Saturday, 19 November 2011

திருவானைக்கா !



அருள்மிகு அகிலாண்டநாயகி உடனுறை ஜம்புகேஸ்வரர்
( நீர்த்திரள்நாதர்)


யானையும்,சிலந்தியும்,, பூசித்துப் பேறு எய்தியதால் இப்பெயர் பெற்றது.


திருவானைக்கா திருச்சியிலிருந்து சமயபுரம் செல்லும் வழியில், காவிரி வட கரையில் விளங்கும் தலம்.தென் கரையில் ஸ்ரீரங்கம்  அமைந்துள்ளது.
 
இறைவரின் திருப்பெயர்:ஜம்புகேஸ்வரர் என்ற நீர்த்திரள்நாதர். இத்திருப்பெயரை இவ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர்பெருந்தகையார் ``செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே`` என எடுத்து ஆண்டுள்ளார். இதுவன்றி  வெண்நாவல் மரத்தின் அருகில் எழுந்தருளியிருப்பதால் இப்பெயர் பெற்றார். (ஜம்பு -நாவல்)
 


கோயில் ஐந்துபிராகாரம் கொண்ட பெரியகோயில், ஆயிரங்கால் மண்டபம் உண்டு.

 
முதல் மண்டபம் மிகச் சிறந்தது. சுவாமி சந்நிதி மேற்கு, அம்மன் சந்நிதி கிழக்கு. சுவாமி பிராகார மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி நிஷ்டாதேவி உருவம் இருக்கிறது. இதனை, சனீஸ்வரர் என்று தவறாக எழுதி இருந்தார்கள். நான்காவது மதில் (திருநீற்றுமதில்) மிகப்பெரியது. 
 
இது பஞ்சபூதத் தலங்களுள் அப்புத்தலம் ஆகும். (அப்பு- தண்ணீர்) சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடத்தில் நீர் ஊறி வருவது இன்றும் காணத்தக்கது. முற்பிறப்பில் சிலந்தியாயிருந்து சிவபெருமானை வழிபட்ட புண்ணியத்தின் பயனாய் அரசனாய்ப் பிறந்த கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. வெளிப்புறத்து மதிலுக்குத் திருநீறு இட்டான் திருமதில் என்று பெயர்.


இறைவர் சித்தராய் எழுந்தருளித் திருநீற்றைக் கூலியாகக் கொடுத்து எடுப்பித்த காரணத்தால் அம்மதில் அப்பெயர் பெற்றது. திருக்கயிலையிலிருந்து எழுந்தருளி இறைவி இங்குத் தவஞ்செய்து ஞானோபதேசம் பெற்ற காரணத்தால் ஞானஸ்தலம் எனவும் இது வழங்கப்படும்.


உறையூர்ச்சோழர் மணியாரம் தரித்துக்கொண்டு காவிரியில் நீராடினார். அது ஆற்றில் விழுந்துவிட்டது. உடனே அவர் ``சிவபெருமானே கொண்டருளும்`` என வேண்டினார். அந்த மணியாரம் திருமஞ்சனக்குடத்தில் புக, அதனை இறைவருக்கு அபிடேகிக்கும் போது அவர் அதனை ஆரமாக ஏற்றுக்கொண்டு சோழனுக்கு அருள் புரிந்ததும் இப்பதியேயாகும்.

இச்செய்தியை, சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வூர்ப்பதிகத்தில்,

``தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து
நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே
ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்``
எனவும் ,
திருஞானசம்பந்தப்பெருமான்,

``ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே`` எனவும் 
சேக்கிழார்பெருமான், ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணத்தில்,
``வளவர் பெருமான் திருவாரஞ் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்
கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற
அளவில் திருமஞ் சனக்குடத்தி லதுபுக்காட்ட வணிந்தருளி
தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்``
எனவும், போற்றுவாராயினர்.


கல்வெட்டு:


இக்கோயிலில் பிற்காலத்துச் சோழ மன்னர்கள், பாண்டியர்கள், ஹொய்சலர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பெற்ற நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளெல்லாம் சரித்திர சம்பந்தமான உயரிய செய்திகளைத் தெரிவிக்கின்றன.
இக்கோயில் சிவபெருமான் திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர் என்னும் திருப்பெயர்களாலும், அம்பிகை அகிலாண்டநாயகி என்னும் பெயரா லும் குறிக்கப்பெற்றுள்ளனர். 
 
