தேடல் !
வழக்கம் போலவே,,,?
இலக்கின்றித்
தொடங்கிற்று,,, என் பயணங்கள் !
ஒரு அதிகாலையில்,
சில்லென்ற
குளிர்காற்று முகத்திலறைய,,,
திருப்பதி பேருந்து
நிலையத்தில் இறங்கினேன் !
திருவேங்கடத் துறை
வாழ் மீனாக வேண்டுமெனப்,,,,
பாடிய குலசேகர
ஆழ்வானில்லை நான் ? என்பதனை ,,,
நன்கறிவேன் !
’’ஸ்ரீநிவாஸம் ‘’ விருந்தினர் விடுதி,,நோக்கிச் சென்றேன் !
படியேறிய அகண்ட பரந்த சுத்தமான விருந்தினர் விடுதியில்,,,குளியலறை
பக்கத்தில்,,என்னைப் போலவே விழித்துக் கொண்டிருந்த கன்னட நண்பர் ?
ஒருவரிடத்தில்,,,
என் கைப் பையினைப் பார்த்துக் கொள்ள
முடியுமாவென ?
ஆதி மனிதனாய் சைகையில் கேட்க,,,,,
[’’தமிழ் மட்டுமே தெரிந்த தமிழன் எந்தக் காலத்திலடா ?
எங்கேயடா ? வாய் திறந்து பேசியிருக்கிறான் ?‘’ என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.! ]
அவரோ ! தலையாட்ட,,,
ஒரு பத்து நிமிட நேரதிற்குள் காலைக் கடன்களை முடித்து காக்கை குளியலாய்,,,,,
[ கோவையில் வசிக்கிற
என்னிடமிருந்து வேறென்ன குளியலை எதிர்பார்க்க முடியும் ] நீராடி,,, உடை மாற்றி
விட்டு,,,
புன்னகைத்த பெயர் தெரியா கன்னட
நண்பரிடம், புன்னகைத்தபடி
‘’ தேங்ஸ் ‘’ எனச் சொன்ன படி [ எனக்குத்
தெரிந்த முதல் ஆங்கிலச்சொல்]
கீழ்த் திருப்பதி பேருந்து
நிலையத்தை நோக்கிப் பயணித்தேன் !
கருடாழ்வாரும் அனுமனும், ஆளுகொரு புறமாய்
அருளாசி வழங்க,,
சற்றுத் தொலைவில் ‘ குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா ‘’ என சங்கீதம் பாடும் நிலையில்,கையினில்
தம்புராவோடு ? எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியும் ,,,,
இன்னும் சற்றுத் தொலைவினில்
நிறைகுடமொன்று கற்சிலையாய் அமைந்திருக்க,,குறைகுடமான நான்,,,,
ஏழு மலை கொண்ட வேங்கடவன்
குடிகொண்டிருக்கும் திருமலைக்கு பேருந்தேறினேன் !
ஏழு மலைகள் ! 28 நிமிட பயணங்கள்,,,!
வாழ்க்கையில் ஏற்பட்ட , ஏற்படுகிற , வளைவு நெளிவுகளைப் போலவே நீண்டு
கொண்டிருந்தன,,,சாலைகள்,,!
திருமலையில் கால் பதித்தேன் !
இராமானுஜரும்,கூரத்தாழ்வாரும்,குலசேகராழ்வாரும்,அன்னமய்யாவும்,கால்
பதித்த வேங்கட மலைதனில்,,,
‘’ வடவேங்கடம்,தென்குமரி யாயிடைத் தமிழ் கூறும்
நல்லுலகில்’’ என பண்டைய மொழி
பார்த்துப் போனதன் விளைவு,,
இனம்,மொழி கடந்து,,,
கோவிந்தனைத் தேடிப் பயணிக்கிற லட்சோப லட்சம் மக்கள் கூட்ட்த்தில் ,
திகைத்து,,, பின் மீண்டு,,,
‘’கோவிந்தா’’ கோவிந்தா ‘’ என்றபடி,,,
நானும் கரைந்து போனேன் ?
