Thursday, 13 February 2020

பேரறிஞர் அண்ணா நினைவு நாளுக்காக,,,
அண்ணா ! அண்ணா ! என்றழைக்கவொரு அண்ணன் இருந்தான் !
அண்ணா ! என்றதும், தம்பீ ! என்றே கரகரக்கவொரு மன்னன் இருந்தான் !
பல்லவர் கோட்டத்துக் காஞ்சியிலே தான் பிறந்திருந்தான் !
வல்லவர் கோட்டத்தைச் சாய்த்தேதான், கோட்டையிலே அமர்ந்தான் !
ஆங்கொரு தமிழ் ! ஈங்கொரு தமிழ் ! போதும், போதுமே தமிழ் ! என
பாங்கவர் சொல்லிய நாட்டினிலே ! பாரெங்கும் தமிழ் ! தமிழே என்றான் !
ஒன்றே குலம் ! என்றான் !. ஒருவனே தேவன் ! என்றான் !
நன்றே ’’தமிழ் நாடு ‘’ என்றே நானிலத்தார் அறிய வைத்தான் !
ஆளவொரு மொழி ! வாழவொரு மொழி ! ஆட்சி நடத்தவொரு மொழி !
ஆண்டவர்கள் சொன்னதெல்லாம் புறந்தள்ளி இருமொழி போதுமென்றான் !
கல் தோன்றி, மண் தோன்றி, வருமுன்னாலே, தோன்றி வந்த மொழியதற்கு,
சொல்லுக்குச் சுவை கொடுத்த தமிழுக்கு உலகத்தமிழ் மாநாடு கண்டான் !
சோற்றுக்கு அலைகின்றோம் பஞ்சமிங்கே ? என்றழுதவர்கள் மத்தியிலே,
நாற்றுவயல் எலிக்கறியைச் சாப்பிடுங்கள் என்ற சண்டாள மதியோர் முன்னால்,
மூன்றுபடி ரூபாய்க்கு ! லட்சியம் தான் ! ஒருபடி ரூபாய்க்கு நிச்சயம் தான் !
என்று சொல்லி வென்ற அண்ணா !ஒரு ரூபாய்க்கு படி அரிசி கொடுத்தவர்தான் !
தாலியொரு வேலி ! என்றே அறிந்தவர் தான் ! ஆதலினால்,,, மாலை மாற்றிய
சீர்திருத்த திருமணத்தையும் செல்லுகின்ற பெரிய சட்டமாக்கியவர் தான் !
நாட்களது எண்ணப்படுகிறதென்றே , திருக் கருத்திருமன் சபித்த போதும்,,
என்னடிகள் அளந்தே நடக்கின்றேன்!என்றபடி சட்டமன்ற மாண்பு காத்தவர்தான்
முத்துக்குளித்தது கொற்கையில் மட்டுமல்ல முத்துநகர் தூத்துக்குடியிலும் தான்!
சொத்தைக் காரணங்கள் கூறாமல் துறைமுகம் அமைத்திடுக ! என்றவர் தான் !
ஜாம்ஷெட்பூர் டாடாக்கள் போலே,,, சேலத்துத் தமிழர்களும் ஆதல் வேண்டும் !
ஜம்பத்தை விட்டுவிட்டு சேலம் உருக்காலைத் திறந்திடுக அரசே ! என்றவர்தான்!
பல் முளைக்கும் குழவி, முதல் பல் விழுந்த கிழவிவரை கரங்கூப்பி வணங்கிட, சொல்லுக்குச் சொல்லெடுத்த எங்கள் அண்ணாவின் ஆட்சித்திறன் சொல்ல இன்றொரு நாள் போதுமோ ?
அ.வேலுப்பிள்ளை
சிறுவாணி வாசகர் மையத்தின் நாஞ்சில் நாடன் விருது வழங்கும் விழா,

02/02/2020 மாலை 5.30 க்கு கோவை ஆர்த்ரா அரங்கில் நடைபெறுவதாக சென்ற மாதமே சிறுவாணி வாசக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஜி.ஆர்.பிரகாக்ஷ் அவர்கள் புலனத்தின் மூலமாகவும், முகநூல் மூலமாகவும், மாதந்தோறும் அனுப்புகிற புத்தகங்களுடன் வைத்து அனுப்பிய அழைப்பிதழ் மூலமாகவும்,,, அறிந்து,,,,
மிக மிக சாதாரணன் ஒருவர் !
