Saturday, 17 November 2018




மூன்று முடிச்சிட்ட உனக்கென்னடா ? என்னவனே !
மூன்று மாதம் விடுமுறையென்று வந்தாய் ?-வாசலில் -
மூன்று வருடத்திற்கும் சேர்த்தொரு அவசர முத்தமிட்டாய் ?
மூன்றாம் தனமாய் தொப்பை வளர்த்திருக்கிறேனென எள்ளினாய் ?

முன்வாசல் தாண்டிக் கூடத்தினுள் கால் வைத்தாய் ?
முன்னோர்கள் படம் முதல், மூத்தோர் வரை காலில் விழுந்தாய் ?
முத்தமென்று முகம்கடிக்கும் மூத்தவளைத் தேடினாய்?தாவணி சிறகசைய,
முழுமதி காட்டி வர திகைத்தாய் ? நீயுமில்லை, நானுமில்லை அவளுன்,
முன்னாள் காதலியின் முகம் காட்டினாளோ ? உன்னையறிவேனடா ?

முன்வாசல் மணியடிக்கிறது ? உன் நண்பர்கள் பட்டாளம் குதிக்கிறது !
முன்னிருந்த பெட்டி திறக்கிறாய் ? பாட்டில் வாசனைகள் துளைக்கிறது!
மூக்கிற்கு வேலை கொடுக்கிற உறவுகள் அனைத்தும் உன்னைச்சுற்றி
மூக்கு நுனி வரை வந்து விட்ட வேர்வை? துடைக்கத் துடிக்குதடா ? என்
முந்தானை ! விரிந்து சுருங்குகிறதடா ? என் மாமியாரின் கண்களும், என்

முந்தானையும்,,, உரசிக் கொண்டிருக்கிற என் மாமனாரிடம் சொல்கிறாள் ?
முந்தாணி ரொம்பத்தான் விரியுதுன்னு,?விழியில் அலையடிக்கும் உப்பு நீர் முகம் பொத்தி அழுகின்றேன்?முத்தம் தந்து மூழ்கடித்தவனே இப்பயென்
முகம் பாரடா ? முத்தாய் மூன்று பிள்ளை இடுப்பொடிய பெற்ற பின்னும்

முத்தழகாய் முன்னாலே நிற்கின்றயெனைப் பாரடா ? என்னவனே ! உன்
முன்னால் நிற்கையிலே  நீ சீரிளமைத் திறம் வியந்த நாட்களெல்லாம்
முன்வந்து சிரிக்குதடா ? என்னவனே ! வா ! உன் வண்ண முகம் திருப்பு !
மூச்சுக் காற்றில் அனலடித்த நாட்களெல்லாம் பெருங்கனவாய் போனதடா?

முந்தி நெகிழத் துயின்றதெல்லாம் முப்பத்தாறு நிலா நாட்களுக்கு,
முன்பானதல்லவா? என்னவனே ! இருட்டில் மட்டும் இணங்கி இருக்கவா?
முன்னிருட்டு வருமுன்னே , வாசற்தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி,
முன்விழும் குழலொதுக்கிக் காத்திருந்தேன்?.வெளிச்ச வரிகள் விழுவதற்கு

முன்னே கலைந்ததைச் சீராக்கி,உனை நேராக்கி நான் அடுப்படியில் புகுந்த
முன்கதைச் சுருக்கம் சொல்ல வைக்காதே ? என்னவனே ! வா! வண்ண
முகம் திருப்பு ! என்னவனே ! நீ திருடனடா ? திட்டத்தான் தோணுதடா ?
மூத்தோர் முன், எனைப் பார்க்கவுமா?பயப்படுகின்றாய்?நல்ல நடிகனடா நீ!

மூத்தவளுக்கு,பின்வந்த தம்பி தங்கைக்கு, எல்லோருக்கும் கடைவிரித்த நீ
முந்தி விரித்தவளை மறந்தது, ஏனடா? என்னவனே! இத்தனை புலம்பியும்
முகம் திருப்புகிறாயா ? பார்,,, எத்தனடா? நீ! உன் மேல்ப் பித்தாகி ,பேயாகி
முன்னே நிற்கின்ற , எனைப் பாரடா ? எல்லா பக்கமும் சுழல்கிற உன்  முட்டைக் கண்கள் என் திசை பார்க்க மட்டும் நாணுகிறதோ? வாடா! வா !

முன்னிருட்டு வரட்டும் ! நேற்றுடுத்த இரவுடையோடு நிற்கின்றேன் ? முந்தாநாள் சோற்றுச்சட்டியாய் சலனமற்று நானிருக்க,ஈயெனநீ மொய்க்க 
முகம் பொத்தி இருக்கட்டுமா ? முக்காடிட்டுப் படுக்கட்டுமா?என்னவனே ! முப்பொழுதும் அடுப்படியில் சமைப்பதற்கும்,எப்பொழுதும்உன் வீட்டவரை 
முகங்கோணாமற் பார்ப்பதற்குமட்டும்தான் நானென்றால் ? என்னவனே !

