Saturday, 8 September 2018



உறங்காப் புளி !
உடைய நங்கைக்கு , குழந்தை பிறக்கிறது !
காரியத்தில் கண்ணாக இருக்கின்ற காரியாரின் பிள்ளை அசைவற்று சடமாக இருக்கிறதே என்று எண்ணி,,,
அந்த ஆண் பிள்ளையை திருக்குருகூரில் இருந்த இந்த புளிய மரத்தின் அடியிலே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள் காரியாரும்,,உடைய நங்கையும்,,,,
ஸ்ரீ ராமனை இலக்குவன் பதினான்கு ஆண்டுகள் காத்ததனைப் போல,,,
இந்த புளிய மரமும்,,உறங்காது,,
பதினாறு ஆண்டுகள் காத்ததனால்,,,
ஆழ்வார் திரு நகரியில் இருக்கின்ற இந்த உறங்காப் புளி பெருமை படைத்தது !
ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும்,,,
இப் புளிய மரம் உறங்குவதில்லை,,,
ஆம்,,
புளிய மரத்தின் இலைகள் இரவில் சுருங்கும் தன்மையுள்ளது!
ஆனால்,,,
இம் மரத்தின் இலைகளோ சுருங்குவதில்லை,,,,
பதினாறு ஆண்டுகள் கடக்கின்றன,,
அன்றொரு நாள் வடதேச யாத்திரையில்,,,அதுவும்,, அயோத்தியில் யாத்திரை செய்து கொண்டிருந்த மதுரகவியின் மன வட்டத்தில் ஒரு ஒளி வெள்ளம் அலைந்தாடிக் கொண்டிருக்கிறது,,,?
இதுவென்ன ?
எங்கிருந்து வருகிறதென நோக்க,,,,
தாம் பிறந்த தேசத்தில் இருந்தல்லவா ? வருகிறது,,,,என்று,,,வேக வேகமாக வருகின்றார்,,கங்கை நீரை,,சடமாக இருந்த குழந்தையின் மேல் தெளிக்கின்றார்.
குழந்தை அசைகின்றது,,,
"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?"
என்று கேட்கின்றார் மதுரகவி
"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் வர
ஆஹா !
மாறன் இவன் செய்யும் வேதமே !
இனி நமக்குப் பாடமென ,,
மதுர கவியெனும் பெரியவர்,,
மாறன் எனும் அக்குழந்தைக்கு சீடனாக ஆகின்றார் !
அந்த நகரம்,,, ஆழ்வார் திரு நகராக,,
ஆழ்வார் திரு நகரியாக மாறுகின்றது !
நம்ம ஆழ்வார் !
நம்மாழ்வாராக ஆகின்றார் !
திரு நகரியின் ஆதி நாதன் இன்றும் அருள் கொண்டு நிற்கின்றான் !
ஆசி பெற வந்தோர்க்கும்,,
ஆசி பெற நினைத்தோர்க்கும்,,
அருள் மழையினைப் பொழிகின்றான் !

No comments:

Post a Comment