நேற்றைய பஞ்சாலைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர்,,,
பத்திரிக்கை உலகின் மிகப் பெரிய ஜாம்பவான்களுடன் பழகிப் பேசி,,,
இப்பொழுதும், தன் தனித்தன்மை மாறாமலிருக்கிற கொங்கு நாட்டுச் சகோதரர்
திரு . கா(ளியம்மாள்). சு(ப்பிரமணியன்). வேலாயுதம் அவர்கள் விருது பெறும் நிகழ்ச்சிக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டுமென்பதனால்,,, சில பயணங்களை ஒதுக்கி விட்டு இன்றைய ஞாயிறின் மாலைப் பொழுதினில்,,,
கிருக்ஷ்ணம்மாள் கல்லூரி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தேறினேன் !
மாலைச் சூரியன் !
என்னைப் படம் பிடியடா ! பிள்ளாய்,,,,
இன்று முகநூலில் ,ஒரு ஐம்பது லைக்குகளுக்கு,,நான் கேரண்டி என்று உத்திரவாதம் கொடுத்துக் கொண்டிருந்தார் ?
ஒடும் பேருந்திலிருந்து,,ஜன்னலுக்கு வெளியேவா ?,,,,
பொன்னந்தி மாலைப் பொழுதிலா,,,,? என்று நானும்,,அலைபாய்ந்து கொண்டிருந்த போது,,,,
நான் பயணித்த கோவையின் தனியார் பேருந்தானது,,,
ஐந்து சிக்னல்களைத்தாண்டி,,,,
ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும்,,,
முன் சென்ற பேருந்தினைத் துரத்தாமல்,,,
பின்னால் வருகிற பேருந்தின் முகம் கண்டபின்னும் நகராமல்,,,,
பின்னால் வந்து முட்டுவது போல நின்ற பின்னே,,, மெல்ல நகரவேண்டும் என்கிற கோவையின் தனியார் பேருந்துகளின் விதிகளுக்குட்பட்டு நகர்ந்து கொண்டிருந்தது !
ஆறு மணிக்குள்ளாவது சென்று விடுவோமா ? என்று அலை பாய்ந்து கொண்டிருந்த போது,,,,
மூன்று முன்னாள் முதல்வர்கள் கைகாட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும்,,,
அட,,,
நாம,,இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம்,,வந்தே விட்டது,,,என்றபடி,, பேருந்திலிருந்து இறங்கினேன்,,,,
விழா அரங்கம் செல்லும் பாதை அடைக்கப்பட்டிருந்தது !
காவல் துறை,,தன் பணியினைச் செய்து கொண்டிருந்தது !
கட்டுக்கடங்காத பெருங்கூட்டம் !
சாலை முழுவதும் ஆக்ரமித்திருந்தது !

அட !,,
சகோதரர் கா.சு.வேலாயுதன் கலக்குகிறார் !
இவ்வளவு கூட்டம்,,,!
அதுவும்,,
ஒரு பத்திரிக்கையாளருக்கு,,,,
ஒரு எழுத்தாளருக்கு,,வருகிறதென்றால்,,,,,,?
அடடா,,,,!
நேற்று முகநூலில் பார்த்த விளம்பர சுவரொட்டிகளில் மைக் பிடித்து சிரித்துக் கொண்டிருந்த சகோதரர் !
கொடுத்து வைத்தவர் தான் !
எத்தனை இரு சக்கர வாகனங்கள் ?
எத்தனை மகிழுந்துகள் ?,,,
மனசு சந்தோக்ஷப்பட்டது,,,,,,!
கூடவே,,,இது கூடிய கூட்டமா ?
கூட்டிய கூட்டமா ?,,, மனசு கேட்டது ?
ஆனாலும்,,,
கொங்கு நாட்டுக் காரர் !
அதிலும்,,,,சற்றுப் பொதுவுடமைப் பேசுகிறவர் கூட்டிய கூட்டமாக இருக்காது !
அப்படியெல்லாம்,,செய்பவராக இருந்தால்,,,,
அந்த கரங்களின் பேனா முனை,,,
எப்பொழுதோ,,,,வளைந்திருக்கும்,,,,?