பெட்டக அறை தேடி க்யூவில்
காத்திருந்து,,,500 ரூபாய் காப்புத் தொகை செலுத்தி பூட்டும் ,சாவியும் வாங்கிக்
கொண்டு,,,
வரிசையாய் நிறுத்தப்பட்டிருக்கிற இரும்பு பெட்டியொன்றில்,,
என் கைப் பையினை வைத்து விட்டு,,காலணிகளை பெட்டகத்திற்கு
காவலாகவும்,அடையாளமாகவும் ? வைத்து விட்டு,,,,,
திருமலையின் சாலைகளில் காலணிகளின்றி,,,,கடலோரக்
கவிதைகள் சின்னப்பதாஸ்,சிப்பிக்குள் முத்து நாயகனாய்,,,நடக்கவாரம்பித்தேன் !,,,
விதவிதமான மனிதர்கள்,,,
விந்தையான மனிதர்கள் !
ஒரிடத்தில்,,,
கமகமக்கும் சாம்பார் சாதம் ,,,,பெரிய பெரிய பாத்திரங்களில் இருந்து எடுத்து
அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் !
கையேந்தலாமாவென,,,,?
நான் எண்ணிக் கொண்டு கையேந்துமுன்,,
காகித தட்டுகளில் ஏந்திய பின்னரும் கொதிக்கிற
சாம்பார் சாதம் என் கைகளுக்கு வந்தது !
கொதிக்கிற சூட்டினில் இருக்கிற
சாம்பார் சாதத்துடன் கை சுட,,இடக் கை வலக்கையென மாற்றி மாற்றித் திரும்ப,,
என் இடக் கரங்களில் பால் தம்ளர் ஒன்றும்,,,வந்து அமர,,,?
குறையொன்றுமில்லை கோவிந்தா என்றபடி,,இருக்குமிடம் தேடினேன் ?
‘’ இருக்குமிடந் தேடி என் பசிக்கு அன்னம்
உருக்கமுடன் கொண்டு வந்தால்
உண்பேன் !
பெருக்க அழைத்தாலும் போகேன் ! இனி
! ‘’ என்று பாடிய
காவிரிப் பூம்பட்டினத்துச் செட்டியின் பாடல்,,,,
என்றோ ? படித்தது....!
அப்போது என் ஞாபகத்தில் வந்து
தொலைத்தது !
விந்தைதான் !
கோவிந்தன் தலத்தில் விந்தைதான் !
நிழல் மரத்தடியே கிடந்த மரத்தடியில்
அமர்ந்தபடி,,,சுடச் சுட உண்டு முடித்தேன் ! பாலையும் குடித்தேன் !
பசி அடங்கிற்று !
கை நிறையக் காசுண்டு !
மனம் நிறையத் தேடலுண்டு !
வயிறு நிறைய பசியுமுண்டு ! என்ற
நிலையில்,,
தானாய் பசியடங்கிய விந்தை கண்டு,,,
‘’ கடந்த இருபது நாட்களாய்
கஞ்சியும்,ரொட்டியும்,ரசம் சாதமும்,நிலவேம்புக் கக்ஷாயமுமாய் காலம் கழித்தவனா ? நீ
?
என்னவொரு சுகபோஜனம் ! என்றபடி ,,,
கடந்த 20 நாட்களாய் வருத்திய உடல்
நோவினை கேலி செய்தது ! மனது ?
அவ்வப்போது,,மனசாட்சி வந்து,,,
சாட்சி சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது ?
இது ! எனக்கு மட்டுந்தானா? இல்லை ஊரிலுள்ள எல்லோருக்குமா? என்பது
புரியாமலேயே,,,?
மெல்ல நடக்கலானேன் !
வேடிக்கையானவன் ? நான் ? வேடிக்கை பார்த்த படியே,,,,,?
என் மனம் போன போக்கில் அல்ல,,,,,?
என் கால் போன போக்கில் பயணித்த ,,,
என் கரம் பற்றி,,,தர்சனம் ஆச்சா ? என்று கேட்டது ? ஒரு குரல் !
சற்றே திகைப்பினில்,,,
திடீரெனக் கேட்ட அந்தகுரல்,,,என் பற்றிய கரத்தினை விடாமலேயே,,,மீண்டும்
தர்சனம் ஆச்சா ? எனக் கேட்க,,,
நான் திகைத்த படி,,,இல்லை என்று தலை அசைக்க,,,
எப்ப ? என்று மீண்டும் கேட்க,,,,?
