Saturday, 8 September 2018

போதும் !
போதும் ?
வலிக்கிறதடா ? -நரசிம்மா -
குற்றம் என்னடா ? செய்தேன் ? குற்றம் ?
பிள்ளை என பிரகலாதனைப் பெற்றது ? தவறோ ?
ஆயிரம் பேரைக் கூடி அவனியெங்கும்,,,,
பிள்ளைகள் பலப்பல பெற்றிருந்தால்....?
என் பெயரினைச் ஜே ஜேயெனச் சொல்லி இருக்குமே ?
நரசிம்மா ?
ஓன்று பெற்றேன் !
அவனும்
என் பேர் சொல்லாது...
உன் பேர் சொல்வானென்றால் ?
நானெதற்கு .... நாயகனாய் ?
தூண் பிளந்தாய்?
எனைத் தூக்கி
வழிநடை வந்தாய்?
அந்தி சந்தி வரும் வரைக் காத்திருந்தாய்?
நகங் கொண்டு வயிறு கிழித்தாய் ?
குடலுருவி மாலையிட்டாய் ?
இன்னும் அடங்காது ஆடுகிறாய் ?
வலிக்கிறதடா ?
வலிக்கிறதடா ?
கண்ணீர் விட்டால் ....
நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்பதனால்.....
அடங்கிக் கிடக்கின்றேன்?
ஆயின்
நீயோ?
ஊரிலுள்ள கோவில் தூண்களிலெல்லாம். ....?
கோர முகம் காட்டிச் சிரிக்கின்றாய்?
உனைத்தான். ....
பிள்ளை பல பெற்றோரெல்லாம்,,,,
கூடிக் கூடி. .
கூவிக் கூவி வணங்குகின்றார்?
வேடிக்கை மனிதர்களை ,,,
நினைத்த படி.....
நானோ ?
அழுகின்றேன்
நான்
யாரென்று தெரிகிறதா ?
மனிதர்களே.....
பிள்ளை பெற்று வளர்த்தவன்?
என் பேர் இரணியன்

No comments:

Post a Comment