Thursday, 19 September 2019


அதி காலையில் ,,,
மழைத்துளிகளுடன்,,மப்பும்,மந்தாரமுமாக இருந்த  இராமேஸ்வரம்  அக்னி தீர்த்தக் கடலில்  குளித்து,,,,,
மேலெல்லாம் அரிக்க,,,, இருபத்தியொரு தீர்த்தங்களிலும்,,,,நீராடி,,,,,!?
நீராடினாயா ? பிள்ளை,,,
இல்லை,, இல்லை,,,
நனைந்து,,,,,முடித்து  ராமநாதரை தரிசித்து விட்டு  வெளி வருகையில்,,,, பன்னிரண்டு  மணி வெயில் தகித்தது.
பக்கத்தில் உள்ள கோவில்களுக்கு செல்லலாமென்ற முடிவில் ஆட்டோ ஏறி ஸ்ரீராமர் பாதம் இருக்குமிடம் சென்றோம்,,,
 செருப்பினை ஆட்டோவிலேயே விட்டுச்செல்லுங்கள்,,,,, குரங்குகள் தூக்கிச் சென்றுவிடுமென்ற அறிவுறுத்தலில்,,, வெறும் கால்களில் நடந்த போது,,,, கால் தகித்தது,,,,

உயர கட்டிடம்,,,,
ஆல, அரச மரங்களின் நிழல் கொஞ்சம் இருக்க,,,,
படிக்கட்டுகள் உயர்ந்திருந்தன,,,,,
படிக்கட்டுகளின் இரு புறத்திலும்,,,துவார பாலகர்கள் என இருவர்  !
ஏறும் வழியில் வலது பக்கம் இருந்தவருக்கு வலதுகை இல்லை,,,, இடது கையினால்,,,, அவ்வப்போது பாஞ்சஜன்யமென சங்கெடுத்து ஊதிக்கொண்டிருந்தார்…

இடது கை பக்கம்,,, சற்றே அஜானுபாகுவாய்,,,தளர்ந்த முகத்துடன்,,,,, படிக்கட்டு சுவரில் தலை சாய்த்தபடி,, அவ்வப்போது கை நீட்டிக் கொண்டிருந்தார்…


வழக்கம் போலவே மனசு குறு குறுத்தது,,,,,
சில்லறை காசுகள் தேடி,,, சில்லறை இல்லை,,,என்று முணு முணுத்தபடி,,,,,,?
அதில் ஒரு ரூபாய் எடுத்துப் போட்டபடி,,, படிக்கட்டுகளேறினேன்,,,, 
இருந்தா போட்டிருப்பியா ? மனசு கேட்டது,,,கஞ்சன் மனசாட்சி கெக்கலித்தது,,,,

பொய் சொல்லக் கூடாது,,,, குரல் கேட்டது,,,,
யாரது,,,,? மனசாட்சியா ?
அடேய் பிள்ளாய்,,,,,,,
பொய் சொல்லக் கூடாதென நான் சொல்லுவேனாடா ?,,,,,
பொய்களிலே தானே,,,,?  சகடம் ஓடிக் கொண்டிருக்கிறது,,,,,! என்பதனை அறியாதவனா ? நான்,,,,,
பொய் மட்டும் சொல்லவே கூடாது,,,,, மீண்டும் குரல் கேட்டது,,,,,
படிக்கட்டுகளில் மேலேறிக் கொண்டிருந்த உறவுகள் சொல்லியிருக்குமோ ?
அவர்களோ ?
மூச்சு வாங்கியபடி,
படி  ஏறிக்  கொண்டிருந்தார்கள் ? இல்லை,,,, அவர்களில்லை,,,,
பின்னே,,, திரும்பிப் பார்த்தேன்,,,,,
அந்த அஜானு பாகுவான மனிதர் தான்,,,, !
படிக்கட்டு ஏறினேன்,,,,,

ராமர்,,,லங்காபுரிக்குப் போக,,,,இங்கே இருந்து தான்,,,,,, வானர சேனைகளுடன் கூட்டம் போட்டு கலந்தாலோசித்தார்,,,
இங்கே போட்டோ எடுக்கக் கூடாது,,,,
வெளிய போர்டு வச்சிருக்குப் பாருங்க,,,,
ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியோட  பாதம்,,,, நேரே நிக்காதீங்கோ,,,,
செல் போனை உள்ளே வையுங்கோ,,,போட்டோ எடுக்கக் கூடாது,,,,
சுற்றி வந்து பின்னால நின்னு பாருங்கோ,,,,
அர்ச்சகர் வாய் வலிக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்…
கருமமே கண்ணாக,,,,
ராமா,,,! ஸ்ரீராமா,,,,,
ஆலோசனைக் கூட்டத்திலயும்,,,,நின்று கொண்டே இருந்தாயோ ?
உன் பாதம் ,,இந்தக் கல்லிலே பதிந்திருந்திருக்கிறதே,,,,?
 எப்படி ஐயனே !
இப்பொழுதெல்லாம் கொஞ்சம் நடந்தாலே கால்கள் வலிக்கிறதடா !
ஆகையினால்,,,,,
உன் பத்ம பாதங்களைப் படமெடுத்து வைத்துக் கொள்கிறேன் ! 
என்றபடியே புகைப்படமெடுத்து விட்டு,,,,, மேல் மண்டபம் சென்று,,, இலங்காபுரி தெரிகிறதா ? என்று கண் சுருக்கியும்,,கண்ணாடி போட்டும் பார்த்தேன்,,,,,
தூரத்தில்,,,
இராமநாதசுவாமி கோவில் கோபுரம் மஞ்சள் வண்ணத்தில் தெரிந்தது,,,,
தொலைக்காட்சிக் கோபுரம் குதுப்மினாரை ஞாபகப்படுத்த நீண்டு உயர்ந்து நின்றது,,,,
இலங்கபுரி,,,
ஸ்ரீலங்கா,,,,
இலங்கை,,,
சேது பாலம்,,,,
தலை மன்னார்,,
ஒன்றும் தெரியவில்லை,,,,

