புறம் நூறு
விளைகின்ற பயிர்மடங்கி, வேரெல்லாம் வான் நோக்க?
உளைகின்ற மனமடக்கி , வேந்தனே வா யென்வளம் நோக்க?
அழுகின்ற விழியடக்கி வேளாளன் வாழ் நிலம் நோக்க ?.
உழுகின்ற கரமடக்கி வேலெடுக்கும், வேந்தன் முகம் நோக்க,
விழுகின்ற சருகடங்கி வேழமது மெல்லத்தான் வயல் கடக்க ?
தொழுகின்ற கடவுளரின் கைவாளைத் தானெடுத்து தாய் கொடுக்க,
எழுகின்ற கதிர் வீச்சமென வாள் வீசி, வேழமுடன், புலி கொன்றான் !
அழுகின்ற மாதர்களின் விழிநீர்த் துடைத்த மகன் விண் சென்றான் !
தொழுகின்ற கடவுள் இனி , அவனே ! எனச்சொல்லி அணைத்தபடி ,
ஆளுகின்ற வேந்தனவர், வீழ்ந்தவர்க்கு நடுகல் நாட்டி,சிலைவைத்து
பழுக்கின்ற காய், கனிகள், படையலிட்டு வணங்கி , இனம் வீரத்தால்,
தளும்புகின்ற காட்சிக்கு சாட்சி சொல்வதன்றோ ? தமிழ் கண்ட புறம் நூறு!
No comments:
Post a Comment