எந்தப் பதிவும் செய்யாமல் திருமலைக்கு வந்த ,,,,,,,
நான் அப்போதும் மெளனமாய்த் தலை அசைத்தேன்,,,,! இட வலமாய்,,
நீரூ அங்கபிரதட்சணம் செய்யுன்னாரா ? என்க,,
அதற்கும் தலை அசைத்தேன்,,மேல் கீழாய்,,
நீரு தமிளா ? என்றவர்க்கு ,,,
முதன் முதலாய் ‘’யெஸ்’’ என்று தமிழ் பேசினேன்
,,,,,,,,,,,,!
ஆ ! அக்கட க்யூ ,,உண்டாயினா,,,தேசு போயினா,,,
மேலும்,படபடவென,,,
சுந்தரத் தெலுங்கினில்,,,,ஏதேதோ ! சொன்னார்,,,,,!
அங்கே க்யூவில் போய் நில் ! உன்னை
போட்டோ எடுத்து ஒரு சீட் கொடுப்பாங்க,,இரவு 1.30 மணிக்கு கோவிலில் அங்க பிரதட்சணம்
செய்ய போகணும் ப்ரீ தர்சனம்,,10 ரூபாய் டிக்கெட் எடுக்கணும் ஒரு லட்டு இலவசமாய்க்
கிடைக்கும் என்பது வரை,,,,,
நன்றாகப் புரிந்தது !
இலவசம் என்றதும் இளித்தேன் போலும் ?
தமிழனல்லவா ?,,,,,,,,,,நான் !
தலை குனிந்து நின்றவனைப் பார்த்து
முதுகில் தட்டியபடி,,சுதர்சனம் காம்ப்ளெக்ஸ் அருகே கெளஸ்தூபம் ஆர்ஜிதசேவா டிக்கெட்
கவுண்டரைக் காட்டினார்..!
பகல் 11.30 முதல் 1.30 வரை மட்டுமே
அளிக்கப்படுகிற ஆர்ஜிதசேவா டிக்கெட்டுகள் இங்கே வழங்கப் படுகின்றன .
கெளஸ்தூபம் கட்டிடத்தின் பக்கவாட்டில் செல்லும்
கடைகள் நிறைந்த சந்தினில்,,,நிழல் தேடும் நெஞ்சத்துடன்,,,கெளஸ்தூபம் கவுண்டர்
திறக்கப் படுவதற்காகக் காத்திருந்த பக்தர்களுடன் நானும் ஒருவனாய்க்
காத்திருக்கவாரம்பித்தேன் !
சற்று நேரக் காத்திருப்பிற்குப்
பின்,,,
வழக்கம் போல வாயில் திறக்க,,ஒடும் கூட்டத்துடன் ஓடாமல்,,,நிதானித்து நடந்த
,,என்னைத் திட்டிய பலபேர் தமிழர்கள் !
சத்தியமாய்த் தமிழர்கள் மட்டும்
தான் !
காவலர்கள் வரிசைக்கிரமமாய்,,அனுப்ப,,,
அல்லக் கைச் சந்தினில் நுழைந்து விடத் துடிக்கும்,,,,தமிழகக்
கரை வேட்டித் தனம் ஆந்திராவில் செல்லுபடியாகவில்லை என்பது மட்டும் நிஜம் .
இடது கை சுட்டு விரல் நகலெடுக்க ,
கேமரா படம் பிடிக்க ,,
கலங்கலாய் என் முகம் தாங்கிய காகித சீட்டொன்று,,,கைகளில் வந்தது !
கைப்பற்றின காகிதச் சீட்டினைப் பத்திரப் படுத்தியபடியே,,,,,!
வேங்கடவன் வலம் வரும் இரதவீதிகளில் வலம் வந்தேன் !
ஸ்ரீவாரி புக்ஷ்கரணி என்றும் சந்திர
புக்ஷ்கரணியென்றும் அழைக்கப்படுகிற திருமலையின் தீர்த்தக் கரையில் குடி
கொண்டிருக்கும் வராஹ மூர்த்தியை தரிசனம் செய்தேன் .
‘’ திருமலை திருப்பதி ‘’ ,,வராஹ க்ஷேத்ரம் என்றே அழைக்கப்படுகிறது !