இக்கோயில் முதற் பிராகாரத்துத் துவார பாலகர் இருவரையும் எழுந்தருளுவித்தவர் இருங்கொளப்பாடி வளநாட்டுக் கருப்பூரில் இருந்த இளைய நயினார் மகனார் தெய்வங்கள் பெருமாள் ஆவர். இச்செய்தி அத்துவார பாலகர்களின் அடிப்பீடங்களில் பொறிக்கப்பட்டிருக்கின்றது.

நான்காம் பிராகாரத்தில் அகிலாண்டநாயகி அம்மன் கோயிலின் முன் உள்ள பசுபதீஸ்வரம் உடையாரை எழுந்தருளு வித்தவர் நீலகண்ட நாயக்கராவர். இச்செய்தி ஹெய்சால வம்சத்தைச் சேர்ந்த வீர ராமநாததேவரின் பதினான்காவதாண்டுக் கல்வெட்டால் தெரியவருகின்றது. இக்கோயிலின் உற்சவ மண்டபத்தைக் கட்டியவர் சதாசிவ வரஜப்பைய யாஜி தீட்சிதராயர் ஆவர்.
 
இவரே அமாவாசை, பொங்கல் புதுநாள் இவைகளின் சிறப்புப் பூசனைக்கு நிவந்தமும் அளித்துள்ளார். முதற் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள எடுத் தருளிய ஷ்ரீபாதீஸ்வரம் உடைய நாயனார் கோயிலைக் கட்டியவர், திருஞானசம்பந்தர் என்னும் பெயரினர் ஆவர். நான்காவது பிராகாரத்திலுள்ள மேலக்கோபுரம் ஆதித்யதேவனது மகனான சந்தபேந்திரனால் சகம் 1357 அதாவது கி.பி. 1435-இல் கட்டப் பெற்றதாகும். 
 
 
வலம்புரி விநாயகரையும், சுப்பிரமணியரையும் மும்முடி திம்மரசர் என்பார் எழுந்தருளுவித்துள்ளார். விபூதி பிராகாரத்து மதிற்சுவரைத் திருநீற்றுச் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான்.



ஹொய்சல அரசனான வீரசோமீசுவரன் (சோழநாட்டில்) திருவரங்கத்துக்கு வடக்கே 8 கி. மீ. தூரத்தில் உள்ள கண்ணனூர்க் கொப்பத்தைத்(இன்றைய சயபுரம் ) தலைநகராகக் கொண்டு ஆண்டான். இவன் சிறந்த சிவபக்தன் ஆவான்.
ஆதலின், திருவானைக்கா கோவிலின் கிழக்குக் கோபுரமான எழுநிலைக் கோபுரத்தைக் கட்டுவித்தான். வீரசோமீசு வரன் திருநாள் என்று தன் பெயரால் இத்திருக்கோயிலில் ஒரு விழா நடத்திவந்தான். வட திருவானைக்காவில் தன் பாட்டனாகிய பாலாலன் II என்பவன் பெயரால் வாலால ஈசுவரத்தையும், தன் பாட்டியாராகிய பத்மலா தேவியின் பெயரால் பதுமலீசுவரத்தையும் எடுப்பித்துள்ளான். இந்த வீர சோமீசுவரனது தாயார் கல்லலா தேவியார் ஆவார். இவரது மேன்மையின் பொருட்டுக் கண்ணனூரி லுள்ள பாலீஸ்வரம் உடையார்க்கு இந்த அரசன் நிபந்தம் அளித் துள்ளான். இக்கோயிலும் இவனால் எடுப்பிக்கப் பெற்றதாகும். இந்த வீர சோமீசுவரனது இருபத்திரண்டாவது ஆட்சியாண்டில் திருவானைக்கா கோயில் மூன்றாவது பிராகாரத்தின் வடபக்கத்தில் கல்வாக்கூர் தியாகப்பெருமாள், தியாகவிநோதீசுவரம் என்னும் கோயிலைக் கட்டியுள்ளனர்.
 