மூச்சடங்கி விடத் துடிக்குதடா ? உன் மூச்சுக் காற்றுக்காய் ஏங்குதடா ?
முயக்கத்தின் மயக்கத்தில் முன்பிருந்த நிலா நாட்கள் இனி வருமோ ?
முத்தத்தின் சத்தத்தில் விழித்தெழுந்த பிள்ளைகளின் துயிலசைந்தனால் நீ முடங்கிப் போனாயோ ? இல்லையில்லை,,என்னவனே ! நீ சித்தனடா ?

முன்பெல்லாம்  முழப் பூவொடு , நீ வரும் வேளைக்காய்க் காத்திருந்தேன் முழுதாய் தினந்தினம்பார்த்தவனே,கொஞ்சம்முகம் திருப்படா என்னவனே 
முக்காட்டுக்காரி எவளேனும் இருக்காளோ ? உன் மனசில் என்னவனே ! முழுசும் காட்டியவள் என் சக்களத்தி ஆனாளோ?அட என்னவனே !கொஞ்ச முகம் காட்டி விட்டு நீ திரும்படா? என் மனசு துடிக்குதுதடா?என்னவனே !




கோகுலத்தான் நானில்லை ?
கோகுலமும் எனக்கில்லை ?
கோவில்வழிப் பாதையிலே,,,
கோபாலன் போகின்றான் !
அண்ணே !
ஆட்டுப் பால் கிடைச்சிடுமா ?
அரை வீசம் காசு தாரேன் ! என்றேன்,,
அடே பிள்ளாய் !
ஆட்டின் பால் ஆட்டுக்குட்டிக்கேப் போதவில்ல,,
ஆடி முடிச்ச புள்ள ஒமக்கெதற்கு ? என்கின்றான் !
காந்தி தாத்தா குடிச்ச பாலில்லா,,,?
காந்த மனம் கூடச் சாந்த மனமாக ?
வெள்ளாட்டுப் பால் கொஞ்சம் வேணுமண்ணே ,
அடப் போ பிள்ளாய்,,,!
ஆடும் மனசுக்கு ஆட்டுப் பால் கேட்கிறதோ ?
ஆட்டுவிச்ச அவன் கணக்கு அதுவென்றால் தப்பாதே ?
ஆடாத சித்திரத்தீபம் சிந்தை வைக்க ஒளிரும் மனசு !
ஆடுமேய்க்கும் அண்ணனவன் அருளாசி தருகின்ற
ஆண்டவனாய்,,,ஆனகதை,,சாலைப் பெருவெளியில்,,,
ஆட்டு மந்தையதில் செல்கின்ற கிடைக்கூட்ட ஆடுகளில் நானுமொரு
ஆடாகச் செல்கின்றேன் !
ஆடுகளிடையே எவரேனும் எனைக் கண்டிட்டால்,
ஆஹா ! பிள்ளை,,என்றே கத்தித் தொலைக்காதீர் ?
ஆஹா ! நுனிப்புல் மேய்ந்தபிள்ளை போகின்றான் ?
ஆடாக,?,அதுவாக,,,அடங்கட்டும் என்றே விட்டிடுவீர்.

Saturday, 8 September 2018

போதும் !
போதும் ?
வலிக்கிறதடா ? -நரசிம்மா -
குற்றம் என்னடா ? செய்தேன் ? குற்றம் ?
பிள்ளை என பிரகலாதனைப் பெற்றது ? தவறோ ?
ஆயிரம் பேரைக் கூடி அவனியெங்கும்,,,,
பிள்ளைகள் பலப்பல பெற்றிருந்தால்....?
என் பெயரினைச் ஜே ஜேயெனச் சொல்லி இருக்குமே ?
நரசிம்மா ?
ஓன்று பெற்றேன் !
அவனும்
என் பேர் சொல்லாது...
உன் பேர் சொல்வானென்றால் ?
நானெதற்கு .... நாயகனாய் ?
தூண் பிளந்தாய்?
எனைத் தூக்கி
வழிநடை வந்தாய்?
அந்தி சந்தி வரும் வரைக் காத்திருந்தாய்?
நகங் கொண்டு வயிறு கிழித்தாய் ?
குடலுருவி மாலையிட்டாய் ?
இன்னும் அடங்காது ஆடுகிறாய் ?
வலிக்கிறதடா ?
வலிக்கிறதடா ?
கண்ணீர் விட்டால் ....
நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்பதனால்.....
அடங்கிக் கிடக்கின்றேன்?
ஆயின்
நீயோ?
ஊரிலுள்ள கோவில் தூண்களிலெல்லாம். ....?
கோர முகம் காட்டிச் சிரிக்கின்றாய்?
உனைத்தான். ....
பிள்ளை பல பெற்றோரெல்லாம்,,,,
கூடிக் கூடி. .
கூவிக் கூவி வணங்குகின்றார்?
வேடிக்கை மனிதர்களை ,,,
நினைத்த படி.....
நானோ ?
அழுகின்றேன்
நான்
யாரென்று தெரிகிறதா ?
மனிதர்களே.....
பிள்ளை பெற்று வளர்த்தவன்?
என் பேர் இரணியன்

என் கண்மணீ !