சற்றும்,,நெருடலில்லாத மனிதரல்லவா !
அடேய்,,பிள்ளாய்,,,!
இது,,
இதுதான்,,உண்மையடா !
உள்மனசு இடித்துரைத்தது !
சாலைத் தடுப்பினைத் தாண்டிச் செல்ல ஆரம்பித்த போது,,,,
இப்படி,,இல்ல,,,,
அப்படி,,,வேறு வழி காட்டினார்கள் !
ம்ஹீம்,,,
இவிங்க,,முன்னாடிச் செல்ல முடியாது,,,,
வந்த பாதைக்கே சென்று,,,,
கோவை மக்கள் பெரும்பான்மையானவர்கள்,,,,யாரும்,,,,,
நடக்காத,,, கோவை பழைய தபால் நிலைய நடைபாதை வழியாக,,,, நடக்கலானேன்,,,,
அங்கேயும்,,,
இரு போக்கு வரத்துக் காவலர்கள்,,,,
காற்றில் மாசு கலந்து கொண்டிருந்தார்கள் !,,,
நடைபாதையில் மெல்ல நடக்கலானேன்,,,,,,,,
விழா அரங்கம்,,,தாண்டியும்,,,
கூட்டம்,,,?
விழா,,,அரங்க வாயிலை மறித்தும் மகிழுந்துகள் !

விழா அரங்கம்,,சிறியதென்பதனால்,,,,
பக்கத்தில்,,,,உள்ள
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,மாளிகையில் வைத்து விட்டார்களோ ?
நெசமாகவே பொறாமைப் பட்டேன் ?
ஆனால்,,,,
எதிர்ப்புற சுவரில்,,,,
பேரறிஞரும்,,புரட்சித் தலைவரும்,,,
சிரித்துக் கொண்டிருந்த சுவரொட்டிகளால்,,நிறைந்திருந்தது,,,!
சந்தேகம்,,தெளியவாரம்பித்தது,,
பொறாமை விலகவாரம்பித்தது !
அமைச்சர் ! கட்சி அலுவலகத்துக்கு வர்றதுக்கே,,இவ்வளவா ?
வாழ்க தேசம்,,என்றபடி,,,, நோக்க,,,
ஆனால்,,,
விழா அரங்கம் செல்லும் கட்டிடத்தின் உள்ளேயும்,,,காவலர்கள் !
அதிலும்,,பெண் காவலர்கள் !
சுண்டல் சாப்பிட்டு,,தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர் !
கொஞ்சம் ,,,
கொஞ்சமென்ன ? கொஞ்சம்,,,நிறையவே,,,
சந்தேகத்துடன் தான்,,,, மகிழுந்துகளைத் தாண்டி,,இருசக்கர வாகனங்களை விலக்கி நடக்கையில்,,,
விருது வழங்கும் விழா நெகிழி விளம்பர பதாகை கண்ணில் பட்டது !
கொஞ்சம் வெண்சுண்டலும்,,,
கொஞ்சம் தேநீரும் அருந்திய படியே,,
என்னை நானே,,,ஆசுவாசப்படுத்திக் கொண்டேன் !
விழா அரங்கின் படிக்கட்டுகளில் இறங்கவாரம்பித்தேன் !
படிக்கட்டுகளின் விளிம்பில் நின்றபடி,,,அரங்க வாயிலில்,
’’எழுத்தாளர் காசு.வேலாயுதனின் இரண்டு சிறுகதைகள் ‘’ என்கிற சிறு புத்தகமொன்றினை நண்பர்கள் கொடுத்தார்கள் !
முன் அட்டையில்,,,,
சகோதரர் காசு.வேலாயுதன்,,நம்மைப் பார்க்காமல்,,,,?
வானம் பார்த்துக் கொண்டிருந்தார் !
பின் அட்டையில்,,,,
நாஞ்சிலின் படத்துடன் விருதுக்காய் விஜயா பதிப்பகம் மகிழ்ந்து கொண்டிருந்தது !
குளிர்சாதன வசதிக்காய் அடைத்திருந்த கதவினைத் திறந்தேன் !
திருப்புகழ் ஒலி !