கோவிந்தன் குடியிருக்க வருமுன்னே,,,
ஆதி முதற் குடியமர்ந்த வராஹ
மூர்த்திதான்,,திருமலையின் முதல் தெய்வம் என்பதால்,,,அவரை தரிசனம் செய்யாமல்
திருப்பதி தலயாத்திரை நிறைவுறாது என்பதும் நம்பிக்கை !
அந்த நம்பிக்கையினை நானும் பின்
பற்றினேன் !
மெல்ல மெல்ல நடந்தாலும்,,,,
வயிறு ! தன் குணம் காட்ட்த் தொடங்கிற்று,,,,,,?
உச்சிப் பொழுது தாண்டி விட்டதாலா?,,
பெருங்குடலை சிறுகுடல் தின்னும் நேரமாகிவிட்டதாலா?
சற்றே உணவிடு !
அதன் பின்,,
நீ !
சரளமாய் உலாவிடு ! என்று வயிற்று மணி அடிக்க,,,
ஸ்ரீ மாத்ருதேவி அன்னமய்யா அன்னசத்திரம்
கண்ணில் பட்டது !
அலை அலையாய்க் கூட்டம் !
ஆர்ப்பரித்த முன்னலையின் முன்னே விழும் நுரையாய்,,,
மனிதர்கள் ஒட்டமும்,நடையுமாய்,,,,,
அன்ன பிரசாத வரிசைக்காக அணிவகுக்க,,,
என் கரம் பற்றிய பெண்ணொருத்தி,,,
‘’ இவ்வழியே செல்க ‘’ என்றவாறு சைகை காட்ட,,,
புத்தகங்கள்,டாலர்கள்,பாசி,மணி
மாலைகள்,,,என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பகுதி வழியாக குறுக்கு வழியில் நீண்ட
வரிசையில் நிற்காமல் வந்த நான்,,,
அங்கே வைக்கப்பட்டிருந்தனவற்றைப்
பார்த்தபடி,,,
அடடா ?
நீங்களும் ஆரம்பித்து விட்டீர்களா ?,,என்றபடி,,என் மனக்குரங்கு திட்ட,,,,,
மெல்ல நடந்த என் முன்,,
அன்ன பிரசாத அரங்கம் !
மூச்சு திணற வைத்தது !
அட ! இத்தனை மனிதர்களா ?
அட ! இத்தனை இருக்கைகளா ?
ஆந்திரத்து
பாயாசம்,மல்லித்துவையல், வாழைக்காய்,உருளைக்கிழங்கு கூட்டு, இலை நிறைத்த அன்னம் !
பெருங் கிண்ணம் நிரம்பிய சாம்பார் அருவியாய்க் கொட்ட,,விரவி உண்டு முடிக்கும்
முன் மீண்டும் அன்னம் !
கூடவே இரசம்,,,,,,,,,,,,பின்னால் மோர் !
அடடா ! அந்த நேர்த்தி !
கல்யாண சமையல் சாதம் !
காய்கறிகளும் பிரமாதம் !
இதுவே எனக்குப் போதும் ! அஹா அஹாஹ் அஹாஹ்,,
என மாயாபஜார் ரங்காராவ் போல பாடத் தோன்றிற்று !
‘’ அன்னதாதா சுகினோ பவந்து ‘’ என்றபடி,,
உண்ட மயக்கம் கண்களைச் சுழற்ற,,
சுட்டெரித்த சூரியனால் தகிக்கிற
வீதிகளில் எல்லாம் தண்ணீர் பீச்சியபடி செல்லும் தேவஸ்தான வாகனத்தின் உபயத்தால்,,
தரை சற்றே குளிர்ச்சியாக,,,
பெட்டக அறையினைத் தேடிப் பயணித்த போது,,,
மாலைப் பொழுது வரத் தயாராக,,,,,,,,,,,?
ஊரிலிருந்தால்,,தேநீருக்கு ஏங்கும்
நேரத்தில்,,,
பெட்டக அறையில்,,
பெட்டகத்தின் முன் அமர்ந்து,,
சற்றே கால் நீட்டி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அவ்வளவுதான்,,,!
அயர்ந்து போனேன் !
கண்ணயர்ந்து போனேன் !
நல்லதொரு துயில் !
அரங்க மாநகருள் அறிதுயில் கொண்ட திருமால்,,,
மாலவன் குன்றத்தில் நெடுமாலாய் நின்றிருக்க,,,
முன்னிராப் போதினில் விழித்தேன் !
