Tuesday, 3 April 2012

ஒரு ஆசிரியை,,,,,,,,,,,,,,என், அம்மா !,,,ஆனபோது ,,,?


ஒரு ஆசிரியை,,,,,,,,,,,,,,என், அம்மா !,,,ஆனபோது ,,,?


அம்மா !

என்
அழுகுரல் !
உன் காதுகளில்,
விழவில்லையா ? தாயே !


நீங்கள்,
அந்த பள்ளியில்,,,,,,,,,,,,,,,,,,
ஒரு
ஆசிரியையாகத்தான், நுழைந்தீர்கள் !....................


நெற்றி நிறைத்த
வட்டப் பொட்டு !
கண்ணொளி வீசிடும்
வட்ட நிலா முகம் !
முத்தெடுக்கும், ஊரென்ற
பேருக்கேற்ப,,,,,,,,,,,,முத்துப் பல் சிரிப்பு !

எப்பொழுதும்,,,,,
புன்னகைக்கும்,,,,,,,,,,பூ முகம் !
நீங்கள்
ஒரு ஆசிரியையாகத்தான்,அந்த
என்
வகுப்பறைக்குள் நுழைந்தீர்கள் !

காந்தல் கறுப்பு,
குட்டை உருவம்,,,?
அலை பாயும் கண்கள் ?
மணி யடித்தால், தட்டெடுக்கிற பிரவாகம் ?
பனையோலைக் குடிசைகளில்,
பரிதவித்த காலத்திய,,,,,,,,,,,,,,,,,, நான் ?


என்
இல்லத்தின் வறுமை ?
என் கண்களில்,
இந்திய வரைபடத்தைப் போல,,,,,,,,,,
குறுக்கும்,நெடுக்குமாய்,
உலாப் போகிற பொழுதுகளில்
நீங்கள்,
ஒரு ஆசிரியையாகத்தான்,அந்த
என்
வகுப்பறைக்குள் நுழைந்தீர்கள் !


எப்படி ?
எப்படி ? நீங்கள்
என்
தாயாய்,
அம்மாவாய்,,,,,,,,,, மாறினீர்கள் ? அம்மா !
இன்றெனக்கு
வயது 47 .ஆயிற்று !
அன்றென் வயது 9..................

பதினாறு வயதினிலே,
பதினேழு பிள்ளையம்மா ?
தாயாகவில்லையம்மா ,
தாலாட்டுப் பாடுகின்றேன் ?
கன்னித்தாய் திரைப்படபாடல் வரிகள்,
அன்றெனக்குப் புரியாதது?
ஏறத்தாழ 38 வருடங்களுக்குப் பிறகு,
இன்றெனக்குப் புரிகிறது ! ,,,அம்மா !

அம்மா !
என்னை,
என் காயச் சண்டிகைப்
பசியினைத் தணித்த, மணிமேகலையே !
நீ !
நீங்கள்,எந்த
ஆபுத்திரனிடம்,
அமுத சுரபியினைப் பெற்றாயோ ?
தெரியாது ! ஆனால்,
நான், காயச் சண்டிகைதான் !
நீங்கள், மணிமேகலை தான் .மணிமேகலைதான் !!.

’’பவதி பிச்சாந்தேஹி’’
எனக் கேட்ட,
சங்கரனுக்கு,,,,,,,,,,,,,,,,
தன் வறுமையிலும்,
நெல்லிக் கனி கொடுத்தவர், வீட்டில்,
கனகதாரா ஸ்தோத்திரம் பாடி,
சொர்ண மழை பெய்வித்தானாம் ?
காலடி சங்கரன் !

சொர்ணமே !
உன்,
கரம் பற்றி,
காலடி ஒரம்,நடந்து வந்த,
பிள்ளை யென்,,,,,,,
வாட்ட முகங் கண்டு,
வட்ட நிலா ! முகத்தோடு,
வட்ட வட்டமாய்,தோசை வார்த்து,
வாட்டம் போக்கிய,
தாயே !
சொர்ணரேகைக்கரை ,,,,,அம்பிகையே !
அம்மா !

சீழ் பிடித்து,
ஒழுகும் காதுகளோடு ?,,,
நான்,,,,,,,,,,,,,,,,வகுப்பினில்,
குறுகி நிற்கையிலே?
சேலைத் தலைப்பெடுத்துத் துடைத்தபடி,,,
என்,
தலைக் கோதி,வருடுகின்ற,,,,
சொர்ணக் கரங்கள்,,,,,,,,,,,,!
இன்றெங்கே,,,? அம்மா !!!!!!!!!!!!!

பசிக்கின்ற வேளையில்
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்ப,,,,,
குறளுக்கு,,,,,,,என்னை வைத்து,,,
குரல் கொடுக்க வைத்த ,,
கோதையே !
பேதையாய்,,,,?
நான் ,,இன்று ?
அம்மா !