குறிஞ்சி நிலக் கடவுளை,,,
குமரனை,,,,
முருகனை,,வேலனை,,வேலாயுதனை,,,,,,,
செல்வி ஸ்வேதா தன் தீந்தமிழ்க் குரலால் போற்றிப் பாடிக் கொண்டிருந்தார் !
இருக்கை ஒன்றில் அமர்ந்தேன் !
அமர்ந்து நோக்க,,,
என் முன்னே,,,வெள்ளைத்தலைகளும்,,, சாயக் கறுப்புத் தலைகளும்,,,
பின்னோக்க,,,,, கோவை ராக் அமைப்பின் ரவிந்திரன் அண்ணா எப்பொழுதும் போல புன்னகைத்தபடியே,,,,

கரங்குவித்து விட்டு,,,
அட்டையைப் புரட்டினேன் !
‘’ அடைக்குந்தாழ் ‘’ என்றது ! தலைப்பு !
ஆம்,,,,
பல,,அடைக்குந்தாழ்களைத் திறந்த சகோதரர் காசு.வேலாயுதன் அவர்களின் ’’அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ‘’
[ விழா நிகழ்வுகள் அடுத்த பதிப்பில்,,,,,,,,? ]
பல்லின் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம்
கல்லின் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை
மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழுமின்களே.
-நம்பியாரூரன் என்கிற சுந்தரன் -
அல்லல் பல கூட அவனியெங்கும் தேடியொருத் தங்கலின்றி
சொல்லல் சுவையல்லல் ஏதுமின்றிப் பாடியொரு ஞாயிறில்
கல்லல் கற்றறிதல் என்றேகுமிடமென்றே நாடிநடக்கின்றான்
இல்லின் தொல்லையின்றி கிழத்தமிழ் கற்றபிள்ளை தலைவெள்ளை !
-வேலுப்பிள்ளை என்கிற கந்தரன் -
என்னைவிட,,,,
என் தலையினையும்,,,
அழகாய்ப் படமெடுத்த
சகோதரர் Maniraj Muthu M அவர்களுக்கு !
என்ன தவம் செய்தனை யசோதே !
அடியே !
என்னடி இது ?
இதுவென்ன மாயம் ?
எதுவென்ன மாயம் ?
நானோ ? அழகுக் கிளி !
நான் ! நானும் அழகு தானே ? தாயே,,,
அடியே !
தாயே என்று அழைத்து,,,
என்னை வயதாக்கி விடாதே ?
ம்ம்,,,சொல்லுங்க,,,
சொல்லுங்க,,,
வேண்டாமென்றால்,,,? விடவா ? போகிறீர்கள் ?
இல்லையடி,,,,
ஹாஹா,,தொல்லையடி என்று சொல்லுங்கள்,,,
அடியே,,,
என்னைச் சினமூட்டி விடாதே ?
நீயென்ன பிள்ளையின் கிள்ளையா ?
நான் சொல்ல வந்ததைச் சொல்ல விடு ,,,!
சொல்லுங்கள் ! சொல்லுங்கள் தாயே,,,,
மீண்டும்,,மீண்டும்,,பார் ? தாயே,,என்கிறாய் ?
இனிச் சொல்லவில்லை,,,
ம்ம்,,,நானோ ! கிளி !
என் கைப் பந்திலிருப்பது மலர்கள் ! மலர்கள் !
மலர்களின்மேலேயும்,,கிளி ! கிளியம்மா !
அடியே,,அது கிளியல்லடீ,,மயில்,,,,
ம்ம்,,ஏதோவொரு பறவையினம்,,,, அதற்கென்ன இப்போது,,,
இந்த அழகுப் பதுமையென நான் அவருக்காய்ச் சாய்ந்து கிடக்கிறேன் !
ஆனால்,,அவரோ ? தன்னைச் சித்தனாகக் காட்டிக் கொள்வதற்காக,,,,
தவமிருக்கிறாரடியே,,,,
நிஜமாகவே ! தவம் தான் செய்கிறாரம்மா,,,
என்னைப் பார்த்த பிறகுமா ?