இவைபோன்று ஹொய்சல அரசர்களின் வரலாறுகள் பலவற்றை அறிதற்கு இக்கோயில் ஒரு சிறந்த பொக்கிஷமாக விளங்குகின்றது.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் பிறந்த நாள் ஆவணி மாதத்து அவிட்டமாகும். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் I பிறந்தநாள் சித்திரை மாதத்து மூலநட்சத்திரமாகும். இச்செய்திகளை இவர்கள் இத்திருவானைக்கா கோயிலுக்கு அளித்துள்ள நிபந்தங்கள் அறிவுறுத்துகின்றன.

சோழமன்னர்கள் இக்கோயிலைப் பெரிதும் போற்றி வந்தனர். திருபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழதேவன் (இவனே இக்கல் வெட்டில் கோனேரின்மை கொண்டான்) என்பவன் நித்த விநோத வளநாட்டு வில்லவநல்லூரில் இருபத்தைந்து வேலி நிலத்தைத் தன் அத்தையாகிய திருப்பெரியதேவியார் பேரால் திருவானைக்காவுடைய சிவபெருமானுக்குத் திருநாமத்துக்காணியாக இறையிலி செய்து கொடுத்துள்ளான். திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் இருபதாம் ஆண்டுக் கல்வெட்டினால் இக்கோவிலுக்கு இருபது காவலாளிகள் இருந்தனர் என அறிகின்றோம். இக்கல் வெட்டில் பிணைத்தீட்டு (ஜாமீன்) என்ற பெயர் உளது.

மகாதேவ தீட்சிதர் மகன் சதாசிவ மகின் (தீட்சிதர்) காவை நூல்கள் எனப் பல எழுதினார். திருவானைக்காவிலுள்ள நஞ்சை நிலங்களை அளந்தகோல் சிவநாமத்திரேயம் என்னும் பெயர் பூண்டதாய் நான்கு அடி நீளமுள்ளதாய் இருந்தது. அகிலாண்ட ஈஸ்வரி கோயில், ஜம்புநாதர் கோயில் இவைகளின் தளவரிசைகளைச் செய்தவர் பாஸ்கரராயபாரதி தீட்சிதர் ஆவர்.
 
தோப்பு ஒன்றிற்குச் சிலந்தியைச் சோழனாக்கினான் என்னும் பெயரும் பட்டன் ஒருவனுக்கு என்னானைக் கன்று என்ற பெயரும் வைக்கப் பெற்றிருந்தன. என்னானைக் கன்று என்னும் பெயர் இவ்வூர்த் திருத் தாண்டகத்திலும் கூறப் பெற்றுள்ளது.

விஜயரங்க சொக்கநாத நாயகருடைய நாடகசாலை ஆசிரியர் வைத்தியப்ப ஐயா, ஜம்புதீர்த்த மண்டபத்திற்குப் படித்துறைகள் கட்டியுள்ளார்.




திருக்கோவிலின் சுற்றுப் பிராகாரங்களில்,,,,,,,,உள்ள சிற்பத்தூண்கள்,,,அனைத்தும்,காணக்கிடைக்காத,,,கல்லோவியங்கள் !




இதை விட ஆச்சரியமான,,,விசயம்,,,ஒன்று,, ! திருக்கோவிலில் நடனமாடும்,தேவதாசிகளுக்கு என ,,தனியாக ஒரு வாசல் ஜம்புகேஸ்வரரைத் தரிசிப்பதற்க்காக ,அமைக்கப்பட்டுள்ளது.
நாவல் மரத்தடியே,,,வீற்றிருந்து அருள்பாலிக்கும்,ஜம்புகேஸ்வரரையும்,அகிலாண்டேஸ்வரியையும், தரிசித்துவிட்டு வரலாமா ?,,,,,,,,,,,,,,,,,,,,,,



Thursday, 17 November 2011

வெள்ளைக் கோபுரம்- திருவரங்கம்


வெள்ளைக் கோபுரம்- ஒரு வரலாற்றுப் பார்வை

     திருச்சி : வரலாற்று சிறப்புமிக்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்  "பூலோக வைகுண்டம்' என, பக்தர்களால் போற்றி வணங்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பிரசித்தி பெற்ற முக்கிய அடையாளங்களில் ஒன்று, "வெள்ளை கோபுரம்' எனப்படும் கிழக்கு கோபுரம்.