மீண்டும் திருமலையின் சாலைகளில்,,
ஒரு மண்டபத்தின் ஓரம்,,,
மரத்தடியில் அமர்ந்தேன் !
எண்ணங்கள் ஏதுமின்றி ,,,,,?
எண்ணிக்கை ஏதுமின்றி,,,,,?
எதுவும் இல்லாமல்,,,எதனையோ ? தேடி,,,
எத்தனை நாளாய் ,,,,?
தொடரும் ?,,
இந்த வாழ்க்கைச் சகடம் !
கேள்விகளின்,,
வேள்விகளில்,,,
நான்,,
திகைப் பூண்டாய்,,
நுனி பெருத்து,,
அடி சிறுத்து,,,
உறைந்து கொண்டிருந்தேன் ?
திருவேங்கடவன் திருகோவிலை ஒர் வலம்
வந்தேன் !
கோவில் சுவரெங்கும் கல்வெட்டுக்கள் !
இதிலென்ன ? ஆச்சரியம் என்கிறீர்களா ?
அத்தனை தமிழ்க் கல்வெட்டுக்கள் !
திருவேங்கடத்தான் தமிழனாய் இருந்த போது,,,,,,,,,,,,,
திருமலை திருப்பதி வளர்ந்த கதை சொல்லி
நிற்கிறது !
இதுவும் நன்மைக்கே ?
ஆம் ! திருவேங்கடவன் தெலுங்கனாய்
மாறிப் போனதும் நன்மைக்கே !
ஆம் !?
இல்லையெனில்,,
கடவுள் இல்லை ! கடவுள் இல்லவேயில்லை ? என்று சொல்கிற கரை வேட்டிகளின் கைகளில்
சிக்கிச் சிதறிச் சீரழிந்து,,
ஒற்றை மாலைக்கும்,,,? கைப்பிடி
துளசிக்கும்,,,,
பெருமாள் ? ஆண்டொன்று காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கும் !
திருப்பதி வேங்கடப் பெருமாள்
தப்பித்துக் கொண்டார்,,,,! தமிழர்களிடமிருந்து,,,,...?
தமிழக
அரசியல்வாதிகளிடமிருந்து,,,,,,,,,,,,,,,,,?
மின் விளக்குகளின் ,
வெளிச்சத்தில் திருமலை ஜொலித்துக் கொண்டிருந்தது !
சாரை சாரையாய் மக்கள் !
கோவிந்தா ! கோவிந்தா ! என்றபடி,
நாரணன் ! நாராயணன் தம் நாமம் சொன்னபடி,,,,
ஆண்டி, அரசன், ,,,,,,,,,,,,
ஆண்டவர், ஆளுவோர்,,எனப் பலப் பலவிதமாய்,,,,
திருமலையின் முதல் வாயிலில் இருந்து ,,
மெதுவாய்,மெதுவாய்ப் பயணித்த நான்,,,,,
வேங்கடவன் குடி கொண்டிருக்கும்,,,
திருக்கோவில் அருகே வந்திருந்தேன் !
அந்த வெள்ளைக் கோபுரங்கள் !
மிகப்பிரமாண்டமில்லை .- தமிழகத்துக் கோவில்களைப் போல –
ஆனால்,,,
அதனுள் நின்றவண்ணம் உறையும்,,,பெருமாள்!
அந்த பொன் விமானத்தின் கீழ் நின்ற
வண்ணம் சேவை சாதிக்கும் ,,,
நாராயணன் !,
வேங்கடவன் !,
மாலவன் !,
பாலாஜி !
எப்படி ? எப்போது ? அவன் திருக்காட்சி தரப் போகின்றான் ? என எண்ணங்கள்
சூழ,,,,,,,,,,
சுற்றிலும் பார்த்தால்,,,
அந்த நள்ளிரவில்,,
திருமலையின் தீர்த்தக் குளத்தில் நீராடும் பக்தர்கள் ?
சற்றே புத்திக்கு உறைத்தது ?
கட்டிய வேட்டி சட்டையுடன்,,
அங்கபிரதட்சண அனுமதிக்கான சீட்டினை,,
ஒரு கையில் நனையாமல் பிடித்தபடி,,
ஸ்ரீவாரி புக்ஷ்கரணியில் நானும் மூழ்கி எழுந்தேன் !