உங்களைப் பார்த்த பிறகு,,தான்,,,
கண் மூடி தவம் செய்யவே,,,? ஆரம்பித்தாரம்மா,,,,
ம்ம்,,,
உன்னையெல்லாம்,,என் தோழியாக,,வைத்திருக்கிறேன்,,பார் ?,,
என்னைச் சொல்ல வேண்டும்,,,
அவரும்,,அழகாகத் தான் இருக்கிறார் !
அடியே,,,,கண் வைக்காதேயடி,,,,
அவர் பாவம்,,,,
அவருக்கென்ன பிரச்சனையோ ?
நீங்கள் தானம்மா !
பிரச்னை !
சரி,,,சரி,,,
சற்றே விலகி நில்,,,
அவர் கொஞ்சம் தனித்திருக்கட்டும்,,,!
விரட்டுகிறீர்கள் ?என்னை,,அப்படித்தானே ?
இல்லையடி,,,
தொல்லையடி நீ ! என்கிறீர்கள் ? அப்படித்தானே ?
ம்ம்ம்,,,
புரிகிறது !,,,
நீங்களே,,,
உங்களவரைக் கவனியுங்கள்,,,,,!
ம்ம்ம்ம்
வேண்டாமடி,,,வேண்டாம்,,,!
நீயும்,,இங்கேயே இரு,,,,!
நீயிருந்தால்
அதுவும்,,நீ என் பக்கத்திலிருந்தால்,,,
எனக்கும் கொஞ்சம் தெம்பாகத்தானிருக்கிறது ?
ம்ம்ம்ம்ம்
அதுவரை,,,,
அவர் கொஞ்சம்,,,தியானிக்கட்டும்,,,,!
நாமும்,,கொஞ்சம் ,,,காத்திருப்போம்,,,,!
சிவன் !
கண் விழிக்கட்டும்,,, என,,,
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக,,,,,
கச்சிப்பேடு பெரிய கற்றளியில்,,,,
தோழியர்கள் இருவரும் காத்திருக்கிறார்கள் !


நேற்று ![05/0202020]
இங்கே தான்,,,,
நான் !
அழிந்து போன தருணம்,,,,? இது !
பொன்னி நதி பாய்ந்து வளம் கொழித்த தஞ்சை மண்ணில் ஆயிரமாயிரம் மன்னர்கள் ஆண்டிருப்பார்கள் !ஆண்டிருக்கிறார்கள் !
ஆனால்,,,,,
இந்த ஒற்றை மனிதனின் பேர் மட்டுமே,,
இன்றும்,,,
நிலைத்திருக்கிறது !
இதுவென்ன மாயம்,,,,,,?
இங்கே முகநூலில்,,,
நூற்றுக்கணக்கிலே,,,,சோழ ஆர்வலர்கள் குவிந்திருக்கிறார்களே ?
அதனாலா ?
இல்லை,,இல்லையில்லை,,,,,
எந்த இடத்திலும்,,
தன்னை,,
தன்னை மட்டுமே ? முன்னிறுத்தாமல்,,,,
எல்லாம்,,எல்லாம்,,
பெருவுடையார் கருணை !
,"நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க...
என்று வரி வரியாக,,,,கல்லிலே வெட்டுகையில்,,,,,
’’வேண்டாம்,,,சிற்பியே,,,
இங்கே அனைத்தும்,,
நான்,,,தான்,,,,
நானே தான்,,,
என் ஆட்சி,,,
எனது ஆட்சி,,,!
ஆதலின்,,இங்கே..என் பெயரினைத்தவிர,,,வேறு எவர் பெயரும் வேண்டாம்,,,, என்று அந்த மாமன்னன் சொல்லியிருக்க முடியும்,,,?
ஆனால்,,,,
அந்த மனிதன் சொல்லவில்லை,,,!
பொன் கொடுத்தவன் பெயர் மட்டும் வெட்டினால் போதும்,,,
கல் கொத்திக் களைத்திருக்கும்,,,கல்தச்சருக்கு மோர் கொடுத்தவன் பெயர்,,,தரை மெழுகியவன் பெயர்,,,,, நடனமாடியவர் பெயரெல்லாம் வேண்டாமென மறுத்திருக்கவும் முடியும்,,, ?
ஆனால்,,,,
அப்படியேதும் செய்யவில்லை,,,,!
