Wednesday, 11 July 2012

நல்லாசிரியர்கள் !


’’குரு தேவோ ! பரப்ரம்ஹ’’
******************************
நாடிப் புலங்கள், உழுவார்க் கரங்கள்,
நயவுரைகள், தேடிக் கொழிக்கும்
கவிவாணர் நெஞ்சம், உவந்து நடமாடிக்
களிக்கும், மயிலே ! உன் பாதம் அடைக்கலமே !

                      - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை-
மனிதனின் வாழ்வாதாரமான நில புலங்களை,
உழுகின்ற கரங்கள்,சொல்கின்ற நயவுரைகள்,
அதனால் களிக்கின்ற கற்ற,கவிவாணர் நெஞ்சமெல்லாம் மகிழ்வானதாக இருக்குமென்றார் ? கவிமணி தாத்தா !

புலங்கள்,
உழுவார்க் கரங்கள் என்ற கவிமணித்தாத்தாவின் வரிகளுக்கேற்ப,
குலசேகரபுரத்தின் வேளாண் விவசாயக் குடும்பங்களிலிருந்து , வந்தவர்கள்,,,, ஆசிரிய பெருந்தகைகளாய், பணியாற்றி,,,
ஒளி வளர் நெஞ்சாய், மணிக் கல்வி புகட்டும் !’’
 ஆசிரியப் பணியாற்றி, பெருமை சேர்த்த  பெருந்தகைகள் ! அனைவருக்கும், எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ! 

அந்த குரு பரம்பரை’’ இங்கே பட்டியலாய்,,,,,,,,,,,,,,,,!

1.       திரு.சிவதாணு பிள்ளை அவர்கள்,
2.       திரு.மயிலேறும் பெருமாள் பிள்ளை அவர்கள்,
3.       திரு.பெருமாள் பிள்ளை அவர்கள்,
4.       திரு.கேசவ பிள்ளை அவர்கள்,
5.       திரு.சொர்ணம் பிள்ளை அவர்கள்,
6.       திரு.செல்லம் பிள்ளை அவர்கள்,
7.       திரு.முத்தம் பெருமாள் பிள்ளை அவர்கள்,
8.       திரு.அல்லல் காத்த பிள்ளை அவர்கள்,
9.       திரு.உமாதாணு பிள்ளை அவர்கள்,
10.   திரு.தாணு பிள்ளை அவர்கள்,
11.   திரு.மாதேவன் பிள்ளை அவர்கள்,
12.   திரு.குமாரசுவாமி பிள்ளை அவர்கள்,
13.   திரு.ஜவஹர் சுப்ரமணியன் அவர்கள்,
14.   திரு.கோலப்ப பிள்ளை அவர்கள்,
15.   திருமதி.பொன்னம்மாள் உமாதாணு பிள்ளை அவர்கள்,
16.   திருமதி.பேபி சங்கரன் அவர்கள்,
17.   திருமதி.வேலம்மாள் தாணு அவர்கள்,
18.   திருமதி.பொன்னம்மாள் நடராஜபிள்ளை அவர்கள்,
19.   திருமதி. கஸ்தூரி அவர்கள்,
இந்த 80 களின் நேற்றைய , பட்டியல் இன்றும் தொடர்கிறது !
                                    தொடரும்,
                                    தொடர வேண்டும் !

குலசையின் பன்முக மனிதர் !