பாஞ்சாலங்குறிச்சி !
வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை,,,,
திறந்த நான்காம் நாள்,,,பள்ளிச் சுற்றுலா !
கடைந்தெடுத்த காசெல்லாம்,
கிளம்புமுன்னே,,,,,,,,,,,,,,,,,
கடைவீதி பண்டங்களாய்,வயிறடைக்க,
பாஞ்சால மண்ணில்,
பிள்ளை,,!
நான் ?
வாய் பிளந்து,
வயிறு பிசைய நின்ற போதும்,,,,
எனை,
அரவணைத்து,,,
கொய்யா பழம் , முதல்,
குச்சி மிட்டாய் வரை,,,,
வாங்கித் தந்து,,,
என்
கும்பி பசியடங்க வைத்தவளே !
அம்மா !
நீங்கள்,,,,,அந்த
என்
வகுப்பறைக்குள்,
ஒரு ஆசிரியையாகத்தான், நுழைந்தீர்கள் !


மார்கழித் திங்கள்,
மதி நிறைந்த நன்னாள் !
நீராடப் போதுமினோ ?
சூடிக் கொடுத்த,
சுடர்க் கொடியாள், பாட்டின்,
பொருள் விளங்க வைத்து,,,
சங்கர ராமேஸ்வரர், உடனுறை
பாகம் பிரியாளினையும்,
வணங்க வைத்து,,,,,,,,,,கூடவே,
தயிர்ச் சோறு, சர்க்கரைப் பொங்கலையும்,
தாய் மடிச்சேயாய், சாப்பிட வைத்து,,,,,
அழகு பார்த்த,,,
அமுதமே ! சொர்ணமே !
அம்மா !

நீங்கள்,
ஒரு ஆசிரியையாகத்தான்,
என்
வகுப்பறைக்குள், நுழைந்தீர்கள் !

எந்தை இழந்ததால்,
கந்தையாய், போன,,,,,
என்
இல்லம்!
வறுமையின், கோரப் பிடியில்,,,,
தட்டாமாலையாய் ? ஆயிற்று,,,,,,,,,,,
எங்கள்,,,வாழ்க்கை ?
கோழிக் குருணையும்,
மரவள்ளிக் கிழங்கு, மட்டுமே ?
எங்கள், உணவாக இருந்த வேளை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,?

கடிகாரக் கடையின்,
எடுபிடி ஆளாய்ப் போவதென,
என் இல்லம்,
முடிவெடுத்த போது,,,,,?
அவன், படிக்கட்டும் ! என்று,
இவனையும்,
படிக்க வைத்த ,,,,பரிபூரணியாய்,,,,!

ஆறுமுகசாமி நாடார்,
அனாதை இல்லத்தில், சேர்ந்தாவது,,,
படிக்கலாமென்கிற நிலையில்,,,,
விண்ணப்ப மனுவுடன்
ஒற்றை ரூபாய்,
இணைக்க வேண்டுமென்ற போதும்,,,,
அந்த,
ஒற்றை ரூபாயையும்,
உன் கையால்,இணைத்தவளே ?
சொர்ணமே !
நீங்கள்,
ஒரு ஆசிரியையாகத்தான்,அந்த
என்,
வகுப்பறைக்குள், நுழைந்தீர்கள் !


தாயே ! சொர்ணமே !
கல்லூரியில் பயிலும்,
உங்கள் சகோதரனி ருக்கும்,
சேவல் பண்ணையில்,,,,,,,
நீங்கள், நுழைய முடியாது ?
ஆனால் ?
அவரை, அழைத்து வர
நான்,செல்லலாம் !,,,,அன்று ?
ஒர்
காவலனாய்,
உங்கள் கரம் பற்றி,
நடந்த பிள்ளை,,,,,,,,,,,நான் !
உங்கள்,
சகோதரனால்,செல்லமாய்,
அடிபட்ட பிள்ளை,,,,,,,,,நான் !
அப்போதும்,
உங்கள் கரம் பற்றி,
நடந்த உங்கள் பிள்ளை !  -நான் –

நீங்கள்,
ஒரு
ஆசிரியையாகத்தான்,அந்த
என்,
வகுப்பறைக்குள் , நுழைந்தீர்கள் !

காலச் சுழற்சியில்,,,,,,,,,,,,
கண்ணீரோடு, பிரிந்த,,,,,,,,, நான் ?
குமரியிலும்,கோவையிலும்,,,,,
உங்களைப் பற்றிய,
நினைவுகளோடு உலவினேன் ?
முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பிறகு,
மீண்டும்,,,,,,,,,,,,,,,,,,
நான்,
உங்கள், பிள்ளையானேன் ?


நரைத்துப் போன தலையுடனும்,
தள்ளாடுகிற நடையுடனும்,
கனிகளோடு, வந்தேன் !
-பள்ளிக்கு-
உங்களைப் பார்க்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அதே !
அதே !
கனிந்த முகம் !
கனிவு சிந்தும், புன்னகை,,,!
நீங்கள்......
நீங்களே தான்,,,,,,,,,,,,,!
உங்கள்,
உங்களின் கனிந்த,
கனி முகத்துப்
புன்னகையினைக் கண்டபின்,
மீண்டும்,,,,,,
நான்,,,,குழந்தையானேன் !