ராமநாதரின் கோபுரம் பார்த்து,
கைகள் இரண்டும், தன்னிச்சையாய் கன்னத்தில் போட்டுக் கொண்டன ! மீண்டும் , மெல்ல  படிகளில் கீழிறங்கலானேன்,,,,,

மீண்டும்,,,,அந்தக் குரல்,,
பொய் சொல்லக் கூடாதென,,,,,!
ஐயா ! என்னாயிற்று,,,,,,உங்களுக்கு,,,,
அவரு பேச மாட்டாரு,,,,,பக்கத்திலிருந்து ஒரு குரல்,,,,,,
ஏன் ? பொய் சொல்லக் கூடாது,,,,,
நன்மை  பயக்குமெனின் பொய் சொல்லலாமுன்னு வள்ளுவரே சொல்லி இருக்காரு,,, !
 நாம மனுசங்க தான,,,என்கிறாயா ?
ஆமாங்,,,
ஹா,,ஹா,,,, பொய்யப்பா,,,,,
இல்லிங்,,மெய்,,,,,
மெய்யென்று ,,,,,பொய்யே சொல்லிக் கொண்டிருந்தா,,,,, வாழ்க்க இங்க,,,இந்த எடத்துல தான் கொண்டு விடும்,,,
புரியல,,,,,,,,,,,,,,,,
ஒருத்தங்கிட்ட நீ உண்மை மட்டுமே பேசினா,,,,,,நீ சத்யவான் ஆயிர முடியாது,,,,
ஏன் ?
நீ யாருகிட்ட உண்மையை மட்டும் பேசுறியோ ?,,அதக் கேக்கிற அந்த எதிராளியும்,,,உங்கிட்ட உண்மையைத்தான் பேசணும்,,,, அப்பத்தான் அது சத்தியம்,,,உண்மை,,வாய்மை,,,புண்ணாக்கு,பொடலங்காய் ,,,எல்லாம்,,,
நீங்க ரொம்ப கோபப் படுதிய,,,
கோவமெல்லாம் இல்ல,,,,ஆத்தாமை,,,,,
அவரப் பேச வைக்காதீயன்னு சொன்னேன,, கேட்டியா,,,?    அவரு பேச மாட்டாருன்னு சொன்ன  அந்த பழைய குரல்,,,,
எனக்கொன்னும் புரியலை,,,,,,
ஒன்னுமில்ல போ,,,,,
இல்ல,,,சொல்லுங்க தெரிஞ்சுக்கறென்,,,,

இப்ப,,,பசிக்கு,,,
அந்த மாங்கா திங்கணும் போல இருக்கு,,,,,

எங்கிட்ட ரவாலாடு இருக்கு,,,,பையிலிருந்து உறவுகள் கொண்டு வந்த ரவாலாடு எடுத்தேன்,,,,

ஹா,,ஹா,,,,எனக்கு இப்ப மாங்கா திங்கணும் போலத்தான் இருக்கு,,,,
கீழே,,,மாங்காய்ப் பத்தைக் கீற்றுகளாகப் போட்டு வித்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தார்,,,,
மாங்கா எவ்வளவு,,,
இருவது ரூவா,,,,

இருவதா ?
ஆமா
இந்தாங்க,,,ஐம்பது ரூவாவை நீட்டினேன்,,,,,
மாங்காய்யும்,,மூன்று பத்து ரூவா  நாணயமாய்க்  கொடுத்தா,,

இது செல்லுமா ?
வேண்டாம்,,,,நோட்டாக் கொடு,,,

இல்ல்ல,,,, இதான் இருக்கு,,,,,வேணான்னா,,மாங்காயை வச்சிரு,,,,
நான் விழித்தேன்,,,,,பேசாமல்,,,திரும்பி நடந்தேன்,,,,
அவர் !
சிரித்துக் கொண்டிருந்தார் ,,,,
குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தார்,,,,,,
சிரித்துக் கொண்டிருந்ததில்,,அவரின் பெருத்த உடல் ஆடிக் கொண்டிருந்தது.
மாங்காயை நீட்டினேன்,,,,அவரிடம்,,,,,
என்னா ?
அத்தனையும் சில்லறையா வந்துடுச்சா,,,,,,,?
பத்து ரூவா மாங்காயை இருவது ரூவாக்கி வாங்கினையா ?
பாக்கெட்டில இருக்கிற சில்லறைகளில் ஒத்தை ரூவாயை பொறுக்கி எடுத்துக் கொடுத்தியே ?
இது,,இது தான் வாழ்க்க,,,,,,,,,,,,,,,,,,,,
ஓ !
ஞானம் பிறந்த கதை இது தானோ ?
அட,,,
இங்கேயும்,,,
அரச மரத்தடி நிழல் தான்,,,,
அட,,,இது தானே ? போதி மரம் !,,,,,,
ஞானம் இங்கும் கிடைக்கும்,,,! விளம்பரப் பலகை வைத்திடலாமோ ?

என்னப்பா,,,,,
ரொம்ப யோசிக்கிற,,,,?
இன்னமும் யோசிச்சா,,,,இந்த வெள்ளைத்தலை,,,பழுப்புத் தலையா மாறிடும்,,,பா

நான்,,மெல்ல இதழ் திறந்தேன்,,,
புன்னகை கீற்று படர்ந்தது,,,,,

வாயத் தொறந்து தான் சிரி,,,

ம்ம்

நானும்,,,இப்படித்தான்,,,,
ஒரு காலத்துல,,,,
நல்லா சிரிச்சதில்ல,,,நல்லா சாப்பிட்டதில்ல,,,,,,,,ஓடி,,ஓடி,,,உழைச்சேன்,,,,
ஒரு கம்பெனில  அதிகாரியா இருந்தேன்,,,,
கை நிறைய சம்பாதிச்சேன்,,,,,
எனக்குன்னு,,,ஐஞ்சு பைசா செலவழிக்க மாட்டேன்,,,
கடையில,,ஒரு டீ கூட சாப்பிட மாட்டேன்,,,,,பீடி சிகரெட் , தண்னி,,இதுக பக்கமெல்லாம் போனதேயில்லை,,,,
சம்பாதிச்ச காசை எல்லாம்,,,,, அப்படியே அவ கையில தான் கொடுத்தேன்,,,,,  அவ,,,பாத்துப்பா,,,எல்லாத்தையும்,,அவ பாத்துப்பான்னு இருந்தேன்,,,,,,

