Wednesday, 16 November 2011

கண்மணீக்கு ஒரு கடிதம்

கண்மணீக்கு ஒரு கடிதம் ?

கண்மணீ,,!
எங்க அப்பா,,ஒன்றும்
ஜமீந்தார் இல்ல,,,அதனால,
உன், தம்பியரைக் காக்க,,,,
உன் இளமையைத் தொலைத்தேன்,,,என்றாய்?

உன்
இல்லம், வறுமையைப் பார்த்திருக்கலாம் ?
ஆனால்,
வறுமையாய், வாழ்ந்திருக்காது !,,,
ஆனால், நான் !,,,,,,,,,,,,,

பள்ளிக்கூடத்தில்,
மதிய உணவு நேரத்தில்,,,,,,,,,,
அதீதக்குரலில்,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப,,,
குறள், சொல்லியிருக்கிறாயா?,,
கண்மணீ !

பசிதீர்க்க,,
குரல் கொடுத்து,,,
குறள் சொல்லியிருக்கிறேன் !
நான்,,
அப்படி வளர்ந்த தமிழ் !,,என்னுடையது,,,?

பள்ளியாசிரியைக்கு,
புத்தகக்கட்டு சுமந்திருக்கிறாயா?
கண்மணீ !, சுமந்திருக்கிறேன் !
_நான்_
சுமந்தால் கிடைக்கும்,
டீச்சர் வீட்டு,
ருசியான், பதார்த்தங்களுக்காக,,,,,,,,,,,,,,

உன்னை,
யாராவது,தத்தெடுத்து,,,
உனைப் போல,,,குழந்தை வரம் கேட்டிருக்கிறார்களா ?
கண்மணீ !
குழந்தை யில்லா தம்பதியர்,,
என்னை வைத்து,
இவன் போலொரு,
பிள்ளை, வேணுமின்னு,முத்து நகர்
பனிமயமாதா ! அருள் வேண்டி
அழுதிருக்கிறார்கள்?,,அது
பார்த்திருக்கிறாயா? கண்மணீ !

ஒன்றே கால் ரூபாய்,
கோழிக் குருணை, அரிசி வாங்க,,,,
ஒன்றரை மைல் தூரம்,
நடந்திருக்கிறாயா? கண்மணீ !
நான்,நடந்திருக்கிறேன் !

பனிவிழும் மார்கழித் திங்களில்,
அதிகாலை நேரத்தில்,,,
திருக்கோவில்களுக்குச் சென்றிருக்கிறாயா?
கண்மணீ !
சூடாய்,கைநிறையக் கிடைக்கிற,
வெண்பொங்கல்,புளியோதரை,
சர்க்கரைப்பொங்கல்,சுண்டல்களுக்காக, மட்டுமல்ல,,
ஒரு வேளை பசி தீர்க்கிற,
இடமாய், திருக்கோவில்களை அறிந்திருக்கிறாயா?
கண்மணீ !

நான்,
பார்த்தவற்றை,கேட்டவற்றை,
நடந்தவற்றை,அறிந்தவற்றை,
சொல்லி விட்டேன் !கண்மணீ !
நான்,
என் இளமையைத்
தொலைக்கவில்லை கண்மணீ !
என் இளமை,,
பலபாடங்கள்,படித்திருக்கிறது.......? கண்மணீ !


                      அன்புடன் என்றும்,


No comments:

Post a Comment