கண்மணீக்கு ஒரு கடிதம் ?
கண்மணீ,,!
எங்க அப்பா,,ஒன்றும்
ஜமீந்தார் இல்ல,,,அதனால,
உன், தம்பியரைக் காக்க,,,,
உன் இளமையைத் தொலைத்தேன்,,,என்றாய்?
உன்
இல்லம், வறுமையைப் பார்த்திருக்கலாம் ?
ஆனால்,
வறுமையாய், வாழ்ந்திருக்காது !,,,
ஆனால், நான் !,,,,,,,,,,,,,
பள்ளிக்கூடத்தில்,
மதிய உணவு நேரத்தில்,,,,,,,,,,
அதீதக்குரலில்,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப,,,
குறள், சொல்லியிருக்கிறாயா?,,
கண்மணீ !
பசிதீர்க்க,,
குரல் கொடுத்து,,,
குறள் சொல்லியிருக்கிறேன் !
நான்,,
அப்படி வளர்ந்த தமிழ் !,,என்னுடையது,,,?
பள்ளியாசிரியைக்கு,
புத்தகக்கட்டு சுமந்திருக்கிறாயா?
கண்மணீ !, சுமந்திருக்கிறேன் !
_நான்_
சுமந்தால் கிடைக்கும்,
டீச்சர் வீட்டு,
ருசியான, பதார்த்தங்களுக்காக,,,,,,,,,,,,,,
உன்னை,
யாராவது,தத்தெடுத்து,,,
உனைப் போல,,,குழந்தை வரம் கேட்டிருக்கிறார்களா ?
கண்மணீ !
குழந்தை யில்லா தம்பதியர்,,
என்னை வைத்து,
இவன் போலொரு,
பிள்ளை, வேணுமின்னு,முத்து நகர்
பனிமயமாதா ! அருள் வேண்டி
அழுதிருக்கிறார்கள்?,,அது
பார்த்திருக்கிறாயா? கண்மணீ !
ஒன்றே கால் ரூபாய்,
கோழிக் குருணை, அரிசி வாங்க,,,,
ஒன்றரை மைல் தூரம்,
நடந்திருக்கிறாயா? கண்மணீ 1
நான்,நடந்திருக்கிறேன் !
பனிவிழும் மார்கழித் திங்களில்,
அதிகாலை நேரத்தில்,,,
திருக்கோவில்களுக்குச் சென்றிருக்கிறாயா?
கண்மணீ !
சூடாய்,கைநிறையக் கிடைக்கிற,
வெண்பொங்கல்,புளியோதரை,
சர்க்கரைப்பொங்கல்,சுண்டல்களுக்காக, மட்டுமல்ல,,
ஒரு வேளை பசி தீர்க்கிற,
இடமாய், திருக்கோவில்களை அறிந்திருக்கிறாயா?
கண்மணீ !
நான்,
பார்த்தவற்றை,கேட்டவற்றை,
நடந்தவற்றை,அறிந்தவற்றை,
சொல்லி விட்டேன் !கண்மணீ !
நான்,
என் இளமையைத்
தொலைக்கவில்லை கண்மணீ !
என் இளமை,,
பலபாடங்கள்,படித்திருக்கிறது.......? கண்மணீ !
அன்புடன் என்றும்,