அவ பாத்துகிட்டா,,,,,
தன்னை மட்டும்,,,,  கையில காசு இருந்தா,,,உறவும்,,,நட்புகளும்,,ஈ மொய்க்கிற மாதிரி மொய்க்குமுல்லா,,,,இதுல கூடா,,நட்பு,,,, வேற,,,,
என்னத்தச் சொல்ல,,,,,,

போன  வருக்ஷம் இந்த செப்டம்பர்ல தான் ரிட்டயர்டு ஆனேன்,,,,,
கடந்த சொதந்திர தெனத்தன்னிக்குத் தான் அவகிட்ட கேட்டேன்,,,, தாயீ,,,, அடுத்த மாசம் ரிட்டயர்டு,,, இன்னும்,,ஒரு மாசந்தான்,,,,இந்த ஓட்டமெல்லாம்,,, அப்புறம்,,,,தாண்டி,,,வாழ்க்கைய அனுபவிக்கணுமுன்னேன்,,,,,

அதுக்கு,,அவ,,கேட்டா,,,,,,
அப்புறம் சும்மாவா,,,? இருப்பீங்க,,,,,
அப்புறம் என்னத்த திம்பீங்க,,,,,?

எம்மா,,,,,தாயீ,,,,,இவ்வளவு வருக்ஷமா ? வாங்கின சம்பளத்த  அப்படியே உங்கிட்ட தான கொடுத்தேன்,,,,

ம்ம்ம்
இப்ப,,,எவ்வளவு பாங்க்ல இருக்கு,,,,,
எடங் கிடம் வாங்கிப் போட்டிருக்கியா ?
வூடு கட்டணுமுன்னு சொன்னியே,,,,? இப்ப எப்படி இருக்கு,,,,?
ஆமா,,,,
நம்ம எடம் எங்க இருக்கு  ?

நம்ம எடமா ?

அதான்மா  ஒம் பேர்ல வாங்கின எடந்தான்,,,,

அது கெடக்கு,,,அங்கயே,,,

காசு பணமெல்லாம்,,,,ஏது,,,,?
வாங்கிட்டு வந்த சம்பளம்,,வாய்க்கும்,,வயித்துக்குமே பத்தல,,,, அதுல,,,,

செல் போன் மணியடிக்கிறது,,,,

அவள் பேசுகிறாள்,,,,!,,இன்னிக்கா,,,
இப்பவா,,,?,,,,
அந்தாளு இருக்கான்,,,, நாளைக்கு மார்னிங் வச்சுக்கலாமா ?

யாரும்மா,,,?
யாரா இருந்தா ? உனக்கென்ன ? எம் பிரண்ட்  சரசு,,,

எந்த சரசு ?

என்னா,,எந்த சரசா ?,,,,ஏன் ?
அவகிட்ட ஒரசுனுமோ ? வயசாச்சுங்கிற நெனைப்பு இருக்கட்டும்,,,
புத்தி போகுது பார்,,புத்தி,,,,
நான் என்னம்மா ? சொல்லிட்டேன்,,,,

ஒனும் சொல்லாண்டாம்,,, போயி,,படு,,,,
கொஞ்சம் வெளிய போயிட்டு வாரேன்,,,,

மணி பத்தாச்சு,,,இந்நேரத்துல,,எங்கம்மா ?,,

ஒன்னும் ஓடிற மாட்டேன்,,,,
துக்கம் வரல,,,,மெடிக்கல் ஸ்டோருக்குப் போயிட்டு,,,,அப்படியே சரசைப் பாத்துட்டு,,,, வாரேன்,,,,காலையில செஞ்ச இட்லி இருக்கு,,, இட்லிப் பொடி வச்சு சாப்பிடு,,,,ன்னுட்டுப் போனவ,,, ராத்திரி ஒரு மணிக்கு வந்தா,,,,,
ஒரு மாதிரி வாசம் அடிச்சது,,,,,

எனக்கு அதெல்லாம் பழக்கமில்லாத  வாசம்ம்,,,,
என்னத்தச்  சாப்பிட்ட,,,,

அவ சிரிச்சா,,,,
மனசு வெறுத்துச்சு,,,,,
நாஞ் சாப்பிட்டுட்டேன்,,,,,
நீ சாப்பிட்டேல்லே,,,,,, போட்டுச் சென்ற டிரஸைக் கூடக் கழட்டலை,,,,படுத்துட்டா,,,, அவ தலையிலிருந்து , மல்லிகைப் பூச் சரங்கள்,,, சரம்,,சரமாய் வாசம் வீசிக் கொண்டிருந்தது,,,,

பூ வாசம்,,தல வலிச்சது,,,,
வெளிய வந்து படுத்துட்டேன்,,,,,,,
தூக்கம் வரலை,,,,
புரண்டு புரண்டு படுத்துட்டிருந்தேன்,,,,,
மனசு கேக்கலை,,,,,
மூணு மணி இருக்கும்,,,, எழுந்து படுக்கை அறைக்குள் சென்றேன்,,,,,
யாரோ ஒருவன்,,,அவளின் செல் போனில்,,,,இளித்தபடி,,,, நேரலையில் முத்தம் கேட்டுக் கொண்டிருந்தான்,,,,,  -இந்த வயதில் -
வலித்தது,,,,,,
உலகம் ரொம்பத் தான் முன்னேறி இருக்கு ,,,,
நாம தான்,,,, இன்னமும்,,அப்படியே,,,,
விடியல,,,,,
இன்னும்,,நேரமிருக்கு,,,,,

