Saturday, 8 September 2018

ஆற்றின் திசையில் படகுகள் !
காற்றின் திசையில் துடுப்புகள்!
நாற்றின் வாசனையுடன்
உங்கள் முகத்தினைக்
காண முந்தி வருகிறேன்...

என் படகினில்...
உங்கள் வீட்டுத் தெருவின் பன்னீர் பூ வாசத்தினை,,,,
நெஞ்சம் நிறைக்க மூச்சாய் நுகர்ந்து. ..பின்
பிந்தியே வருகிறேன். ...

எனக்கும்
உங்களுக்குமான ஆறு ஒன்றே என்பதனால்....
ஆற்று நீரில்
சுவடுகள் பற்றியபடியே....
உங்கள்.
கை பற்றி நடக்கும் காலம் வரைக்கும்..
இப்படித்தானே ?
எனது பயணம் !

No comments:

Post a Comment