ஒரு ஆசிரியை,,,,,,,,,,,,,,என், அம்மா !,,,ஆனபோது ,,,? அம்மா ! என் அழுகுரல் ! உன் காதுகளில், விழவில்லையா ? தாயே ! நீங்கள், அந்த பள்ளியில்,,,,,,,,,,,,,,,,,, ஒரு ஆசிரியையாகத்தான், நுழைந்தீர்கள் !.................... நெற்றி நிறைத்த வட்டப் பொட்டு ! கண்ணொளி வீசிடும் வட்ட நிலா முகம் ! முத்தெடுக்கும், ஊரென்ற பேருக்கேற்ப,,,,,,,,,,,,முத்துப் பல் சிரிப்பு ! எப்பொழுதும்,,,,, புன்னகைக்கும்,,,,,,,,,,பூ முகம் ! நீங்கள் ஒரு ஆசிரியையாகத்தான்,அந்த என் வகுப்பறைக்குள் நுழைந்தீர்கள் ! காந்தல் கறுப்பு, குட்டை உருவம்,,,? அலை பாயும் கண்கள் ? மணி யடித்தால், தட்டெடுக்கிற பிரவாகம் ? பனையோலைக் குடிசைகளில், பரிதவித்த காலத்திய,,,,,,,,,,,,,,,,,, நான் ? என் இல்லத்தின் வறுமை ? என் கண்களில், இந்திய வரைபடத்தைப் போல,,,,,,,,,, குறுக்கும்,நெடுக்குமாய், உலாப் போகிற பொழுதுகளில் நீங்கள், ஒரு ஆசிரியையாகத்தான்,அந்த என் வகுப்பறைக்குள் நுழைந்தீர்கள் ! எப்படி ? எப்படி ? நீங்கள் என் தாயாய், அம்மாவாய்,,,,,,,,,, மாறினீர்கள் ? அம்மா ! இன்றெனக்கு வயது 47 .ஆயிற்று ! அன்றென் வயது 9.................. பதினாறு வயதினிலே, பதினேழு பிள்ளையம்மா ? தாயாகவில்லையம்மா , தாலாட்டுப் பாடுகின்றேன் ? கன்னித்தாய் திரைப்படபாடல் வரிகள், அன்றெனக்குப் புரியாதது? ஏறத்தாழ 38 வருடங்களுக்குப் பிறகு, இன்றெனக்குப் புரிகிறது ! ,,,அம்மா ! அம்மா ! என்னை, என் காயச் சண்டிகைப் பசியினைத் தணித்த, மணிமேகலையே ! நீ ! நீங்கள்,எந்த ஆபுத்திரனிடம், அமுத சுரபியினைப் பெற்றாயோ ? தெரியாது ! ஆனால், நான், காயச் சண்டிகைதான் ! நீங்கள், மணிமேகலை தான் .மணிமேகலைதான் !!. ’’பவதி பிச்சாந்தேஹி’’ எனக் கேட்ட, சங்கரனுக்கு,,,,,,,,,,,,,,,, தன் வறுமையிலும், நெல்லிக் கனி கொடுத்தவர், வீட்டில், கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, சொர்ண மழை பெய்வித்தானாம் ? காலடி சங்கரன் ! சொர்ணமே ! உன், கரம் பற்றி, காலடி ஒரம்,நடந்து வந்த, பிள்ளை யென்,,,,,,, வாட்ட முகங் கண்டு, வட்ட நிலா ! முகத்தோடு, வட்ட வட்டமாய்,தோசை வார்த்து, வாட்டம் போக்கிய, தாயே ! சொர்ணரேகைக்கரை ,,,,,அம்பிகையே ! அம்மா ! சீழ் பிடித்து, ஒழுகும் காதுகளோடு ?,,, நான்,,,,,,,,,,,,,,,,வகுப்பினில், குறுகி நிற்கையிலே? சேலைத் தலைப்பெடுத்துத் துடைத்தபடி,,, என், தலைக் கோதி,வருடுகின்ற,,,, சொர்ணக் கரங்கள்,,,,,,,,,,,,! இன்றெங்கே,,,? அம்மா !!!!!!!!!!!!! பசிக்கின்ற வேளையில் பகுத்துண்டு பல்லுயிர் ஒம்ப,,,,, குறளுக்கு,,,,,,,என்னை வைத்து,,, குரல் கொடுக்க வைத்த ,, கோதையே ! பேதையாய்,,,,? நான் ,,இன்று ? அம்மா ! பாஞ்சாலங்குறிச்சி ! வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை,,,, திறந்த நான்காம் நாள்,,,பள்ளிச் சுற்றுலா ! கடைந்தெடுத்த காசெல்லாம், கிளம்புமுன்னே,,,,,,,,,,,,,,,,, கடைவீதி பண்டங்களாய்,வயிறடைக்க, பாஞ்சால மண்ணில், பிள்ளை,,! நான் ? வாய் பிளந்து, வயிறு பிசைய நின்ற போதும்,,,, எனை, அரவணைத்து,,, கொய்யா பழம் , முதல், குச்சி மிட்டாய் வரை,,,, வாங்கித் தந்து,,, என் கும்பி பசியடங்க வைத்தவளே ! அம்மா ! நீங்கள்,,,,,அந்த என் வகுப்பறைக்குள், ஒரு ஆசிரியையாகத்தான், நுழைந்தீர்கள் ! மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள் ! நீராடப் போதுமினோ ? சூடிக் கொடுத்த, சுடர்க் கொடியாள், பாட்டின், பொருள் விளங்க வைத்து,,, சங்கர ராமேஸ்வரர், உடனுறை பாகம் பிரியாளினையும், வணங்க வைத்து,,,,,,,,,,கூடவே, தயிர்ச் சோறு, சர்க்கரைப் பொங்கலையும், தாய் மடிச்சேயாய், சாப்பிட வைத்து,,,,, அழகு பார்த்த,,, அமுதமே ! சொர்ணமே ! அம்மா ! நீங்கள், ஒரு ஆசிரியையாகத்தான், என் வகுப்பறைக்குள், நுழைந்தீர்கள் ! எந்தை இழந்ததால், கந்தையாய், போன,,,,, என் இல்லம்! வறுமையின், கோரப் பிடியில்,,,, தட்டாமாலையாய் ? ஆயிற்று,,,,,,,,,,, எங்கள்,,,வாழ்க்கை ? கோழிக் குருணையும், மரவள்ளிக் கிழங்கு, மட்டுமே ? எங்கள், உணவாக இருந்த வேளை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,? கடிகாரக் கடையின், எடுபிடி ஆளாய்ப் போவதென, என் இல்லம், முடிவெடுத்த