இதோ,,
இந்தப் பெருங்கோவிலைப் போலவே,,
நமக்கொரு,,
கல் மாளிகை கட்டுக,,! என்று சொல்லி இருந்தால்,,,,
பெருந்தச்சன் மறுத்திருக்கப் போகிறாரா ?
இலத்தி சடையன் முடியாதென்றிடப் போகிறாரா ?
கட்டி இருக்க முடியும்,,,,,
ஆனால்,,கட்டவில்லை,,,
நாமெல்லாம்,,,
என்றாவதொரு நாள்,,,
அழிந்து போவோம் !
மண்ணோடு மண்ணாகிப் போவோம்,,,,
ஆனால்,,,
பெருவுடையாருக்குக் கட்டப்பட்டக் கோவில்,,,!
ஒரு நாகரீகத்தை,,
ஒரு வாழ்வியலை,,
ஒரு சமூகத்தின் செழிப்பினை,,,
பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும்,,,
நினைக்க வேண்டும் !
சொல்ல வேண்டும்,
பேச வேண்டும்,,,,
அந்த வாழ்விற்கு குறையாத வாழ்வினை,,நம் மக்கள் வாழ வேண்டுமென நினைத்த அந்த மனிதனின் பெருங்கனவு !
அது மட்டுமா ?
அத்தனை பெரிய கோவிலைக் கட்டி விட்டு,,,
ராஜராஜேச்வரம் என்று பெயரினை மட்டும் வெட்டி விட்டு,,,,
பெருவுடையாருக்குப் பக்கத்திலே,,,
குறைந்த பட்சம்,,
தன் ஆளுயரச் சிலையாவது நிறுவி இருக்கலாமே ?
அதுவும்,,செய்யாமல்,,,,
கூப்பிய கரத்துடன்,,,
எவருக்கும் தெரியாமல்,,கோபுரத்தின் உச்சியில்,,ஒற்றை சிலையொன்று,,போதுமென நினைத்த பக்குவம்,,,!
தன்னை நேசித்த அதிகாரி செய்தளித்த செப்பு படிமம் ஒன்று போதுமென நினைத்த பெருந்தன்மை,,
இவையெல்லாவற்றிற்கும்,,மேலாக,,
எல்லோர்க்கும்,,நன்றாம் பணிதல் என்று குறள் சொல்லிய நெறி அறிந்த மாமன்னரின் பெருங்கோவிலில்,,,,
இத்தனையும்,,
நினைத்தபடி,,,,
நின்றிருந்த போதுதான்,, தோன்றிற்று,,,,!
பட்டு வேட்டி,,சட்டை,,,கேமரா,,,மொபைல்,,,பாட்டரிகள்,,
பாட்டரி சார்ஜர்,,,பிஸ்கெட்,,பழங்கள்,,,குளிர்பானங்கள்,,,
என அத்தனையும்,,நிறைத்த தோள் பையுடன் வந்தவன்,,,,
இவையேதுமின்றி,,,,
மேல் சட்டையினையும்,,கழற்றிவிட்டு,,
இடுப்புத் துணியுடன்,,,
நின்றிருந்த பொழுது,,,,!
ஒற்றைத் துளி,,,!
கோபுரக் கலச நீர் நம்மீது படாதா ? என பரிதவித்துப் பலர் ஒட,,,,
விழும்,,நம் மீதும்,,விழும்,,,
அவன் நினைத்தால்,,,
நம் மீதும்,,விழும்,,, என்றிருந்த போது,,,,
நேற்று,,,!
நான்,,மறைந்து போனேன்,,,,!
ஆம்,,,!
இப்பொழுதும்,,,
இனி,,
எப்பொழுதும்,,,?
இந்த அமைதியைச் சற்று நேரம்,,,
எனக்களித்த எம் மன்னரே !
உம் திருவடிக்கு இந்த பிள்ளையின் அன்பு முத்தங்கள்!


இந்த நாடு பிடிக்கவில்லையென்றுதான்,,!
மலைக் காடுகளில்,,
குகைகளில் குடி கொண்டோம்,,,,?
உங்களுக்குள்,,
உங்களைத் தேடுங்கள் என்றோம்,,,,?
ஞானம் என்பது,,,?
எல்லாவற்றையும் அனுபவிப்பது அல்ல ?