பசித்தது,,,,,,,
அடுக்களையில,,,அடுப்பின் மேல இருந்த இட்லியில்,,,,கரப்பான் பூச்சி ஊர்ந்து கொண்டிருந்தது,,,,,
பைப்பில் தண்ணீர் புடிச்சுக் குடித்தேன்,,,,உப்புக் கரித்தது,,,,,
முன்னறைக்கு வந்தேன்,,,,,
பீரோவைத் தொறந்தேன்,,,,,,
பட்டுப் புடவைகள்,,,விதம் விதமாய்,,,,,, இதெல்லாம்,,எப்ப எடுத்தது,,,?
நாலு வருக்ஷத்துக்கு முன்ன எடுத்த பேண்ட்டும்,சர்ட்டும்,,,,என்னைப் பார்த்து சிரித்தது போல இருந்தது,,,,
என் டிரஸ்களையெல்லாம் எடுத்து வைக்கப் போனவன் கண்ணில்,,, பாங்க் பாஸ் புத்தகம் கண்ணில் பட்டது,,,,,,
என் பெயரிட்ட பாங்க் பாஸ் புத்தகத்தில் 674 ரூபாய் இருந்தது,,,மினிமம் பேலன்ஸ்,,,மூன்றாயிரம் அல்லவா ?,,,,,
அவள் பேரிட்ட பாஸ் புக்கில்,,, 2500 இருந்தது,,,,,
சிரித்தேன்,,,,,
இது,,
ஒட்டைப் பானை,,,,
இது காலிப் பெருங்காய டப்பா,,,
எல்லாம்,,,
இன்னும்,,ஒன்னரை மாதம் தான்,,,,, அதற்கப்புறம்,,,,,,,
காதற்ற ஊசியும் கடை வழிக்கு வாராது காண்,,,,,!

பட்டினத்துச் செட்டி கதை தான்,,,,,
இனி,,,
சூட்கேஸ் எதற்கு ?
ஆடைகள் எதற்கு ?
வேண்டாம்,,,,ஒன்றும் வேண்டாம்,,,,, எப்ப்பவோ ? திருச்செந்தூர் முருகங் கொவிலுக்குப் போறப்ப எடுத்த காவி வேட்டி கண்ணில் பட்டது,,,,,
இடுப்பில் சுற்றினேன்,,,
வீடு விட்டு தெருவில் இறங்கினேன்,,,,,
இதோ,,,
இப்ப,,,இங்க,,,,,

பிள்ளைங்க்க,,,,

அதுக,,,வைகை ஆத்துல மரம் வளருக மாதிரி வளர்ந்துச்சு,,,, இப்ப,,,
நாலும்,,நாலு தெசையில இருக்கு,,,,,

அந்தம்மா,,,,,,,

அதோ,,,,, அங்க,,,, தூரத்துல,,,,, அந்த அரச மரத்தடி நெழல்ல தூங்கிட்டு இருக்கா பாரு…….

அப்பா,,அம்மாவும்,,உங்க கூடத்தான இருக்காங்க,,,,,
இல்ல,,,,
நீ,,என்கிட்ட பேசிட்டு இருக்கும் போது , இந்த மாசத்துக்கான பணத்தை  வாங்க ஆட்டோவுல வந்தா ?,,,,
உன்கிட்ட,,நூறு ரூபாய்க்கு குறையாம வாங்கிருன்னு  சைகையில சொல்லிட்டு , களைப்புல படுத்திருக்கா,,,,, இப்ப அவளுக்கு சுகர் கொஞ்சம் ஜாஸ்தி,,,, அதான்,,,,

ஏன் ? கொடுக்கிறீங்க,,,,
விட்டதுடா ? சனியன் விளாம்பழத்து ஓட்டோடன்னு,,,, வந்துட்டீங்கல்லே,,, அப்புறமெதுக்கு,,,
இங்க பிச்சையெடுத்து,,,
அந்தம்மாக்கு கொடுக்குறீங்க,,,,,,,,

இது தான் வாழ்க்கை,,,
இதத்தான்,,,,,
லிபின்னு,,சொன்னாய்ங்க,,,
அன்னு எழுதுன,,எழுத்து,,,அழிச்சு எழுத முடியாத தலையெழுத்துங்குகிறது இது தான்,,,,

நான்,,
எல்லாத்தையும்,,,
அவகிட்ட சொன்னேன்,,,அவளுக்கு  மட்டுமில்ல,,,,,எல்லாத்துக்கும் உண்மையா இருந்தேன்,,,,,

ஆனா,,,,,
எனக்கு,,,,,பொய்,,பொய்கள் மட்டுமே பரிசா கிடச்சுது,,,,
இப்பவும்,,,அவ,,என்கிட்ட நடிக்கிறா,,,
இன்னமும்,,கிறுக்கன்,,பொழைக்கத் தெரியாதவன்னு,,,,பேசுறா,,,,
எனக்கும்,,எதுவுமே தெரியாத மாதிரி,,,,,,நானும்,,நடிக்கிறென்,,தான்,,,,
ஆனா,,,பொய் பேசலை,,,,
வாயத் தொறந்து பேசினாத் தானே பொய் பேசணும்,,,

அதான்,,,
அந்த  சங்கூதி சொன்ன மாதிரி,,,
யாருட்டயும்,,பேசுறதுல்லே,,,வாய தைச்சுட்டேன்,,,


நான்,,இப்ப,,
உங்களுக்கு நூறு ரூவா,,தரணுமா ?

இல்ல,,,வேண்டாம்,,,,
ரொம்ப நாளக்கி அப்புறம்,,,,
எங்கப்பனப் பாத்துப் பேசின மாதிரி இருக்கு,,,,
உங்கிட்ட பேசுனது,,,,

என்கிட்ட பேசுறது,,உங்கப்பா கிட்ட பேசுற மாதிரியா ?,,
நான் உங்களை விட ரொம்ப சின்னவன்,,,,

ஆமாம்,,சின்னவன் தான்,,,
ஆனா,,உன் நரைச்ச தல சொல்லுது,,,,, உன் அனுபவத்தை,,,,
எவங்கிட்டயும் சொல்லாம  வச்சிருந்தேன்,,
இப்ப  ஒங்கிட்ட கொட்டிட்டேன்,,,
இன்னிக்கு ,,நல்லா உறங்குவேன்,,,,