போது,,,,,? அவன், படிக்கட்டும் ! என்று, இவனையும், படிக்க வைத்த ,,,,பரிபூரணியாய்,,,,! ஆறுமுகசாமி நாடார், அனாதை இல்லத்தில், சேர்ந்தாவது,,, படிக்கலாமென்கிற நிலையில்,,,, விண்ணப்ப மனுவுடன் ஒற்றை ரூபாய், இணைக்க வேண்டுமென்ற போதும்,,,, அந்த, ஒற்றை ரூபாயையும், உன் கையால்,இணைத்தவளே ? சொர்ணமே ! நீங்கள், ஒரு ஆசிரியையாகத்தான்,அந்த என், வகுப்பறைக்குள், நுழைந்தீர்கள் ! தாயே ! சொர்ணமே ! கல்லூரியில் பயிலும், உங்கள் சகோதரனி ருக்கும், சேவல் பண்ணையில்,,,,,,, நீங்கள், நுழைய முடியாது ? ஆனால் ? அவரை, அழைத்து வர நான்,செல்லலாம் !,,,,அன்று ? ஒர் காவலனாய், உங்கள் கரம் பற்றி, நடந்த பிள்ளை,,,,,,,,,,,நான் ! உங்கள், சகோதரனால்,செல்லமாய், அடிபட்ட பிள்ளை,,,,,,,,,நான் ! அப்போதும், உங்கள் கரம் பற்றி, நடந்த உங்கள் பிள்ளை ! -நான் – நீங்கள், ஒரு ஆசிரியையாகத்தான்,அந்த என், வகுப்பறைக்குள் , நுழைந்தீர்கள் ! காலச் சுழற்சியில்,,,,,,,,,,,, கண்ணீரோடு, பிரிந்த,,,,,,,,, நான் ? குமரியிலும்,கோவையிலும்,,,,, உங்களைப் பற்றிய, நினைவுகளோடு உலவினேன் ? முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும்,,,,,,,,,,,,,,,,,, நான், உங்கள், பிள்ளையானேன் ? நரைத்துப் போன தலையுடனும், தள்ளாடுகிற நடையுடனும், கனிகளோடு, வந்தேன் ! -பள்ளிக்கு- உங்களைப் பார்க்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அதே ! அதே ! கனிந்த முகம் ! கனிவு சிந்தும், புன்னகை,,,! நீங்கள்...... நீங்களே தான்,,,,,,,,,,,,,! உங்கள், உங்களின் கனிந்த, கனி முகத்துப் புன்னகையினைக் கண்டபின், மீண்டும்,,,,,, நான்,,,,குழந்தையானேன் ! அம்மா ! நீங்கள், ஒரு, ஆசிரியையாகத்தான், அந்த வகுப்பறையில், இருந்தீர்கள் ! நான், நான் மட்டும், ஒரு பிள்ளையாக, உங்கள் பிள்ளையாகத்தான், அந்த,,,,,,,,வகுப்பறைக்குள் நுழைந்தேன் ! அன்றைய,,,,,, நான்,,,,,,,,,,,,,மாணவனாகவும், இன்றைய,,, நான்,,,,,,,,,,,,,,,,உங்கள் பிள்ளையாகவும், நுழைந்த வேளைகளின், இடைவெளி என்னவோ ? முப்பத்தியேழு ஆண்டுகள் ! அம்மா ! அப்போதும், நீங்கள்,,,,,நீங்களாகத்தான்,,,, நான், மட்டும்,,,,,,,,,,,,, நரை, திரை,,,,,,யோடி,,, நாணம் கூடி,,,?,,,,,,,நடம்,கெட்டு...!? அம்மா ! விழாக்களின், விசேக்ஷம்,,,,,,நீங்கள் ! விழா நாட்களின்,,,,,,,,,,,,,,,, முதல் வாழ்த்து !, உங்கள், வாழ்த்தாகத்தான் இருக்கும் ! அம்மா ! நீங்கள்,,,,,,,,,,,,,,,, என் இல்லம் வந்தீர்கள் !, என், குழந்தைகளுடன், இருந்தீர்கள் ! இனிப்பாக இருந்ததம்மா ! அந்த நாள், இனிதாக இருந்ததம்மா ! என் இல்லமெங்கும், வெகு நாட்களுக்குப் பின்,,, என் இல்லம் ! உங்கள், புன்னகையினால்,,,,, பொன்னொளி வீசிற்று !,,,,,,,,,,,,,,,,அம்மா ! அமெரிக்கா, செல்கிறேன் ? அமரிக்கையாய்ச் சொன்னீர்கள் ! தம்பியையும்,,,,,,மருமகளையும், பிறக்கும்,,,குழந்தையை,,,,, உங்கள் தங்கக் கைகளில் தாங்கிடத் துடிக்கிறத் தாயாய்,,,, அற்புத சந்தோக்ஷத்துடன், பயணித்தீர்கள் !,,,,,,,,,,,,,,,,,,அம்மா ! அம்மா ! எனக்கும், அப்பநாயக்கன்பட்டியே,,,,அறியாத,,,,,,, என்,,,,கைபேசிக்கும், அமெரிக்காவிலிருந்து,,,,உங்கள் அழைப்புகள்,,,,,,,,,,,,,! அம்மா ! உங்களால்,,,,,,,,,,,, நான் ? , உவகையானேன் ! உன்னதமானேன் ! அம்மா ! அமெரிக்காவின் டிசம்பர் 14, விடியலில்,,,,, என்னுடன், பேசினீர்கள்,,,,,,,,,,! என் குழந்தைகள் நலம் கேட்டீர்கள் ! தாய் !,,,,,,,,,நீங்கள், தாயகம் வரும்,,,,,,,,,,, நாள் ? சொன்னீர்கள் ? சிரித்தபடி,,, என், சிந்தை,,,,,,,,,,,நனைத்தீர்கள் ! உன்னால், உங்களால்,,,, உங்கள் குரலால்,,,,,,,,,,,, நான்,,,புனிதனானேன் ? அம்மா ! இப்போது,,,,,,,,,,,,,,,,,,,,,, நீங்கள் ! எங்கே ?,,,,,,,,,,,,,,,,,,, அம்மா ! என்னுடன் தான், கடைசியாகப் பேசினீர்களா ? அம்மா ! அம்மா ! என், அழுகுரல்,,,,,,,,,,,,,,,, உன், உங்கள்,,, காதுகளில், விழவில்லையா ?,,,அம்மா ! உங்கள் தமிழால்,,,,, நீங்கள், என் கரம் பற்றிச் சொல்லிக் கொடுத்த தமிழால்,,,,,,,,,,,,,கேட்கிறேன் ? அம்மா ! என் அழுகுரல், உன் காதுகளில், விழவில்லையா ?,,,,அம்மா ! அம்மா ! வா ! சொர்ணமே ! வா ! இந்தப் பிள்ளை,,,,,,,,,காத்திருக்கிறேன் ! உன்னைத் தாலாட்ட,,,,,,, வா