எல்லா அனுபவங்களும்,,
கண் முன்னே இருந்த போதும்,,
அதனைப் பார்த்தபடி யே,,
அதனிலிருந்து விலகி இருப்பதுதான்,,,
ஞானம் ! என்றோம்,,,,
எங்களை
வணங்காதீர்கள்,,,
உங்களுக்குள் உள்ள ,
அந்த ஒளியினை வணங்குங்கள் என்றோம் !
ஆனால்,,,
அங்கேயும்,,
சிலை வைத்தீர்கள் ?
எதை விட்டு விட்டு வந்தோமோ ?
அதற்காக ஆசைப்படுவது போல,,,
எங்களை உருவகிக்கிற பன்னாட்டு முதலைகளிடம்,,
உங்களில்,,
சிலர் சிக்கிக் கொண்டு,,
எங்களை வைத்து,,
உங்களிடம் வியாபாரம் நடத்துகிறார்கள் ?
ஆம் !
அதில் அவர்கள் ,
பிழைப்பும் கழிகிறது !
இப்போது,,
நாங்களென்ன செய்ய,,,? பிள்ளாய்,,,
ஐயனே !
உங்களை வைத்து
பிழைப்பு நடத்துபவர்கள்,,
உங்களைப் போல,,
முண்டிதமாக வருவார்களா ? எனக் கேட்க வேண்டும் ?
ஐயனே !
அதை மட்டும் கேட்டுச் சொல்கிறீர்களா ?
நானா ?
நாங்களா ?
கேட்டால்,,,அவர்கள்,,,
எங்களை விட்டு விட்டு,,
ரோமிற்கு பயணித்து விடுவார்கள்,,! பிள்ளாய்,,
ஙே....ஙே...
ஆமாம்,,,
அதுவும் கூட உண்மைதானே,,,?
அன்றோடி வந்தவர்க்கும் அருளைக் காட்டி
தின்றோடிச் சென்றவர்க்கும் பொருளைக் காட்டி
பண்பாடி நின்றதன்றோ ! எம் தாய்காட்டியத் தமிழ் !
தலை வேண்டுமென்று வந்தார்க்கும் தலையே தந்து,
விலை வேண்டுமென்று வந்தார்க்கும் விலையே தந்து,
உலை வைத்தவர்க்கும் வாழ்வதனைத் தந்தன்றோ ? தமிழ் !
பூ வேண்டி வந்தார்க்கு பொன்னே தந்து,,,
புகழ் வேண்டி வந்தார்க்குப் புவியே தந்து,,
பூவுலகு முழுதாள வந்த மொழி ! எம் தமிழேயன்றோ !
வெகு நாட்களுக்குப் பின்...
நான். .
அங்கே சென்றிருந்தேன் !
அந்த அரச மரத்தடி பிள்ளையார் ...
காணாமற் போயிருந்தார்....?
உன்னைப் போலவே ?
நேற்றின் பொழுதுகளில்..
நீ
அமர்ந்திருந்த ..
அந்த ஒற்றைக் கல் கூட
சரிந்திருந்தது!
உன் நினைவுகளைப் போலவே ?
நீர் தளும்பிக் கொண்டிருந்த கம்மாய்
நீரின்றி
காய்ந்து வறண்டிருந்தது ..
உன் மனம் போலவே ?
நீயும்
நானும்
அமர்ந்து கால் நனைத்த
படிக்கட்டுகளில் மண் மூடியிருந்தது....
மெல்ல துளிர்க்கும் விழி நீரைத் துடைத்தபடி..
பக்கத்து மண் சரிவின் வழியாய் இறங்கினேன்...?
மணியொலி கேட்டது!
சொடலைக்கு பொங்கல் வைக்கிறார்களோ?
சுற்றிலும் தேடினேன்....
ஏலேய் மக்கா..
எப்ப வந்த ...
சொகமா ய்றுக்கியா ?
என்னத்தலே தேடுக. ..
பராக்க்கு பாத்துகிட்டு
பாக்கெட்டுல மணி அடிக்கிற போநை எடுல...
இப்பவும்..
நீ மாறலைலே...
எப்பத்தான் மாறுவியோ ?
லே ய்வனே
சாமியக் காணுமின்னு தேடுகையோ?
அதோ அந்த மண் மேடுதான் ..
இது அவளோட குல சாமியில்லா..