தள்ளாடும் என் கால்களோடும்,
சொல்லாடுகிற என் நாவோடும்,
நடுங்குகிற உடலை,,,? கரம் இரண்டினைக் கட்டியபடி,,,,,
நீண்டிருந்த கம்பித் தடுப்பு அறைகளுக்கான சாலைகளைத் தாண்டி,,,
நள்ளிரவில் நடந்து போனால்,,,?
அங்கே ?
எனக்கும் முன்பாக,,
ஒரு பெருங்கூட்டம் !
தோமாலை சேவா !
ஊஞ்சல் சேவா !
சுப்ரபாத சேவா !
எனப் பல்லாயிரம் கட்டிக் காத்திருப்போர் ஒரு பக்கம் !
நாங்கள் ஒரு பக்கம் !
காத்திருப்பு அறைகளுக்குச் செல்லும் வழிக்கதவுகள் திறக்கப்பட்டன !
ஒர் அறையில் அங்கமெலாம் நனைந்தவர்கள்,,
கோவிந்தன் பேர் சொன்னபடி,,!
தங்கள் உடல் நடுக்கத்தினை மறைத்துக் கொண்டிருந்த போது,,,,,,,,,,
திருக்கோவிலுக்குச் செல்லும் வழிக்
கதவுகள் திறக்கப்பட்டன !
எட்டித்,,,தாண்டிக் குதித்து,,,
எவ்வித் தாவி,,
தப்படி பட்டு விலகா மனம் போலத் தாவிக் குதிக்க,,,?
அந்த வரிசை நகர்ந்த்து !
நகர்ந்த்து !
திருக்கோவிலின் வாயில் வரை விரைந்து சென்றது !
பல்லாண்டு, பல்லாண்டு,
பல்லாயிரத்தாண்டு,
மாலே மணிவண்ணா ! உன் சேவடிச் செவ்வித் திருக்காப்பு,,,
என என்னால் பாடலியற்றவியலாது !?
ஆனால்,,,
பரந்தாமா !
உன் பேரழகினைக் காண வந்த பரமன் நான் !
உன் திருமுகம் காட்டு ! செய்வாய்க் கண்ணா !
என்றபடி திருமலை வேங்கடசுவாமி ஆலய வாயில் தாண்டிய போது,,,
கூரத்தாழ்வார் கொறடு என்றபடி,,,,
ஒரு நீண்ட இரும்புக்கழி தொங்கிக் கொண்டிருந்தது !
திருக்கோவிலின் பாதுகாவலனாக அந்த
ஏழுமலை சூழ்ந்த வனத்தில் வாழ்ந்த மனிதனுக்கு அந்த இரும்புக் கழி தேவைதான் !
ஆம் !
அன்றைக்கு கோவில் காத்த அருளாளனுக்கு,
இன்றைக்கும் சாட்சி சொல்லும் வண்ணம் !,,,,,,,,,,,,
கூரத்தாழ்வான் எனும் பக்தனை வியந்தபடி,,,,,,,,,,
வடவேங்கடவன் பிராகாரம் நுழைகையில்,,,
வலப்புறத்தில் கிருக்ஷ்ணதேவராயர் தன் பட்ட மகிக்ஷிகளுடன்,,,,கோவிந்தன் அருள்
வேண்டிக் கரம் குவித்தபடி,,,,
தான் வாழும் காலத்தில்,,,
கோவிந்தனை வணங்கக் காத்திருந்தது போல,,,,,?
இன்றும் செப்புச் சிலையாய்க்
காத்திருக்கிறார் ! ?
வணக்கம் மன்னா ! என்றபடி,,,
நடக்க,,,
பொன் வேய்ந்த பலிபீடம் ! கொடிமரம் !
பலி பீட்த்திற்க்கும் கொடிமரத்திற்கும் ,,,
மலர்களால் இப்படியெல்லாம் அலங்காரம் செய்யமுடியுமா ? என்று வியக்கும்
வண்ணம்,,,,,,,,,,,,,,,
மலர் அலங்காரம் ! ஆஹா !
அது ஒரு ஆனந்த, அற்புத, பரவச,,,,,
என்று எத்தனை ஆச்சரிய வார்த்தைகளிலும் அதனை உரைக்கலாம் !
அத்தனை அழகு !