மாங்கா சாப்பிடவே இல்ல,,,,,
ம்ம்,,
இந்தா,,,
நீயும் சாப்பிடு,,,,,
ரெண்டு கீத்து மாங்கா பத்தைகள்,,இப்ப என் கைகளில்,,,,,,

சாப்பிட்டுட்டுப் போ,,,,, அந்த பழைய குரல்,,,,,

தூரத்தில் ஆட்டோ ஹாரன் சத்தம்,,,,,
சகோதர் கணவர் கையசைத்தார்,,,,மெல்ல ஆட்டோ அருகில் சென்றேன்,,,,
நீ,,,அந்த சாமியாருட்ட பேசிட்டு இருந்தேய்ல்லா,,,
அந்த நேரத்துல,,,,,நாங்க,,,அந்த,,
சாட்சி ஆஞ்சநேயர் கோவிலுக்கும் போயிட்டு திரும்பவும் வந்துட்டோம்,,, இப்பத்தான் கிறுக்கன் மாதிரி நீ வார,,,,, தங்கை சொன்னாள் !

எங்க,,,?
சாட்சி ஆஞ்சநேயர் கோயில்,,,,,,,

மாங்காயை வாயிலிட்டேன்,,,,
தூவியிருந்த மிளகாய்த் தூள் எரித்தது,,,
மாங்காய் புளித்தது,,,,
என் கண்களில் கண்ணீர் உப்புக் கரித்தது,,,,,,
ஓ !
நானும்,,,
சாட்சி ஆஞ்சநேயர் தானோ ?
இல்லை,,,,
சாட்சிக் குரங்கு,,,,,,
என் கண்களில் உப்புக் கரிக்கும் கண்ணீர் !
ஏனென்று புரியாமல்,,,,உறவுகள் ஒவ்வொன்றும்,,,,,
இந்த, என்  கண்ணீருக்கு ஒவ்வொரு காரணம் கற்பிக்கும்,,,,,,,

ஆட்டோவில் ஏறி,,,
திரும்புகையில்,,,,
அவர் ! என்னையே பார்த்துக் கொண்டிருந்தார் !

நான்,,
மூன்று பேர் செல்கிற ஆட்டோவில்,,,,,
ஏழாவது ஆளாய் ,,,, சாட்சிக் குரங்காய்,,,, ஏறி ஒடுங்கி அமர்ந்தேன்…





Tuesday, 23 July 2019




நம் புகலே எனவந்த நந்தகுல மானிடர்க்கும்,
நம்புகலே என நின்ற நந்தகுல கோக்களுக்கும்,
நம் புகலிடம் தான் இதுவென்று ஒற்றைவிரல் நீட்டி,
நம்புகலிடந் தனைக்காட்டிக் கோவர்த்தனந்தூக்கி,

நின்றவனே ! நந்தகுல மாதவனே ! நெடுமாலாய்
நின்றவனே ! ஓரைந்து இல்லங்கேட்ட தூதுவனே ! சாரதியாய்
நின்றவனே ! துரியரினமழித்த மாலவனே ! திருமாலாய்
நின்றவனே ! பீக்ஷ்ம, கர்ணனுக்கும் பெருந்திருக்காட்சி தந்த கோவிந்தா !

உனைச் சூழ்ந்த கோகுலத்தார்க்கு கண்ணன்!  ஆனாய் !
உனைச் சூழ்ந்த கோபியர்க்கு கிருக்ஷ்ணன்!  ஆனாய் !
உனைச் சூழ்ந்த கோக்களிக்கோ கோவிந்தன் ! ஆனாய் !
உனைச் சுமந்த கோவினை, நீ சுமக்க ! என்னவானாய் ?

Wednesday, 26 June 2019

எண்ணம்

எண்ணம் !


மன்னவன் மயங்குதற்கே மல்லிகை மலர்ச்சரங்கள் !தலையேறும், மண்ணில் பிடித்து வைத்த பிள்ளையாரென,எம் மன்னவனும் மண்டியிட வேண்டுமென் முன்னாலே ? இம் மண்ணில் மங்கையென் போல் எவளுமில்லையெனும் எண்ணம் ! கொண்டவனும், கொடுத்தவனும், தந்த பொன்னெனக்குப் போதவில்லை, கண்டவளும், எனக்கடுத்தவளும், அணிந்த பொன்போல் வேண்டுமடா ? அண்டவரும் , அடுத்தவரும், அடுப்படியே, பின்வாசல், கதவருகேயிருக்க, கொண்டுவந்த பொருளெல்லாம் எந்தனுக்கே யெனும் எண்ணம் ! தலைவாசல் படியருகே இடித்த தலைகண்டு நகைத்ததெல்லாம், மலைவாசத் தலம் சுற்றி வருகையிலே மறக்குமென்றால், இலைவாசச் சோறூட்டி, இடுப்புத் துணி நெகிழ்த்தி இதயக் கதவருகே முலைவாசங் காட்டுகையில் , மயங்கித்தான் கிடந்திடுவானெனும் எண்ணம் ! கொண்டவளை என் செய்ய ? கொள்ள முடியலையே ? தன் எண்ணமெலாம், விண்டவளை என் செய்ய ? கொல்லவும் முடியலையே ?என் எண்ணமெலாம், கண்டவளை என் செய்ய ? எந்தையின் தங்கை மகள் என்பதனால், மனைவந்த, பண்டவளை என் செய்ய ? ஏற்றதொரு எண்ணமதை எண்ணிச் சொல்வீரோ ?

