உலகத்தீரே ! உலகத்தீரே !
கபாடபுரங்கள் ஆண்டதும்
போதும் ?
அங்கம்,வங்கம்
வென்றதும் போதும்?
கலிங்கம் எரித்து,
கங்கை கொண்டதும் போதும் ?
ஈழம் வென்று,
சோழம்,சோழம்,என்று களித்ததும் போதும் ?
கரை புரண்ட ஆற்றினில்
கல்லணைக் கட்டியதும் போதும் ?
ஊருகிரண்டாய்
குளங்கள் வெட்டியதும் போதும் ?
ஓரச் சாலையில்
மரங்கள் நட்டதும் போதும் ?
தூரப் பயணத்திற்கு
பெருவழிப் பாதை அமைத்ததும் போதும்?
கோழி வெருட்ட தங்கக் குண்டு
எறிந்ததும் போதும் ?
போதும் ! போதும் ?
எல்லாக் கதைகளும் போதும் ?
நாயினும் கீழாய்,
கண்டவரெல்லாம் கல்லால் அடித்ததும் போதும் ?
கொஞ்சமே கொஞ்சம்
நனவாய் ? ,,,,,,,,
நாங்கள் வாழ,,உயிர்
மட்டும் வேண்டும் ! வேண்டும் !
உங்கள் காலடி
பணிந்து, தெண்டனிடுகிறோம் ! உலகத்தீரே !
மன்னிப்பீரே ! உலகத்தீரே
! மன்னிப்பீரே ! மன்னிப்பீரே !
ஆதலால்,,,,,,!
தமிழா ?
இனி ! தமிழனென்று
சொல்லடா ! ----------------------நில்லடா!
கோடிட்ட இடங்களை
நீங்களே,,நிரப்பி விட்டு,,?
கோமணத்
துணியுடன்,,,,,,?
வரிசையில் வந்து
நிற்பீரே ! வந்து நிற்பீரே !
உங்கள் காலடி
பணிந்து, தெண்டனிடுகிறோம் ! உலகத்தீரே?
No comments:
Post a Comment