அன்னைப் பால் இல்லையின்னு,
அன்னப்பால் தேடுகின்ற ,,,,,,,,,,,மக்களுக்கு,
அணுப் பாலைத் தருகின்றார் ?
அள்ளி அள்ளிக் குடித்திடுங்கள் !
அந்தக் கூடங்குளம்……………………..நிறைய,
அணுசக்தி ! பாலன்றோ ?,,,,,,,,,,,,,,,,,,,,
ஆபத்து ஒன்றுமில்லை !
வெண்நுரை தள்ளி,
அலை வீசி வருகின்ற, கடலிடையே ?
செங்கதிர் போல ,,,,,,ஒளி வீசி,
கருவாடு,மீனோடு,,,,,,,,,,,,
பனம் பழத்து வாசமுடன்,,,,,,,,
விடியல் வரும் ? என்றிருந்தோம் !
கதிர் வீசி வரும் ?
வாசமில்லா ? ……………………..
அணுக் கதிர்தான், வீசி வரும் !
வந்தால்,,,,,,,,,,,,,,,,,,?
ஆபத்து ஒன்றுமில்லை !
முடிந்தால்,,,,,,,,,
முப்பது காத தூரம் ,,,,,?
ஒடி விடுங்கள் !
ஆபத்து ஒன்றுமில்லை,,,,
ஒத்திகை, தான், நடக்கிறது !
முடியாதவர்கள் ? ஒட,,,,,,
முடியாதவர்கள் ?,,,,,
நாங்கள்,
சொல்லும் வரைக்கும்,,,,,
முகம், பொத்தி,,,,,,,,,,,,,,,,,?
மூக்கு, பொத்தி,,,,,,,,,,,,,,,,,?
வாய் வழியே , சுவாசித்து,,,,,,
கதவடைத்துக் காத்திருங்கள் ?
வாசமில்லா,
அணுக்கதிர் தான், வீசுகிறது ?
ஆபத்து ,,,,ஒன்றுமில்லை ?
எங்களின்,
குடிசைகளுக்கு,,,,,,
கதவில்லை ! என்போர்களே ?
வெள்ளைத்துணியில்,,,,,,,,,,,
உடல் முழுதும்,
போர்த்தியபடி,,,இருங்கள் !
ஆபத்து ஒன்றுமில்லை ?
அலை கடலோரம்,
அணுக்கதிர்தான், வீசுகிறது !
அடுத்தென்ன ?
செய்வதென,,,,,,,,,,,,?-பதிலுக்காக,,,
டில்லிக்குக் கேட்டிருக்கிறோம் ?
அதுவரை,
அயோடின் மாத்திரை,
சாப்பிடுங்கள் ! தண்ணீர்
குடிக்காதீர்கள் !
நாங்கள் ,
சொல்லும் வரைக் காத்திருங்கள் ?
அய்யா !
சாமிகளா !,,,,,,,,,,,,,,,,
ஆபத்து ஒன்றுமில்லைன்னு சொல்லுற
நீங்களெல்லாம்,,,,,,,,
எங்கே ?
அய்யா ! இருக்கிறீர்கள் ?
பயப்படாதேயுங்கள் ?
தமிழர்களே !
அச்சமில்லை ! அச்சமில்லை !
வாசமில்லா,
அணுக்கதிர்தான், வீசுகிறது !
ஆபத்தும், ஒன்றுமில்லை !
நாங்களா ?
விமானத்தில்,,,,,,,,,,,,,
பதினாறாயிரம், அடிகளுக்கு மேல்,
எங்கள், மனைவிமார்களுடன் தான்,
பறந்து கொண்டிருக்கிறோம் !
உங்களுக்காகத்தான் ?
வாசமில்லா,
அணுக்கதிர்தான், வீசுகிறது ?
ஆபத்து ஒன்றுமில்லை !
அணுக் கதிர் வீச்சில்
முன் அனுபவம், இல்லாததால்,,,,
அனுபவம்,
உள்ளவர்களைத் தேடி…………….!
போபாலிலும்,,,,,,,,
நாங்கள்,
இதைத் தானே ?
சொன்னோம் !செய்தோம் !
ஆபத்து ஒன்றுமில்லை !
இந்தியத்
திரு நாட்டின், பிரதமரா ?,,,,
அவர், !
எப்போதப்பா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,?
இந்தியாவில், ,,,இருந்தார் ?
அணுக் கதிர்தான், வீசுகிறது !
ஆபத்து ஒன்றுமில்லை !
இந்தியத்
திருநாட்டின், முதல் குடிமகனா ?
அவர், !
இமாச்சல பனிமலை வீட்டில்,,,,,,,,,,,,!
அணுக்கதிர்தான், வீசுகிறது !
ஆபத்து ஒன்றுமில்லை !
ஆளுங்கட்சியின்,
தலைவர்,தலைவிகள் ?
அவர்கள் ?
அவர்களின், நாட்டில்,,,,,,,,,,,,,,,,?
அணுக்கதிர்தான், வீசுகிறது !
ஆபத்து ஒன்றுமில்லை !
அப்படியானால்,,,?
நாங்கள் ?
என்போரே !
ஆபத்து ஒன்றுமில்லை !
உச்சி மீது, வானிடிந்து,
வீழுகின்ற போதிலும்,
அச்சமில்லை ! அச்சமில்லை ! என்று,
பாடிய , பாரதி நாட்டுத் தமிழர்களே ?
அணு உலை பாதுகாப்பாகத்தானிருக்கிறது !
ஒத்திகை தான், நடக்கிறது !
ஆபத்து ஒன்றுமில்லை !
கூடங்குளத்திலுள்ளோர் ! மட்டுமல்ல ….!
பாரதி நாட்டுத் தமிழர்கள்,,,,,,
அத்தனை பேருக்கும்,
கூண்டோடு ! கைலாசம் ?
அவ்வளவுதான் !
அணுக்கதிர்தான், வீசுகிறது !
ஆபத்து ஒன்றுமில்லை !
’’தானே ‘’
புயலுக்கே,,,
மிச்சமில்லை எனத்
தடுமாறி விட்டதே ?
தமிழ்நாடு ! என்கிறீரா ?
அச்சமில்லை ! அச்சமில்லை !
அது !
தானே , வந்தது ?
ஆனால்,
அந்நியத்தான், துணையோடு,
அணுக்கதிரை,,,,
நாங்களே ?
கொண்டு தருகிறோம் !
ஆதலினால்,,,,,,,,,,,,,,,,,,,
அச்சமில்லை ! அச்சமில்லை !
ஆபத்து ஒன்றுமில்லை !
கூண்டோடு !
கைலாசம் ! மட்டுந் தானா ?
வைகுந்தம், பரலோகம் !
எப்போது ? என்போரே !
காத்திருங்கள் ?
மீண்டும்,
இரண்டாவது ! அணு உலை,
மூன்றாவது ! அணு உலை, வருகிறது !
ஆதலினால்,,,,,
அச்சமில்லை ! அச்சமில்லை !
வாசமில்லா,
அணுக்கதிர் தான் , வீசுகிறது !
ஆபத்து ஒன்றுமில்லை !
ஏ.வி.பிள்ளை
very fine with best of work
ReplyDelete