சீக்காளி

சீக்காளி

பெத்தும் கொடுக்கவில்லைத் தாய்ப்பாலை பொறந்த பிள்ளை அழுகிறது ? பசியாலே,,, பொத்திக் காக்கின்றாள் ! , தன்னழகைச் சீராக,, பொறந்த பிள்ளை பின்னாளில் ஆகின்றான்? சீக்காளி ! செத்தும் கொடுத்த, சீதக்காதிப் பிறப்பானென்று, கெத்துக் காட்டிவந்த, சீதப்பால்ப் பிறந்தபிள்ளை பொத்திக் காத்து வச்ச சீர்க்காரிப் பெற்ற பிள்ளை, கொத்தி இருமுகிறான் ? சீக்காளி ஆனதனால்,,,, வீட்டுக் காவலுக்கு செல்லமாய் வளர்க்கும் நாய்கூட தொட்டுத் தாவுகின்ற செல்லகுட்டிக்கு வார்க்கிறது, தாய்ப்பாலை வீட்டுக்கும், நாட்டுக்கும், செல்வமென பிறந்த பிள்ளையதோ? தொட்டாற் சிணுங்கியென சீக்காளிக் குரங்காகி நிற்கிறது. முந்தி சரிந்தபடி, முன்னூறு நாள் சுமந்தபடி பெத்தவனை முந்தானைச் சரித்தபடி, முகம் மட்டும் திறந்தபடி, பொன்னான முத்தமொன்று சிரித்தபடி, முகங்காட்டிச், சீர்மல்கும் தாய்ப்பாலை, சத்தமின்றி கொடுத்திருந்தால், ஆகியிருக்க மாட்டானே ? சீக்காளி !

தொலை நோக்கு

தொலை நோக்கு -
ஒற்றை வில்லுண்டு கையில், நூற்றைந்து பேருக்கும், கற்றை அம்பில்லை பையில், நாற்றுப்புல் கொண்டு, அற்றை திங்களில் வையலில், வந்த துரோணகுரு, மற்றை ஒருவித்தை கற்க, மாமரக் கிளித்தலை தெரிகிறதா என்க, மற்றை மக்கள் எல்லாம், மரம் கிளை, இலை, தெரியுதென்க, குற்றை குணம் கொண்டு குரு தகிக்க, குந்தியவள் மூன்றாம் மகன், சற்றேவிழிசுருக்கி,கிளித்தலை வரிமட்டும் தெரியுதென்க, கற்றே விட்டான் !"தொலை நோக்கு " என்றே குரு மகிழ்ந்த கதை அறிவீரா?

Wednesday, 19 June 2019

செப்பறைச் சாமி

அவனுக்குப் பசித்தது,,,
அவனுடன்,
நடந்தவனுக்கும் பசித்தது,,,

அவர்களுக்கு முன்னால்,,
நடந்து கொண்டிருந்தவருக்கும் பசிக்கிறது,,போல
அவர்களுக்குப் பசித்தது,,,,,,,,,,,

அவரைப் பாத்தா,,, ஊருக்குப் புதுசு போலத்தான் இருக்கு,,,,? என்னன்னுதான் கேப்போம்,,,, எந்த ஊருவே ? பதில் சொல்லாமல்,,, அவர் நடந்து கொண்டிருந்தார்,,, கொஞ்சம்,, தள்ளாடியபடி,,, கொஞ்சம் விந்தியபடி,,,,, லே மக்கா ! அவந்தான் மப்புல போறான் போல இருக்குலே,, அட,,அது ஒன்னுமில்லைலே,, பசி மயக்கமாட்டும் இருக்கலாமில்லே,,, பாத்தா பாவமாட்டும் ? இருக்கு வே,,, ஒம்மைத்தான் வே,,, கூப்புடுதம் இல்ல,, ஏன்னு கேக்குறது,,,, நடந்தவர்,, மெல்லத்திரும்பிப் பார்க்கிறார்,,, ஒங்களுக்கு என்னலே வேணும்,,, ஹேய்,,,அடப் பாத்தீயாலே,,, பெருசு,,நம்மூர் போலத்தான் இருக்கு,,,? நம்மூர்ல யாரு வீட்டுக்குப் போகுதிய,,, கூத்தன் விட்டுக்குத்தான்,,,, கூத்தனா ? அட,,யாரைச் சொல்லுதீய,, ஓ,,அந்த பாவக்கூத்து நடத்துவாரே,, அந்த பாட்டா வீட்டுக்கா ? மெல்லத் தலையாட்டிய படியே,,, நடந்தார்,, ஆமாம்,,? அவர் தலையாட்டினாரா ? அந்த பாட்டா,,செத்து ஏழெட்டு வருசமாச்சே,,,? அவரில்லை,,, ஓ,, அந்த கணியாங் கூத்து,,, அதான்.. ஆம்பளையே,,,பொம்ப்ளை மாதிரி வேசங்கட்டி மையானங் கோவில்ல ஆடுவாகளே,,அந்த அண்ணாச்சி வீட்டுக்கா,,,? அவன் மெல்லத் திரும்ப,,,, அந்த கூத்தாடுகிற அண்ணாச்சி ஒசரவிளை கோயில்ல கொடைன்னுட்டு, படை பட்டாளத்தோட,,, நேத்து தான போனாரு,,, ஏன்,, ஒங்கூரு கோயில்ல,, கணியாங்கூத்து நடக்காதா ? அதெல்லாம்,,,நாங்க பொறக்கதுக்கு முன்னால நடந்துச்சு,,இப்ப,,,, ஆர்கெஸ்ட்ரா,,, இல்லைன்னா,,விசய் டிவி காரனைக் கூட்டிட்டு வந்து நிகழ்ச்சிநடத்துவோம்,,, அப்படின்னா,, உங்கூர்ல,,உள்ளூர்காரனுக்கு மதிப்பு இல்லே,,அப்டித்தான,,,,,


ம்ம்,,,
எங்களின் பதிலில் சத்தமே வரலை,,,, ஆமா,,, இது ராசவல்லிபுரத்துக்கு போற பாதைதானே,,,, ? ஆமா,, அதாஞ் சொல்லிட்டமுல்லா,,,, நீங்க தேடி வந்த கூத்தர் ஊரில இல்லேன்னுட்டு,,,, அப்படியெல்லாம்,, சொல்லப்பிடாது,,, அவன்,, அங்கதான் இருக்கான்,,

உள்ளூர்காரன்,,
நாங்க சொல்லுதோம்,,,
எங்களுக்குத் தெரியாம எவன்வே,,,?,,,கூத்தன்,,,,,,,,,,


