டு,,,,அப்படியே சரசைப் பாத்துட்டு,,,, வாரேன்,,,,காலையில செஞ்ச
இட்லி இருக்கு,,, இட்லிப் பொடி வச்சு சாப்பிடு,,,,ன்னுட்டுப் போனவ,,, ராத்திரி ஒரு
மணிக்கு வந்தா,,,,,
ஒரு மாதிரி
வாசம் அடிச்சது,,,,,
எனக்கு அதெல்லாம்
பழக்கமில்லாத வாசம்ம்,,,,
என்னத்தச் சாப்பிட்ட,,,,
அவ சிரிச்சா,,,,
மனசு வெறுத்துச்சு,,,,,
நாஞ் சாப்பிட்டுட்டேன்,,,,,
நீ சாப்பிட்டேல்லே,,,,,,
போட்டுச் சென்ற டிரஸைக் கூடக் கழட்டலை,,,,படுத்துட்டா,,,, அவ தலையிலிருந்து , மல்லிகைப்
பூச் சரங்கள்,,, சரம்,,சரமாய் வாசம் வீசிக் கொண்டிருந்தது,,,,
பூ வாசம்,,தல
வலிச்சது,,,,
வெளிய வந்து
படுத்துட்டேன்,,,,,,,
தூக்கம் வரலை,,,,
புரண்டு புரண்டு
படுத்துட்டிருந்தேன்,,,,,
மனசு கேக்கலை,,,,,
மூணு மணி
இருக்கும்,,,, எழுந்து படுக்கை அறைக்குள் சென்றேன்,,,,,
யாரோ ஒருவன்,,,அவளின்
செல் போனில்,,,,இளித்தபடி,,,, நேரலையில் முத்தம் கேட்டுக் கொண்டிருந்தான்,,,,, -இந்த வயதில் -
வலித்தது,,,,,,
உலகம் ரொம்பத் தான் முன்னேறி இருக்கு ,,,,
நாம தான்,,,, இன்னமும்,,அப்படியே,,,,
விடியல,,,,,
இன்னும்,,நேரமிருக்கு,,,,,
பசித்தது,,,,,,,
அடுக்களையில,,,அடுப்பின்
மேல இருந்த இட்லியில்,,,,கரப்பான் பூச்சி ஊர்ந்து கொண்டிருந்தது,,,,,
பைப்பில்
தண்ணீர் புடிச்சுக் குடித்தேன்,,,,உப்புக் கரித்தது,,,,,
முன்னறைக்கு
வந்தேன்,,,,,
பீரோவைத்
தொறந்தேன்,,,,,,
பட்டுப் புடவைகள்,,,விதம்
விதமாய்,,,,,, இதெல்லாம்,,எப்ப எடுத்தது,,,?
நாலு வருக்ஷத்துக்கு
முன்ன எடுத்த பேண்ட்டும்,சர்ட்டும்,,,,என்னைப் பார்த்து சிரித்தது போல இருந்தது,,,,
என் டிரஸ்களையெல்லாம்
எடுத்து வைக்கப் போனவன் கண்ணில்,,, பாங்க் பாஸ் புத்தகம் கண்ணில் பட்டது,,,,,,
என் பெயரிட்ட
பாங்க் பாஸ் புத்தகத்தில் 674 ரூபாய் இருந்தது,,,மினிமம் பேலன்ஸ்,,,மூன்றாயிரம் அல்லவா
?,,,,,
அவள் பேரிட்ட
பாஸ் புக்கில்,,, 2500 இருந்தது,,,,,
சிரித்தேன்,,,,,
இது,,
ஒட்டைப் பானை,,,,
இது காலிப்
பெருங்காய டப்பா,,,
எல்லாம்,,,
இன்னும்,,ஒன்னரை
மாதம் தான்,,,,, அதற்கப்புறம்,,,,,,,
காதற்ற ஊசியும்
கடை வழிக்கு வாராது காண்,,,,,!
பட்டினத்துச்
செட்டி கதை தான்,,,,,
இனி,,,
சூட்கேஸ்
எதற்கு ?
ஆடைகள் எதற்கு
?
வேண்டாம்,,,,ஒன்றும்
வேண்டாம்,,,,, எப்ப்பவோ ? திருச்செந்தூர் முருகங் கொவிலுக்குப் போறப்ப எடுத்த காவி
வேட்டி கண்ணில் பட்டது,,,,,
இடுப்பில்
சுற்றினேன்,,,
வீடு விட்டு
தெருவில் இறங்கினேன்,,,,,
இதோ,,,
இப்ப,,,இங்க,,,,,
பிள்ளைங்க்க,,,,
அதுக,,,வைகை
ஆத்துல மரம் வளருக மாதிரி வளர்ந்துச்சு,,,, இப்ப,,,
நாலும்,,நாலு
தெசையில இருக்கு,,,,,
அந்தம்மா,,,,,,,
அதோ,,,,,
அங்க,,,, தூரத்துல,,,,, அந்த அரச மரத்தடி நெழல்ல தூங்கிட்டு இருக்கா பாரு…….