ஒரு ஆசிரியை,,,,,,,,,,,,,,என், அம்மா !,,,ஆனபோது ,,,?

அம்மா !

என்
அழுகுரல் !
உன் காதுகளில்,
விழவில்லையா ? தாயே !


நீங்கள்,
அந்த பள்ளியில்,,,,,,,,,,,,,,,,,,
ஒரு
ஆசிரியையாகத்தான், நுழைந்தீர்கள் !....................

நெற்றி நிறைத்த
வட்டப் பொட்டு !
கண்ணொளி வீசிடும்
வட்ட நிலா முகம் !
முத்தெடுக்கும், ஊரென்ற
பேருக்கேற்ப,,,,,,,,,,,,முத்துப் பல் சிரிப்பு !

எப்பொழுதும்,,,,,
புன்னகைக்கும்,,,,,,,,,,பூ முகம் !
நீங்கள்
ஒரு ஆசிரியையாகத்தான்,அந்த
என்
வகுப்பறைக்குள் நுழைந்தீர்கள் !

காந்தல் கறுப்பு,
குட்டை உருவம்,,,?
அலை பாயும் கண்கள் ?
மணி யடித்தால், தட்டெடுக்கிற பிரவாகம் ?
பனையோலைக் குடிசைகளில்,
பரிதவித்த காலத்திய,,,,,,,,,,,,,,,,,, நான் ?


என்
இல்லத்தின் வறுமை ?
என் கண்களில்,
இந்திய வரைபடத்தைப் போல,,,,,,,,,,
குறுக்கும்,நெடுக்குமாய்,
உலாப் போகிற பொழுதுகளில்
நீங்கள்,
ஒரு ஆசிரியையாகத்தான்,அந்த
என்
வகுப்பறைக்குள் நுழைந்தீர்கள் !

எப்படி ?
எப்படி ? நீங்கள்
என்
தாயாய்,
அம்மாவாய்,,,,,,,,,, மாறினீர்கள் ? அம்மா !
இன்றெனக்கு
வயது 47 .ஆயிற்று !
அன்றென் வயது 9..................

பதினாறு வயதினிலே,
பதினேழு பிள்ளையம்மா ?
தாயாகவில்லையம்மா ,
தாலாட்டுப் பாடுகின்றேன் ?
கன்னித்தாய் திரைப்படபாடல் வரிகள்,
அன்றெனக்குப் புரியாதது?
ஏறத்தாழ 38 வருடங்களுக்குப் பிறகு,
இன்றெனக்குப் புரிகிறது ! ,,,அம்மா !

அம்மா !
என்னை,
என் காயச் சண்டிகைப்
பசியினைத் தணித்த, மணிமேகலையே !
நீ !
நீங்கள்,எந்த
ஆபுத்திரனிடம்,
அமுத சுரபியினைப் பெற்றாயோ ?
தெரியாது ! ஆனால்,
நான், காயச் சண்டிகைதான் !
நீங்கள், மணிமேகலை தான் .மணிமேகலைதான் !!.

’’பவதி பிச்சாந்தேஹி’’
எனக் கேட்ட,
சங்கரனுக்கு,,,,,,,,,,,,,,,,
தன் வறுமையிலும்,
நெல்லிக் கனி கொடுத்தவர், வீட்டில்,
கனகதாரா ஸ்தோத்திரம் பாடி,
சொர்ண மழை பெய்வித்தானாம் ?
காலடி சங்கரன் !

சொர்ணமே !
உன்,
கரம் பற்றி,
காலடி ஒரம்,நடந்து வந்த,
பிள்ளை யென்,,,,,,,
வாட்ட முகங் கண்டு,
வட்ட நிலா ! முகத்தோடு,
வட்ட வட்டமாய்,தோசை வார்த்து,
வாட்டம் போக்கிய,
தாயே !
சொர்ணரேகைக்கரை ,,,,,அம்பிகையே !
அம்மா !

சீழ் பிடித்து,
ஒழுகும் காதுகளோடு ?,,,
நான்,,,,,,,,,,,,,,,,வகுப்பினில்,
குறுகி நிற்கையிலே?
சேலைத் தலைப்பெடுத்துத் துடைத்தபடி,,,
என்,
தலைக் கோதி,வருடுகின்ற,,,,
சொர்ணக் கரங்கள்,,,,,,,,,,,,!
இன்றெங்கே,,,? அம்மா !!!!!!!!!!!!!

பசிக்கின்ற வேளையில்
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்ப,,,,,
குறளுக்கு,,,,,,,என்னை வைத்து,,,
குரல் கொடுக்க வைத்த ,,
கோதையே !
பேதையாய்,,,,?
நான் ,,இன்று ?
அம்மா !