அம்மா !
நீங்கள்,
ஒரு,
ஆசிரியையாகத்தான்,
அந்த வகுப்பறையில், இருந்தீர்கள் !
நான்,
நான் மட்டும்,
ஒரு பிள்ளையாக,
உங்கள் பிள்ளையாகத்தான்,
அந்த,,,,,,,,வகுப்பறைக்குள் நுழைந்தேன் !

அன்றைய,,,,,,
நான்,,,,,,,,,,,,,மாணவனாகவும்,
இன்றைய,,,
நான்,,,,,,,,,,,,,,,,உங்கள் பிள்ளையாகவும்,
நுழைந்த வேளைகளின்,
இடைவெளி என்னவோ ?
முப்பத்தியேழு ஆண்டுகள் !
அம்மா !
அப்போதும்,
நீங்கள்,,,,,நீங்களாகத்தான்,,,,
நான், மட்டும்,,,,,,,,,,,,,
நரை, திரை,,,,,,யோடி,,,
நாணம் கூடி,,,?,,,,,,,நடம்,கெட்டு...!?


அம்மா !
விழாக்களின், விசேக்ஷம்,,,,,,நீங்கள் !
விழா நாட்களின்,,,,,,,,,,,,,,,,
முதல் வாழ்த்து !,
உங்கள், வாழ்த்தாகத்தான் இருக்கும் !
அம்மா !
நீங்கள்,,,,,,,,,,,,,,,,
என் இல்லம் வந்தீர்கள் !,
என்,
குழந்தைகளுடன், இருந்தீர்கள் !
இனிப்பாக இருந்ததம்மா !
அந்த நாள்,
இனிதாக இருந்ததம்மா !
என்
இல்லமெங்கும்,
வெகு நாட்களுக்குப் பின்,,,
என் இல்லம் !
உங்கள்,
புன்னகையினால்,,,,,
பொன்னொளி வீசிற்று !,,,,,,,,,,,,,,,,அம்மா !

அமெரிக்கா, செல்கிறேன் ?
அமரிக்கையாய்ச் சொன்னீர்கள் !
தம்பியையும்,,,,,,மருமகளையும்,
பிறக்கும்,,,குழந்தையை,,,,,
உங்கள்
தங்கக் கைகளில்
தாங்கிடத் துடிக்கிறத் தாயாய்,,,,
அற்புத சந்தோக்ஷத்துடன், பயணித்தீர்கள் !,,,,,,,,,,,,,,,,,,அம்மா !

அம்மா !
எனக்கும்,
அப்பநாயக்கன்பட்டியே,,,,அறியாத,,,,,,,
என்,,,,கைபேசிக்கும்,
அமெரிக்காவிலிருந்து,,,,உங்கள்
அழைப்புகள்,,,,,,,,,,,,,!
அம்மா !
உங்களால்,,,,,,,,,,,,
நான் ? ,
உவகையானேன் !
உன்னதமானேன் !

அம்மா !
அமெரிக்காவின் டிசம்பர் 14,
விடியலில்,,,,,
என்னுடன், பேசினீர்கள்,,,,,,,,,,!
என்
குழந்தைகள் நலம் கேட்டீர்கள் !
தாய் !,,,,,,,,,நீங்கள்,
தாயகம் வரும்,,,,,,,,,,,
நாள் ? சொன்னீர்கள் ?
சிரித்தபடி,,,
என்,
சிந்தை,,,,,,,,,,,நனைத்தீர்கள் !
உன்னால்,
உங்களால்,,,,
உங்கள் குரலால்,,,,,,,,,,,,
நான்,,,புனிதனானேன் ?

அம்மா !
இப்போது,,,,,,,,,,,,,,,,,,,,,,
நீங்கள் !
எங்கே ?,,,,,,,,,,,,,,,,,,, அம்மா !
என்னுடன் தான்,
கடைசியாகப் பேசினீர்களா ?
அம்மா !

அம்மா !
என்,
அழுகுரல்,,,,,,,,,,,,,,,,
உன்,
உங்கள்,,,
காதுகளில், விழவில்லையா ?,,,அம்மா !

உங்கள் தமிழால்,,,,,
நீங்கள்,
என் கரம் பற்றிச்
சொல்லிக் கொடுத்த தமிழால்,,,,,,,,,,,,,கேட்கிறேன் ?
அம்மா !
என்
அழுகுரல்,
உன் காதுகளில், விழவில்லையா ?,,,,அம்மா !

அம்மா !
வா !
சொர்ணமே ! வா !
இந்தப் பிள்ளை,,,,,,,,,காத்திருக்கிறேன் !
உன்னைத் தாலாட்ட,,,,,,,
வா !
தாயே !
தங்கமே ! சொர்ணமே !
என்,
பேரப் பிள்ளையாகவாவது,,,,,
மீண்டும்,
நீ !
நீங்கள் !!
பிறந்து வா !
என்
செல்வமே !
செல்லமே !
வா ! அம்மா !
உனக்காக காத்திருக்கிறேன் ! அம்மா !
உங்களுக்காகக்  காத்திருக்கிறேன் ! அம்மா !




                                        அன்புடன் என்றும்,

                                         அ.வேலுப்பிள்ளை.






No comments:

Post a Comment