குலசேகரபுரத்தின் இயக்குநர் சிகரம் !
*************************************

ஆண்டுகள்தோறும் நடைபெறுகிற நவராத்திரி விழா ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை அன்று, மறைந்த திரு.சண்முகம் பிள்ளை தாத்தா நடத்தும் கலைமகள் விழா !
  கலைமகள் விழாவின் சிறப்பு அம்சமே ! இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழின், மூன்றாம் தமிழான நாடகம்  நடைபெறுவதுதான் !
  அத்தகைய நாடகங்களின், கதை ,வசனம், எழுதி, இயக்கி, குலசேகரபுரத்தின், இளைஞர்களை நடிக்கவும், வைத்தவர் !
பள்ளி ஆசிரியராகத் தன் பணியினைத் தொடங்கியவர்,
ஆசிரியர்
சோதிடம்,
ஆன்மீகம்,
கதாசிரியர்,
நாடகாசிரியர்,
இயக்குநர், என பல் துறைகளிலும்,முத்திரை பதித்த வித்தகர் !
              குலசை, வே.தாணு அவர்கள் .
குலசேகரபுரம் புத்தகாலயத்திற்க்கு அடுத்தபடியாக, அதிக புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறவர் !
   என் கவிதைகளுக்கும் கூட கருத்துரை வழங்கிய, இனியவர் !
என் கவிதைக் குழந்தையை,
 உங்கள் விழித் தரிசனத்திற்க்காக அனுப்பி வைக்கிறேன் !
அது ஆணா ? பெண்ணா ? என்று பார்க்காதீர்கள் !
அது குழந்தைதானா ? என்று பாருங்கள் ! என்கிற என் எழுத்திற்கு,,,,
  அது குழந்தை அல்ல ! எதிர்காலம் சொல்ல வருகிற ஒரு யுகசந்தி’’’
என  எழுதி எனை வாழ்த்தியவர் !
     நான் அவரின் எழுத்து ஏகலைவன் ?

Tuesday, 26 June 2012

சித்தர் பாடல்கள் ! சில














அருள்மிகு குலசேகர நங்கை அம்மன் திருக்கோவில்


குலசேகர நங்கை அம்மன் திருக்கோவில்
------------------------------------------
        குலசேகரபுரம்.


புலம் பெயர்தல் என்பது மனிதன் தோன்றிய நாள்முதல் தொடர்ந்து வருவது ! அதிலும் தண்ணீர் இருக்கும் இடந்தேடி மனிதன் புலம் பெயர்தலே சிறப்பானது !

    அதிலும் வேளாண்மையைத் தொழிலாக்க் கொண்ட வேளாண் பெருமக்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் ,பாதுகாப்பாக, தங்கள் குடியிருப்பினை அமைத்துக் கொள்ள இடந் தேடி வருகையில் ,
 ’’ஒர் இட்த்தில்  தவளை ஒன்று  தன் வாயில் பாம்பினைக் கவ்விப் பிடித்திருந்தது !’’
 பாம்பு தவளையைப் பிடிப்பது சகஜம் ! அதுதான் உலக நீதி !
ஆனால் எத்தகைய வீரம் செறிந்த மண்ணாக இருந்தால் தவளையே பாம்பினைப் பிடிக்கும் ? என்று சொல்லி அந்த இட்த்திலேயே ....
 தங்கள் குடியிருப்பினை அமைத்துக் கொண்டனர் ! எம்மூர் முன்னோர் !
உயரமான இட்த்திலிருப்பதால் ஒசரவிளை என்றும், வேளாண்பெருங்குலத்தோர் ஒரே இட்த்தில் சேகரமாயிருப்பதால் குலசேகரபுரம் என்றும் அழைக்கப் பட்ட , இவ்வூரின் தொடக்கத்தில்  மேற்கு எல்லையில் குலசேகர நங்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
 குலசேகரநங்கை அம்மன் கையில் சூலமுடன் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறாள் !

இத் திருக்கோவிலின் கன்னி மூலையில் கணபதியும், கிழக்கு நோக்கியபடி முருகன்,அய்யப்பன், மேலாங்கோட்டு அம்மன் சந்நிதிகளும், அமைந்துள்ளன !
குலசேகரநங்கை அம்மன்  கருவறை முன்மண்டபத்தின் ஜல மூலையில், திருக்கோவிலின் உள்ளேயே திருக்கிணறும் அமைந்துள்ளது ! இங்கிருந்தே அம்மனின் அபிசேக நீர் எடுக்கப்படுகிறது !
 குலசேகர நங்கை அம்மன் கருவறையின் வலது புறத்தில் புதிதாய்க் கட்டப்பட்ட உத்ஸவர் அம்மன் மண்டபமும்,அதன் நேரெதிரே  தென்திசை நோக்கியபடி காவல் தெய்வமான பைரவரும், வெகு நேர்த்தியாக அருளாட்சி செய்கின்றனர் .

நங்காய் நங்காய் நமோ ! நமோ !
குலசேகர நங்காய் நமோ ! நமோ !
பங்கயச் செல்வி ! நமோ ! நமோ !