பாஞ்சாலங்குறிச்சி !
வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை,,,,
திறந்த நான்காம் நாள்,,,பள்ளிச் சுற்றுலா !
கடைந்தெடுத்த காசெல்லாம்,
கிளம்புமுன்னே,,,,,,,,,,,,,,,,,
கடைவீதி பண்டங்களாய்,வயிறடைக்க,
பாஞ்சால மண்ணில்,
பிள்ளை,,!
நான் ?
வாய் பிளந்து,
வயிறு பிசைய நின்ற போதும்,,,,
எனை,
அரவணைத்து,,,
கொய்யா பழம் , முதல்,
குச்சி மிட்டாய் வரை,,,,
வாங்கித் தந்து,,,
என்
கும்பி பசியடங்க வைத்தவளே !
அம்மா !
நீங்கள்,,,,,அந்த
என்
வகுப்பறைக்குள்,
ஒரு ஆசிரியையாகத்தான், நுழைந்தீர்கள் !


மார்கழித் திங்கள்,
மதி நிறைந்த நன்னாள் !
நீராடப் போதுமினோ ?
சூடிக் கொடுத்த,
சுடர்க் கொடியாள், பாட்டின்,
பொருள் விளங்க வைத்து,,,
சங்கர ராமேஸ்வரர், உடனுறை
பாகம் பிரியாளினையும்,
வணங்க வைத்து,,,,,,,,,,கூடவே,
தயிர்ச் சோறு, சர்க்கரைப் பொங்கலையும்,
தாய் மடிச்சேயாய், சாப்பிட வைத்து,,,,,
அழகு பார்த்த,,,
அமுதமே ! சொர்ணமே !
அம்மா !

நீங்கள்,
ஒரு ஆசிரியையாகத்தான்,
என்
வகுப்பறைக்குள், நுழைந்தீர்கள் !

எந்தை இழந்ததால்,
கந்தையாய், போன,,,,,
என்
இல்லம்!
வறுமையின், கோரப் பிடியில்,,,,
தட்டாமாலையாய் ? ஆயிற்று,,,,,,,,,,,
எங்கள்,,,வாழ்க்கை ?
கோழிக் குருணையும்,
மரவள்ளிக் கிழங்கு, மட்டுமே ?
எங்கள், உணவாக இருந்த வேளை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,?

கடிகாரக் கடையின்,
எடுபிடி ஆளாய்ப் போவதென,
என் இல்லம்,
முடிவெடுத்த போது,,,,,?
அவன், படிக்கட்டும் ! என்று,
இவனையும்,
படிக்க வைத்த ,,,,பரிபூரணியாய்,,,,!

ஆறுமுகசாமி நாடார்,
அனாதை இல்லத்தில், சேர்ந்தாவது,,,
படிக்கலாமென்கிற நிலையில்,,,,
விண்ணப்ப மனுவுடன்
ஒற்றை ரூபாய்,
இணைக்க வேண்டுமென்ற போதும்,,,,
அந்த,
ஒற்றை ரூபாயையும்,
உன் கையால்,இணைத்தவளே ?
சொர்ணமே !
நீங்கள்,
ஒரு ஆசிரியையாகத்தான்,அந்த
என்,
வகுப்பறைக்குள், நுழைந்தீர்கள் !

தாயே ! சொர்ணமே !
கல்லூரியில் பயிலும்,
உங்கள் சகோதரனி ருக்கும்,
சேவல் பண்ணையில்,,,,,,,
நீங்கள், நுழைய முடியாது ?
ஆனால் ?
அவரை, அழைத்து வர
நான்,செல்லலாம் !,,,,அன்று ?
ஒர்
காவலனாய்,
உங்கள் கரம் பற்றி,
நடந்த பிள்ளை,,,,,,,,,,,நான் !
உங்கள்,
சகோதரனால்,செல்லமாய்,
அடிபட்ட பிள்ளை,,,,,,,,,நான் !
அப்போதும்,
உங்கள் கரம் பற்றி,
நடந்த உங்கள் பிள்ளை !  -நான் –

நீங்கள்,
ஒரு
ஆசிரியையாகத்தான்,அந்த
என்,
வகுப்பறைக்குள் , நுழைந்தீர்கள் !

காலச் சுழற்சியில்,,,,,,,,,,,,
கண்ணீரோடு, பிரிந்த,,,,,,,,, நான் ?
குமரியிலும்,கோவையிலும்,,,,,
உங்களைப் பற்றிய,
நினைவுகளோடு உலவினேன் ?
முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பிறகு,
மீண்டும்,,,,,,,,,,,,,,,,,,
நான்,
உங்கள், பிள்ளையானேன் ?

நரைத்துப் போன தலையுடனும்,
தள்ளாடுகிற நடையுடனும்,
கனிகளோடு, வந்தேன் !
-பள்ளிக்கு-
உங்களைப் பார்க்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அதே !
அதே !
கனிந்த முகம் !
கனிவு சிந்தும், புன்னகை,,,!
நீங்கள்......
நீங்களே தான்,,,,,,,,,,,,,!
உங்கள்,
உங்களின் கனிந்த,
கனி முகத்துப்
புன்னகையினைக் கண்டபின்,
மீண்டும்,,,,,,
நான்,,,,குழந்தையானேன் !