கி.பி., 1450 காலக்கட்டத்தில், விஜயநகர பேரரசரான அச்சுத தேவராய நாயக்கர் காலத்தில், அகோபில மடத்தின் ஸ்தாபகர் மற்றும் முதல் ஜீயர் ஆதிபன் சடகோபனால், வெள்ளை கோபுரம் கட்டப்பட்டது. 
       இதேபோல, வடக்கு சித்திரை வீதி கோபுரம், தெற்கு ராஜகோபுரம், மடத்தால் கட்டப்பட்டது.
       ஒன்பது நிலைகளுடன் கட்டப்பட்ட வெள்ளை கோபுரம், 1987 வரை, ஸ்ரீரங்கத்தின் ராஜகோபுரமாக விளங்கியது. 

                    அதன்பின்னரே, தெற்குப்பகுதியில் மொட்டையாக இருந்த கோபுரம், ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக்கும் நோக்கில், 234 அடியில் ராஜகோபுரமாக எழுப்பப்பட்டது.
தியாக வரலாறு: சைவ சமயத்தின் மீது பற்றுக்கொண்ட, சோழமண்டல அரசனான கோனேரிராயன், ஸ்ரீரங்கம் கோவில் சொத்துகளை பறித்து, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு கொடுக்க உத்தரவிட்டார்.
     இதை எதிர்த்து, கி.பி., 1489ல், இரண்டு ஜீயர்கள் மற்றும் பெரியாழ்வார் எனப்படும் ஒருவர் என, மூன்று பேர், வெள்ளை கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து தங்களது உயிரை மாய்த்துக்கொண்டனர்.
   தகவலறிந்த, விஜயநகர அரசன் நரசநாயக்கன், கோனேரிராயனை போரிட்டு வென்று, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சொத்துகளை மீட்டுக் கொடுத்தார். உயிரிழந்த மூவருக்கும், வெள்ளை கோபுரத்தில் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஒரு தாசியின் கதை: இதேபோல, கடந்த, 15ம் நூற்றாண்டின் இறுதியில், மதுரை சுல்தான்கள், கோவிலை கைப்பற்றி, அவர்களின் தளபதியை ஸ்ரீரங்கத்தில் தங்கவைத்து, பக்தர்களை வழிபாடு செய்யாமல் தடுத்தனர். இதனால் வேதனையடைந்த கோவிலின் தாசி ஒருவர், சுல்தானின் தளபதியை மயக்கி, தன்வசப்படுத்தினார். அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி, வெள்ளை கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச்சென்று அவரை கட்டிப்பிடித்தபடியே கீழே குதித்தார்.

ரங்கநாதருக்காக உயிரிழந்த தாசியின் வம்சாவழியினர் இறந்தால், அரங்கனின் வஸ்திரம், மாலை, சமையற்கட்டில் இருந்து வாய்க்கரிசி, ஈமச்சடங்குகாக நெருப்பு கொடுப்பது, இன்று வரை வழக்கமாக உள்ளது. சுல்தானின் தளபதி இறப்புக்குபின், பக்தர்கள் கோவிலுக்கு சகஜமாக செல்லும் நிலை ஏற்பட்டது. உலகிலேயே கோவில் நடைமுறைகள் குறித்து எழுதப்பட்ட நூலான, "கோவில் ஒழுகு' என்ற நூலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஸ்ரீஇராமானுஜர் அரங்கன் கோவிலிலேயே தங்கி திருக்கோவில் பூஜா விதிகளை வகுத்தார் ! அதன்படியே இப்போதும்,அரங்கனுக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன .

  திருவரங்கம் திருக்கோவிலில் எம்பெருமானார் ஸ்ரீஇராமானுஜர் அமர்ந்த இடம்,தற்போது ’’ உடையவர் சந்நிதிஎன்று வணங்கப்படுகிறது.
Top of Form
Bottom of Form









Wednesday, 16 November 2011

காளிகேசம் !

 கன்னியாகுமரி மாவட்டத்தின்,வட எல்லையாகக் கருதப்படும் மாறாமலை(அகத்தியர் மலை)யின் தொடர்ச்சி,,,,காளிகேசம் என்னும் சிறுமலை,,,சிற்றாறுகள்,,,,அருவி ! கூடவே காளி கோவில் !
இயற்கை எழில் கொஞ்சும்,,,,,குமரியின் வனப்போடு,,,குமரிப் பதியினில்,,,,ஒரு சுற்றுலா சென்று வாருங்களேன் !