அப்பா,,அம்மாவும்,,உங்க
கூடத்தான இருக்காங்க,,,,,
இல்ல,,,,
நீ,,என்கிட்ட
பேசிட்டு இருக்கும் போது , இந்த மாசத்துக்கான பணத்தை வாங்க ஆட்டோவுல வந்தா ?,,,,
உன்கிட்ட,,நூறு
ரூபாய்க்கு குறையாம வாங்கிருன்னு சைகையில சொல்லிட்டு
, களைப்புல படுத்திருக்கா,,,,, இப்ப அவளுக்கு சுகர் கொஞ்சம் ஜாஸ்தி,,,, அதான்,,,,
ஏன் ? கொடுக்கிறீங்க,,,,
விட்டதுடா ? சனியன் விளாம்பழத்து ஓட்டோடன்னு,,,, வந்துட்டீங்கல்லே,,, அப்புறமெதுக்கு,,,
இங்க பிச்சையெடுத்து,,,
அந்தம்மாக்கு கொடுக்குறீங்க,,,,,,,,
இது தான் வாழ்க்கை,,,
இதத்தான்,,,,,
லிபின்னு,,சொன்னாய்ங்க,,,
அன்னு எழுதுன,,எழுத்து,,,அழிச்சு எழுத முடியாத தலையெழுத்துங்குகிறது இது தான்,,,,
நான்,,
எல்லாத்தையும்,,,
அவகிட்ட சொன்னேன்,,,அவளுக்கு மட்டுமில்ல,,,,,எல்லாத்துக்கும் உண்மையா இருந்தேன்,,,,,
ஆனா,,,,,
எனக்கு,,,,,பொய்,,பொய்கள் மட்டுமே பரிசா கிடச்சுது,,,,
இப்பவும்,,,அவ,,என்கிட்ட நடிக்கிறா,,,
இன்னமும்,,கிறுக்கன்,,பொழைக்கத் தெரியாதவன்னு,,,,பேசுறா,,,,
எனக்கும்,,எதுவுமே தெரியாத மாதிரி,,,,,,நானும்,,நடிக்கிறென்,,தான்,,,,
ஆனா,,,பொய் பேசலை,,,,
வாயத் தொறந்து பேசினாத் தானே பொய் பேசணும்,,,
அதான்,,,
அந்த சங்கூதி சொன்ன மாதிரி,,,
யாருட்டயும்,,பேசுறதுல்லே,,,வாய தைச்சுட்டேன்,,,
நான்,,இப்ப,,
உங்களுக்கு
நூறு ரூவா,,தரணுமா ?
இல்ல,,,வேண்டாம்,,,,
ரொம்ப நாளக்கி
அப்புறம்,,,,
எங்கப்பனப்
பாத்துப் பேசின மாதிரி இருக்கு,,,,
உங்கிட்ட
பேசுனது,,,,
என்கிட்ட
பேசுறது,,உங்கப்பா கிட்ட பேசுற மாதிரியா ?,,
நான் உங்களை
விட ரொம்ப சின்னவன்,,,,
ஆமாம்,,சின்னவன்
தான்,,,
ஆனா,,உன்
நரைச்ச தல சொல்லுது,,,,, உன் அனுபவத்தை,,,,
எவங்கிட்டயும்
சொல்லாம வச்சிருந்தேன்,,
இப்ப ஒங்கிட்ட கொட்டிட்டேன்,,,
இன்னிக்கு
,,நல்லா உறங்குவேன்,,,,
மாங்கா சாப்பிடவே
இல்ல,,,,,
ம்ம்,,
இந்தா,,,
நீயும் சாப்பிடு,,,,,
ரெண்டு கீத்து
மாங்கா பத்தைகள்,,இப்ப என் கைகளில்,,,,,,
சாப்பிட்டுட்டுப்
போ,,,,, அந்த பழைய குரல்,,,,,
தூரத்தில்
ஆட்டோ ஹாரன் சத்தம்,,,,,
சகோதர் கணவர்
கையசைத்தார்,,,,மெல்ல ஆட்டோ அருகில் சென்றேன்,,,,
நீ,,,அந்த
சாமியாருட்ட பேசிட்டு இருந்தேய்ல்லா,,,
அந்த நேரத்துல,,,,,நாங்க,,,அந்த,,
சாட்சி ஆஞ்சநேயர்
கோவிலுக்கும் போயிட்டு திரும்பவும் வந்துட்டோம்,,, இப்பத்தான் கிறுக்கன் மாதிரி நீ
வார,,,,, தங்கை சொன்னாள் !
எங்க,,,?
சாட்சி ஆஞ்சநேயர்
கோயில்,,,,,,,
மாங்காயை
வாயிலிட்டேன்,,,,
தூவியிருந்த
மிளகாய்த் தூள் எரித்தது,,,
மாங்காய்
புளித்தது,,,,
என் கண்களில்
கண்ணீர் உப்புக் கரித்தது,,,,,,
ஓ !
நானும்,,,
சாட்சி ஆஞ்சநேயர்
தானோ ?
இல்லை,,,,
சாட்சிக்
குரங்கு,,,,,,
என் கண்களில்
உப்புக் கரிக்கும் கண்ணீர் !
ஏனென்று புரியாமல்,,,,உறவுகள்
ஒவ்வொன்றும்,,,,,
இந்த, என் கண்ணீருக்கு
ஒவ்வொரு காரணம் கற்பிக்கும்,,,,,,,
ஆட்டோவில்
ஏறி,,,
திரும்புகையில்,,,,
அவர் ! என்னையே
பார்த்துக் கொண்டிருந்தார் !
நான்,,
மூன்று பேர்
செல்கிற ஆட்டோவில்,,,,,
ஏழாவது ஆளாய்
,,,, சாட்சிக் குரங்காய்,,,, ஏறி ஒடுங்கி அமர்ந்தேன்…
ம்ம்ம்ஒரேமூச்சில்படித்துமுடித்தேன்நெஞ்சுஅடைக்கத்தான்செய்தது
ReplyDeleteமகிழ்ச்சி விஜி
ReplyDelete