அம்மா !
நீங்கள்,
ஒரு,
ஆசிரியையாகத்தான்,
அந்த வகுப்பறையில், இருந்தீர்கள் !
நான்,
நான் மட்டும்,
ஒரு பிள்ளையாக,
உங்கள் பிள்ளையாகத்தான்,
அந்த,,,,,,,,வகுப்பறைக்குள் நுழைந்தேன் !

அன்றைய,,,,,,
நான்,,,,,,,,,,,,,மாணவனாகவும்,
இன்றைய,,,
நான்,,,,,,,,,,,,,,,,உங்கள் பிள்ளையாகவும்,
நுழைந்த வேளைகளின்,
இடைவெளி என்னவோ ?
முப்பத்தியேழு ஆண்டுகள் !
அம்மா !
அப்போதும்,
நீங்கள்,,,,,நீங்களாகத்தான்,,,,
நான், மட்டும்,,,,,,,,,,,,,
நரை, திரை,,,,,,யோடி,,,
நாணம் கூடி,,,?,,,,,,,நடம்,கெட்டு...!?


அம்மா !
விழாக்களின், விசேக்ஷம்,,,,,,நீங்கள் !
விழா நாட்களின்,,,,,,,,,,,,,,,,
முதல் வாழ்த்து !,
உங்கள், வாழ்த்தாகத்தான் இருக்கும் !
அம்மா !
நீங்கள்,,,,,,,,,,,,,,,,
என் இல்லம் வந்தீர்கள் !,
என்,
குழந்தைகளுடன், இருந்தீர்கள் !
இனிப்பாக இருந்ததம்மா !
அந்த நாள்,
இனிதாக இருந்ததம்மா !
என்
இல்லமெங்கும்,
வெகு நாட்களுக்குப் பின்,,,
என் இல்லம் !
உங்கள்,
புன்னகையினால்,,,,,
பொன்னொளி வீசிற்று !,,,,,,,,,,,,,,,,அம்மா !

அமெரிக்கா, செல்கிறேன் ?
அமரிக்கையாய்ச் சொன்னீர்கள் !
தம்பியையும்,,,,,,மருமகளையும்,
பிறக்கும்,,,குழந்தையை,,,,,
உங்கள்
தங்கக் கைகளில்
தாங்கிடத் துடிக்கிறத் தாயாய்,,,,
அற்புத சந்தோக்ஷத்துடன், பயணித்தீர்கள் !,,,,,,,,,,,,,,,,,,அம்மா !

அம்மா !
எனக்கும்,
அப்பநாயக்கன்பட்டியே,,,,அறியாத,,,,,,,
என்,,,,கைபேசிக்கும்,
அமெரிக்காவிலிருந்து,,,,உங்கள்
அழைப்புகள்,,,,,,,,,,,,,!
அம்மா !
உங்களால்,,,,,,,,,,,,
நான் ? ,
உவகையானேன் !
உன்னதமானேன் !

அம்மா !
அமெரிக்காவின் டிசம்பர் 14,
விடியலில்,,,,,
என்னுடன், பேசினீர்கள்,,,,,,,,,,!
என்
குழந்தைகள் நலம் கேட்டீர்கள் !
தாய் !,,,,,,,,,நீங்கள்,
தாயகம் வரும்,,,,,,,,,,,
நாள் ? சொன்னீர்கள் ?
சிரித்தபடி,,,
என்,
சிந்தை,,,,,,,,,,,நனைத்தீர்கள் !
உன்னால்,
உங்களால்,,,,
உங்கள் குரலால்,,,,,,,,,,,,
நான்,,,புனிதனானேன் ?

அம்மா !
இப்போது,,,,,,,,,,,,,,,,,,,,,,
நீங்கள் !
எங்கே ?,,,,,,,,,,,,,,,,,,, அம்மா !
என்னுடன் தான்,
கடைசியாகப் பேசினீர்களா ?
அம்மா !

அம்மா !
என்,
அழுகுரல்,,,,,,,,,,,,,,,,
உன்,
உங்கள்,,,
காதுகளில், விழவில்லையா ?,,,அம்மா !

உங்கள் தமிழால்,,,,,
நீங்கள்,
என் கரம் பற்றிச்
சொல்லிக் கொடுத்த தமிழால்,,,,,,,,,,,,,கேட்கிறேன் ?
அம்மா !
என்
அழுகுரல்,
உன் காதுகளில், விழவில்லையா ?,,,,அம்மா !

அம்மா !
வா !
சொர்ணமே ! வா !
இந்தப் பிள்ளை,,,,,,,,,காத்திருக்கிறேன் !
உன்னைத் தாலாட்ட,,,,,,,
வா !
தாயே !
தங்கமே ! சொர்ணமே !
என்,
பேரப் பிள்ளையாகவாவது,,,,,
மீண்டும்,
நீ !
நீங்கள் !!
பிறந்து வா !
என்
செல்வமே !
செல்லமே !
வா ! அம்மா !
உனக்காக காத்திருக்கிறேன் ! அம்மா !
உங்களுக்காகக்  காத்திருக்கிறேன் ! அம்மா !




                                        அன்புடன் என்றும்,

                                         அ.வேலு