லே,,மக்கா,,
பொறுலே,,,,,,,,,,,,,
நம்மூர்லே,,,நாம கூப்பிடுகதுக்கு ஒரு பேரு,,,
பள்ளியோடத்துல ஒரு பேருன்னு வச்சிருப்பாவல்லா,,,, அப்படி யாராவது இருக்கும்,, எதுக்கும்,,இன்னும் கொஞ்சம் பொறுமையா,,கேளுடே,,,

இவ்வளவு பேசுகோம்,,,,
ஆனாலும்,,,
அவரும்,,
நடக்குறதை நிப்பாட்டல்ல,,,,,,,
நாமளும்,,, கிறுக்கனாட்டம்,,இவரு பின்னாலேயே நடந்துட்டு இருக்கோம்,,,,


முன்னால,,நடந்து கொண்டிருந்தவர்,,
திடீரென நின்றார்,,,
முகத்தில் புன்னகை,,,,
கை கூப்பினார்,,,,! மெல்லச் சிரித்தார்,,,

பெரிசு சிரிக்குதாரு,,
யாரைப் பாத்து வே சிரிக்கேறு,,,

அவர்,,
கை நீட்டினார்,,
எவரேனும்,,வருகிறார்களா ?
இல்லை,,

இல்லவே இல்லை,,
இந்த வெயிலில்,,,
சுட்டெரிக்கிற,,இந்த வெயிலில்,,,
எவர் வருவார்,,வெளியே,,,?
ஒருத்தனையும்,,காணோம்,,,ஆனா,,,
நேரில,,ஆளைப் பாத்த மாதிரியே,,கும்புடுதாரே,,,,


ஏதும்,,புரியவில்லை,,எங்களுக்கு,,,?
கை கூப்பிக் கொண்டிருந்த பெருசு,,
வெயிலில்,,பொத்தென்று,,சாலையில்,,,,சரிந்தார்,,,

போன மாசத்துல போட்ட,,தார் ரோடு,,,!
வெயிலில்,,
தகித்த தார் ரோடு,,,
அங்கங்கே,,
தார் இளகி,,,கானல் நீர் காட்டிக் கொண்டிருந்த தார் ரோடு,,,
சரிந்து கிடந்த,,அவரின் உடல்,,,மெல்லத் துடித்தது,,,

லே மக்கா,,
தூக்குல,,,

மெல்லலே,,மெல்ல,,,
பாத்துப் புடி,,,
அந்த பனை மர நெழலுக்குக் கொண்டு போயிருவோம்,,,

மூச்சுத் திணறிற்று,,,
கனத்த நீண்ட உடல்,,,
நாங்க இளவட்டமுல்லா,,,,,,,,,,,
நேத்து,,, குமராண்டி போத்தி,,
எங்களப் பாத்து சிரித்தபடி கொமைச்சது,,இப்ப தெரியுது,,,

லே,,மக்கா,,,
முகத்துல,,தண்ணி தெளிக்கலாமா ?

தண்ணிக்கு,,எங்க போவ,,,?

குடிக்க ஏதாச்சும் கொடுக்கலாமா ?

எதைக் கொடுப்ப,,,?

லே மக்கா,,, பெருசுக்கு லோ சுகரு இருக்குமோ ?

வந்துட்டான்,,போலே,,
இவம் பெரிய டாக்டரு,,,,,

அதில்ல மக்கா,,வாட்சாப்ல படிச்சேன்,,,,

நீ,,
வாட்சாப்ல,,படிச்ச,,,
நம்பிட்டோம்,, லே,,ஆகுறதைப் பாருலே,,
நானே பர்தவிச்சுட்டு இருக்கேன்

இங்க பாரேன்,,,வாட்சாப்ல,,,
படி,,

ம்ம்,,,
ஆமாம்,,,
அப்படின்னா,,முதல்ல,,,
அவருக்கு இனிப்பா,,ஏதாவது கொடுக்கணும்,,,
இந்த
கல்கோனா முட்டாசியைக் கொடுப்பமா ?

லே,,நீ
கிறுக்கனாலே,,,நீ,,
மூணு முட்டாசி வாங்கிணோம்,,,
ஆளுக்கொன்னு தின்னுட்டு,,இந்த ஒன்னை பங்கு வைக்க ஒடைக்க முடியாமத்தானே,,
பாக்கெட்டுல போட்டிருக்க,,,
இதைக் கொடுத்து,,அது கரைஞ்சு,,,
அது்க்குள்ள,,அவரு பரதேசம் போயிருவாரு,,,

இப்ப என்ன செய்யலாம்,,,
செனம்,,ஒரு முடிவெடு,, என்று சொல்லிய போது,,,
இந்த வறட்சியிலும்,,காயாம,,பனை மரங்கள் காற்றிலாடியது,,,
லே இவனே,,
பனையில கலயம் கட்டியிருக்குலே,,,

ஒடினான்,,,
மெல்ல,,பனை மரத்தைத் தொட்டுக் கும்பிட்டான்,,,
பனையை,,மெல்லக் கட்டி பிடித்தான்,,,

சரசரவென்று பனையேற ஆரம்பித்தான்,,,
கீழே பாத்தா,,கால் நடுக்கம் அதிகமாகும்,,
இதுக்கு முன்னால பனை ஏறியதில்லை,,,
ஏதோ ஒரு வேகத்துல,,பனை ஏற ஆரம்பிச்சாச்சு,,,
முன் வச்ச கால பின் வக்க கூடாதுள்ளா,,,,

லே,,பாத்துலே,,,
பாத்துல,,

கீழிருந்து,,,கத்துகிறான்,,,
பெரிசிடம்,,அசைவில்லை,,,

பெரியவரைப் பாக்க தோணுது,,
வேண்டாம்,,
முதல்ல கலயத்தை கீழ இறக்குவோம்,,இப்பத்தைக்கி,,இந்த பயினியை விட்டா,,வேற நாதியில்ல,,,

சாமி,புள்ளாயாரப்பா,,,காப்பாத்துப்பா,,,
உச்சிக்கு வந்தாச்சு,,,
கலயத்தை மெல்ல அவுத்தாச்சு,,,
எப்படிக் கீழ,,
சிந்தாம கொண்டு போறது,,,,
அதும்ம்
கலயத்துல,,பாதி கூட பயினி இல்ல,,,
பனைக்க ஒடமஸ்தக்காரன் பாத்தா,,இன்னிக்கு நாம் காலி,,தான்,,,
அதெல்லாம்,,,அப்புறம் பாத்துக்குவம்,,
இப்ப,,என்ன செய்ய,,,
எப்படியாவது பயினி கலயத்தைக் கீழக் கொண்டு போயாகனும்,,,,,,

பனை வாரியை,,இறுகப் பிடித்தபடி,,, முதுகுத் தோளில்,,
கலயத்தைக் கட்டியபடி,,, இறங்க எத்தனிக்கையில்,,
தூரத்தே,,,,
கோபுரம்,,,!
செப்பறை சாமி கோவில் கோபுரம்,,,
ஆஹா,,
சாமிக்க பேரு,,,
கூத்தன்னுல்லா,,,
அதுவும்,,அழகிய கூத்தன் அல்லவா ?