திருக்கோவில்கள் உலா !

திருக்கோவில்கள்  உலா !

திருவரங்கம் ;
காவிரி ஆற்றுப் பாலத்திலிருந்து , திருவரங்கம்

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா.! உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு!!!!!



  
அரங்கனின் இராஜகோபுரம் !
 காலால் விண்ணளந்த பெருமானின், விண்ணைத்தொடும் இராஜகோபுரம் !
ஓங்கி உலகளந்த உத்தமனின், நெடிந்துயர்ந்த இராஜகோபுரம் !
 இராஜகோபுரத்திலிருந்து , உட்கோவில் கோபுரங்கள் !

 அனந்தசயனத்தில் அரங்கன் !
வேணுகோபாலசுவாமி கோவில் வெளிச்சிற்பங்கள் !
கல்லிலே கலைவண்ணம் கண்ட, சிற்பியின் காதலியா? இவள் ?
காதலனின், வருகைக்காக,விணை வாசித்தபடி காத்திருக்கிற,,,இவளின் கை வீணையினை முறித்த,,,கயவன் யார் ?
யான் நோக்குங்கால்,நிலம் நோக்கும் பெண் ?
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ? எங்கள் புருசோத்தமன் கைகளில்,,,பாதியாய்ப் போனதென் காரணி யார் ?
கொத்துமலர்க் கோதை, உந்தன், கரங்களை உடைத்த கள்வன் யாரடீ ! பெண்ணே ?
விலங்குகளையும்,நேசித்த கோபாலா !
வெண்ணெய்த் தாழி ! உன்னிடமா ? கோவிந்தா !


கோன் உயர கோல் உயரும் ?,,சிற்பமாய் ,,,செங்கோல் ?
ஸ்ரீரங்கவிமானம் ! அரங்கா ! ஆறுதல் தருவாய் ! அன்பே !

அரங்கா ! உன் பத்ம பாதம் சரண் புகுந்தோம் !
ஸ்ரீரங்கநாதா உன் பாதம் அடைக்கலமே !
அரங்கா ! விழி மூடி உறங்குகிற ,,,உன்னருகே,,,,,ஓளி வெள்ளம் !
பாவை நாச்சியார்  ! கைகளில் விளக்கோடு,,,,, கண்ணுறக்கமின்றி,,,,,
அரிமாவின் மேல் கோவிந்தன் தூணிலிருக்க,,அதனருகே ,களிறு கட்டி காத்திருக்கிறோம் ? கண்ணா !
 எங்களுக்கு நல்வழிகாட்டுகிற,,,,,தாயார் சந்நிதிக்குச் செல்லும் வழி ! 

பரந்தாமனே !  உன் திருவடி தேடிக்காட்டிடும்,உந்தன்   பரமபத வாசல்
கவிச்சக்கரவர்த்தி கம்பன் ,இராமாயண காவியத்தை, அரங்கேற்றிய மண்டபம்!
கம்பனின் காவியத்தை ரசித்துக் கரக்கம்பம்,சிரக்கம்பம் செய்த  நரசிம்மர் சந்நிதி!

அரங்கனின் வடக்கு வாயில்கோபுரம்

ஸ்ரீரங்க நாச்சியார் சந்நிதி & இராமாயண அரங்கேற்ற மண்டபம்
 கோடவுனாகிப் போன ஆயிரங்கால் மண்டபம் ?


1987 வரை அரங்கன் கோவிலின் இராஜகோபுரம்(வெள்ளைக்கோபுரம்) கோபுரதரிசனம் பாபவிமோசனம் !
 சிற்பியின் கரங்களால் ,கடைந்தெடுக்கப்பட்ட,,,,,, கலைகளின்  வரங்கள் !
 கல்லும்,கலை பேசும் ?கற்தூண்கள் !
அன்று ! வீரத்தின் விளை நிலம் ?,,,
     இன்று !   வந்தவர்களின் மேய்ச்சல் காடாகிப் போன விந்தை என்ன? 
 மாலப் பொழுதின் மயக்கத்தில் ...
              கண்ணன் கோவில் கோபுரங்கள் ! 

 அரங்கன் திருவடிகளிலிருந்து,,,,,,
      மீண்டும் இராஜ கோபுர தரிசனம் !