கொடிமரம் தாண்டி கோவிந்தா !
கோவிந்தா ! என்றபடி,,,,, வேங்கடவன் திருக்கோவில் உட்பிராகாரத்தினுள் நுழைய,,,,
பெருங்கூட்டம்,,, தள்ளியும்,முட்டியும்,மோதியும்,,,,,நுழைய,,,
ஆனால் சிரித்தபடி
நுழைய,,,,,அங்கேயும் வரிசை ! வரிசை !
நின்றவண்ணம் காட்சி தரும் ஆனந்த
சொரூபனாய் பார்ப்பவர்க்கு காட்சி தரும் வேங்கடவனைக் காண,,,,காத்திருக்க,,,,,,,,,
மெல்ல மெல்ல நகரும் கூட்ட்த்தின்
பின்னால் அணிவகுத்தேன் !,,,,
சுப்ரபாதம் படித்து வேங்கடவன்
துயிலெழுந்த்தும்,,,
ஒவ்வொருவராய் அங்கபிரதட்சணம் செய்ய,,,,
உட்பிராகாரத்தின் கருங்கல் பாவிய தரையில் உருளவாரம்பிக்க,,,
கூப்பிய கரங்களுடன்,,,நானும்
உருளவாரம்பித்தேன் !
கோவிந்தா ! வேங்கடரமணா ! கோவிந்தா !
என்றபடி,,,
சுற்றும் பூமி !
சுழலா உலகம் ?
காக்கும் தேவோ ! கருணைக்கடலாய்,,,,,,,,,,,,,,,
கண்களில்,,,,,
விழிகளில் மூடிய இமைகளுடன்,,
உதடுகள் உச்சரிக்கும்,
கோவிந்தன் நாமாவளியினைத் தாண்டி,,,,,,,,,
உள் மனது ,,
வேண்டுதல்களை அடுக்கடுக்காய்,,
வைத்தபடி இருக்க,,,,
குளிரினில் நடுங்கி,,
வெடவெடத்த என் தேகம் ?
கருங்கற் பாவிய தரையது,,?
அதுவும் மலைக்கோவில் குளிர்த் தரையது ?
என்றெல்லாம் அஞ்சிக் கிடந்தது ?
மெத்தென்று இருக்கும் இயல்பது
உணர்ந்த போது,,,,
கொஞ்சம் பிரிவு !
கொஞ்சம் ஊடல் !
சேர்ந்து வருகிற காதல் ! வலிமை !
மெல்ல மெல்ல
மெத்தென்ற தரையினில்,,,
ஈரத்துணியுடன்,,,உருண்டு வந்த போது,,
நெஞ்சம் நிறைக்க,,
நிகழ்ந்த நினைவுகள்,,
எழுத்தில் கொஞ்சம் தான்,,,,,,,,,,,,,,,,?
கோவிந்தன் காப்பான் ! என்கிற நம்பிக்கை !
நினைவுகளோடு கலக்க,,,
ஸ்ரீவாரி உண்டியல் அருகே ,,,
அங்க பிரதட்சணம் முடிந்ததும்,,,,
மீண்டும் எழுந்து,,,
கொடிமரம் தாண்டிச் சுற்றி வந்து,,,,
மீண்டும் வரிசையில் நிற்க,,
அலையலையாய்,,
நகர்ந்த திருக்கூட்ட்த்தில்,,,
பச்சை மால் மலை போல் மேனி !
பவளவாய் கமலச் செங்கண் !
அச்சுதா ! அமரறேரே ! என்ற வண்ணம்,,
நெடுமாலாய்,,
சீர் மல்கும் திருமாலாய்,,,
நின்ற திருக்கோலத்தில்,,
ஏழு மலை மட்டுமல்ல,,
எழுலகும் அருளாட்சி செய்து கொண்டிருக்கும்
வேங்கடவன் !
திருக்காட்சி கண்டேன் !
அத்திருக்காட்சி தனைக் கண்டபோது,,
அவ்வுணர்வினை வர்ணிக்க,,,
என்னிடமோ ?
வார்த்தைகளில்லை !
அக்காட்சி கண்டார் !
அக்காட்சிதனை தவிர்த்து வேறு காணார் !
என்னும் வண்ணம் !
நீங்காமல்,,
நினைவுகளோடு கலந்தான் !
கோவிந்தன் !