மூன்று முடிச்சிட்ட
உனக்கென்னடா ? என்னவனே !
மூன்று மாதம் விடுமுறையென்று
வந்தாய் ?-வாசலில் -
மூன்று வருடத்திற்கும்
சேர்த்தொரு அவசர முத்தமிட்டாய் ?
மூன்றாம் தனமாய்
தொப்பை வளர்த்திருக்கிறேனென எள்ளினாய் ?
முன்வாசல் தாண்டிக்
கூடத்தினுள் கால் வைத்தாய் ?
முன்னோர்கள் படம்
முதல், மூத்தோர் வரை காலில் விழுந்தாய் ?
முத்தமென்று முகம்கடிக்கும் மூத்தவளைத் தேடினாய்?தாவணி சிறகசைய,
முழுமதி காட்டி
வர திகைத்தாய் ? நீயுமில்லை, நானுமில்லை அவளுன்,
முன்னாள் காதலியின்
முகம் காட்டினாளோ ? உன்னையறிவேனடா ?
முன்வாசல் மணியடிக்கிறது
? உன் நண்பர்கள் பட்டாளம் குதிக்கிறது !
முன்னிருந்த பெட்டி
திறக்கிறாய் ? பாட்டில் வாசனைகள் துளைக்கிறது!
மூக்கிற்கு வேலை
கொடுக்கிற உறவுகள் அனைத்தும் உன்னைச்சுற்றி
மூக்கு நுனி வரை
வந்து விட்ட வேர்வை? துடைக்கத் துடிக்குதடா ? என்
முந்தானை ! விரிந்து
சுருங்குகிறதடா ? என் மாமியாரின் கண்களும், என்
முந்தானையும்,,,
உரசிக் கொண்டிருக்கிற என் மாமனாரிடம் சொல்கிறாள் ?
முந்தாணி ரொம்பத்தான்
விரியுதுன்னு,?விழியில் அலையடிக்கும் உப்பு நீர் முகம் பொத்தி அழுகின்றேன்?முத்தம் தந்து மூழ்கடித்தவனே இப்பயென்
முகம் பாரடா ?
முத்தாய் மூன்று பிள்ளை இடுப்பொடிய பெற்ற பின்னும்
முத்தழகாய் முன்னாலே
நிற்கின்றயெனைப் பாரடா ? என்னவனே ! உன்
முன்னால் நிற்கையிலே நீ சீரிளமைத் திறம் வியந்த நாட்களெல்லாம்
முன்வந்து சிரிக்குதடா
? என்னவனே ! வா ! உன் வண்ண முகம் திருப்பு !
மூச்சுக் காற்றில்
அனலடித்த நாட்களெல்லாம் பெருங்கனவாய் போனதடா?
முந்தி நெகிழத்
துயின்றதெல்லாம் முப்பத்தாறு நிலா நாட்களுக்கு,
முன்பானதல்லவா? என்னவனே ! இருட்டில் மட்டும் இணங்கி இருக்கவா?
முன்னிருட்டு வருமுன்னே
, வாசற்தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி,
முன்விழும் குழலொதுக்கிக்
காத்திருந்தேன்?.வெளிச்ச வரிகள் விழுவதற்கு
முன்னே கலைந்ததைச்
சீராக்கி,உனை நேராக்கி நான் அடுப்படியில் புகுந்த
முன்கதைச் சுருக்கம்
சொல்ல வைக்காதே ? என்னவனே ! வா! வண்ண
முகம் திருப்பு
! என்னவனே ! நீ திருடனடா ? திட்டத்தான் தோணுதடா ?
மூத்தோர் முன்,
எனைப் பார்க்கவுமா?பயப்படுகின்றாய்?நல்ல நடிகனடா நீ!
மூத்தவளுக்கு,பின்வந்த தம்பி தங்கைக்கு, எல்லோருக்கும் கடைவிரித்த நீ
முந்தி விரித்தவளை
மறந்தது, ஏனடா? என்னவனே! இத்தனை புலம்பியும்
முகம் திருப்புகிறாயா
? பார்,,, எத்தனடா? நீ! உன் மேல்ப் பித்தாகி ,பேயாகி
முன்னே நிற்கின்ற
, எனைப் பாரடா ? எல்லா பக்கமும் சுழல்கிற உன்
முட்டைக் கண்கள் என் திசை பார்க்க மட்டும் நாணுகிறதோ? வாடா! வா !
முன்னிருட்டு வரட்டும்
! நேற்றுடுத்த இரவுடையோடு நிற்கின்றேன் ? முந்தாநாள் சோற்றுச்சட்டியாய் சலனமற்று நானிருக்க,ஈயெனநீ மொய்க்க
முகம் பொத்தி இருக்கட்டுமா ? முக்காடிட்டுப் படுக்கட்டுமா?என்னவனே
! முப்பொழுதும் அடுப்படியில் சமைப்பதற்கும்,எப்பொழுதும்உன் வீட்டவரை
முகங்கோணாமற்
பார்ப்பதற்குமட்டும்தான் நானென்றால் ? என்னவனே !
மூச்சடங்கி விடத்
துடிக்குதடா ? உன் மூச்சுக் காற்றுக்காய் ஏங்குதடா ?
முயக்கத்தின் மயக்கத்தில்
முன்பிருந்த நிலா நாட்கள் இனி வருமோ ?
முத்தத்தின் சத்தத்தில்
விழித்தெழுந்த பிள்ளைகளின் துயிலசைந்தனால் நீ முடங்கிப் போனாயோ ? இல்லையில்லை,,என்னவனே
! நீ சித்தனடா ?
முன்பெல்லாம் முழப் பூவொடு , நீ வரும் வேளைக்காய்க் காத்திருந்தேன்
முழுதாய் தினந்தினம்பார்த்தவனே,கொஞ்சம்முகம் திருப்படா என்னவனே
முக்காட்டுக்காரி
எவளேனும் இருக்காளோ ? உன் மனசில் என்னவனே ! முழுசும் காட்டியவள் என் சக்களத்தி ஆனாளோ?அட என்னவனே !கொஞ்ச முகம் காட்டி விட்டு நீ திரும்படா? என் மனசு துடிக்குதுதடா?என்னவனே
!
No comments:
Post a Comment