செப்பறை சாமி,,காப்பாத்துப்பா,,,,
கண்ணில் நீர் திரண்டது,,,

இறங்கையில,,,வேகமா,,இறங்கி,,,

பனை மூட்டுக்கு கிட்ட வரயில,,,

பாத்து மக்கா,,,பாத்து,,,

லே,,,பயினின்னா,,சுண்ணாம்பு சேர்மானம் பண்ணனுமில்லா,,,இலாட்டா,,கள்ளுல்லா,,,
ஏற்கெனவே,,
பெருசு மயக்கத்துல,,இருக்கு,,,

லே,,,
அதெல்லாம்,,ஒன்னும் இல்ல,,
நீ வேற,, இனிக்கத்தான் செய்யும்,,,
ஒடினோம்,,,

பனை மர நிழல் விலகி இருந்தது,,
மெல்ல,,மெல்ல,,
அவரை தூக்கி இருக்க வச்சு,,
அவரு வாயில,,பயினியைக் கொடுக்கையில,,,
பாதி பயினி,,,உடுப்புல வழிஞ்சது,,,

அந்த பயினி,, ஒரு வாய்,,
உள்ள போனதும்ம்,
அவர் அசைய ஆரம்பித்தார்.,,,
கண் திறந்தது,,

பெரியவ்றே,,
இன்னும்,,கொஞ்சம் குடியும்,,,

ஒரு மடக்குக் குடிச்சவரு,,

ஒங்களுக்கு,,,,

நீரு குடியும்,,முதல்ல,,,

மீண்டும்,,ஒரு மடக்கு குடிச்சுட்டு,,,,

போதும்,,மக்களே,,,,
நீங்க குடிங்க,,, மக்களே,,

யோவ்,,,
தாத்தா,,,நீரு குடியும்,,முதல்ல,,
இப்பத்தான்,,எங்களுக்கு மூச்சே வருது,,
நீரு விழுந்த உடனே தெகைச்சு போயிட்டோம்,,தெரியுமா,,,?

அதுசரி,,,
நீங்க,,, எங்க ஊருல,,,,யாரைத்தான் பாக்க வந்திய,,,?

ஒங்க பேரு,,
என்னா,,மக்கா,,

எம்பேரு,,,செவாண்டி,,,
அவம் பேரு,,,நடராசு,,,,,,,,,,,,


ஏ மக்கா,,,
செவனே,,,!
எஞ் சிவனே,,,,

நீ தான்,,,
என்னைக் காப்பாத்த ,,
இந்த மக்க சொரூபத்துல வந்தியா,,,,?


அந்த சிவன் தான்,,
அந்த செப்பறைச் சாமிதான்,,,
அந்த கூத்தன்,,
அழகிய கூத்தன் தான்,,,
என்னைய, உங்க சொரூபத்துல வந்து காப்பாத்தினான்,,,,,
சாமி,,,
மக்கா,,,,
இங்க வாங்க,,மக்கா,,,,

பெருசு,,,அரற்றினார்,,,
எங்களைப் பாத்துக் கும்பிட்டார்,,,,,

பெருசு,,
தோளிலிருந்த பையிலிருந்து பணமெடுத்து,,,
எங்க கையில,,, கொடுத்தாரு,,,

வேண்டாம்,,தாத்தா,,,,

வேண்டாம் பெருசு,,,

செப்பறை சாமியைத்தான்,,
கூத்தனைப் பாக்கப் போறேன்னு சொன்னியளா ?

நாங்க ஒங்க சொந்தாகாரவுளப் பாக்கப் போறீருன்னு நெனைச்சோம்,,,,

எப்பா,,,,செவாண்டி,,நடராசு,,,
நீங்க ரெண்டு பேரும்,,,,ஒன்னு சேர்ந்தா,,,,
அந்த செப்பறைச் சாமி தானய்யா,,,,,

பெரியவர்,,
கண்ணீர் மல்க,,,,
எங்களை அணைச்சபடியே,,,,,இருக்க,,,

தாத்தா,,வாரும்,,,
மெல்ல,,,
ராசவல்லி புரத்துல டாக்டரைப் பார்த்துட்டு,,
அப்படியே,,உங்க,,சாமியையும்,,செப்பறையில,,பாத்துட்டு வந்துடலாம்,,,,


வேண்டாமப்பா,,,
கூத்தனை,,
அந்த கூத்தனின் திருவிளையாடலை,,
இந்த
பனை மரச் சாலையிலேயே,,,பார்த்துட்டேன்,,,,,

போதும்,,,போதும்,,,
சாமிகளே,,,,

நாங்க,,
சாமியா ?,,
செவனாண்டி நான்,,நடராசுவைப் பாத்தேன்,,,

பெரியவர் பேசிக் கொண்டே இருந்தார்,,,
அந்த
வெயில் சாலையில்,,
நின்றிருந்த பனை மரங்களிலிருந்து,,,,
பனையோலைகள் அசையும்,,சத்தம்,,,
அவரின் பேச்சுக்கு
எசப்பாட்டு பாடிக் கொண்டிருந்தது,,,,,


தூரத்தே,,
செப்பறை
அழகிய கூத்தர் ஆலயத்து மணியோசை,,
காற்றில் மிதந்து வந்தது,,,