அவ பொறந்த நாளைக்கு வருவா..
பொங்கல் வைக்க...
முந்தானாள் கூட ..
வந்து பொங்கல் வச்சிட்டுப் போனாளே
இப்ப ஊர்ல எவனும்.....ம்ம்
என்றபடி தோள் தட்டி விட்டு நடந்தான்..
சுடலை முத்து என்கிற என் சினேகிதன் ..
மீண்டும்..
நான். .அந்த படிக்கட்டின்
ஓரத்து மண் மேட்டில் அமர்ந்திருக்கிறேன்..
முந்தானாள் என் பொறந்தநாளைக்கு கட்டின
வெள்ளை வேட்டி அழுக்காகும்..
மனையாள் திட்டுவாள் ...
அதெல்லாம் அப்புறம் பாத்துக்கிடுவம்...
கொஞ்சம் நேரமாயிடுச்சின்னா ...
என்னை எழுப்பி விடுறையா ?
சொடலை...
நான் கொஞ்சம் உறங்கணும். .
சொடலை..
சொல்லத் துடிக்குது மனசு....
சொடலை தூரத்தில்,,
நடந்து கொண்டிருந்தான்,,,,,,


ஆத்தா !
காளியம்மா,,,
உனக்கு தீபம் ஏத்துனவ நான்,,,,, !
கூட வந்த மாமியார்,,, ,,,,
வழக்கம் போல,
எரியுற தீயில எண்ணெயை ஊத்துறா ?
நீயும்,,,
அவ கேட்ட வரத்தையெல்லாம் கொடுத்தியன்னா ?
அப்புறம்,,,
நான்,,,,,நீயாகிப் புடுவேன் பாத்துக்க !
உன்னோட வேலையை,,
நாம் பார்க்க ஆரம்பிச்சுருவேன்,,காளியம்மா,,,,
புரிஞ்சுதா ? தாயீ,,,,,
புரிஞ்சா ? சரி,,,,
பகிர்கின்ற பாலதிலே பாசத்தை தேக்கினையோ ?
நுகர்கின்ற காலதிலே வாசத்தை தேக்கினையோ ?
நகர்கின்ற ஞாலத்திலே நேசத்தை தேக்கினையோ ?
மிளிர்கின்ற சங்கதிலே ஒசையதை தேக்கினையோ ?
கைச்சங்கை ஒளித்து வைத்து,
பாற்சங்கை உறிஞ்சுகின்ற வைணவா !
காற்சதங்கை ஒலிகாட்டி கன்றதனை வரவைத்து
நகச்சங்கை உறியவைத்த மாதவா !
பூங்கரத்தாள் தந்த பாலில்,
பொங்கி வரும் பாசவலை அறிந்தாயா ?
பூச்சூடி நின்ற மகள், பூமியதில் அமர்ந்தபடி,
பூவைப் போலுனை அணைத்த கையில் மகிழ்ந்தாயா ?
ஓவியம் ; திரு.கேசவ் அவர்கள்
மாமல்ல புரத்து சிற்பம் சொன்ன,,,
காதலர் தினக் கதை அல்ல... 

நிஜம் சொல்லும்,,,
நித்திலவாணியின் கதை !
வா ! வா ! கண்மணீ,,,
பாதி வழி வந்தவள்,,
மீதி வழியில் ஏனடீ முரண்டுகிறாய் ?
வந்து விடு,,,,வளமான வாழ்க்கை,,
நமக்காகக் காத்திருக்குது ?
வா !,,,
இந்த மாடு,,கன்றுகளை விட்டு விட்டு வா,,,
உன்னை ராணி மாதிரி வைத்து காப்பாற்றுகிறேன்,,,
விடு,,விட்டு விடு,,,
எப்படி ? எப்படியடா ? எனைக் காப்பாய் ?
இதோ,,பார்,,,,
நான் வளர்த்த ஆவினங்களெல்லாம்,,,
என் பின்னே,,
அணி வகுத்து நிற்பதனைப் பார்த்த பின்னும்,,,உன் பின்னால்,,,
நான் வருவதெப்படியடா ?
அதோ,,
அந்த இளங்கன்றின் கண்களைப் பார்,,,,,
அதோ,,
அந்த பசுவின் முக வாட்டத்தினைப் பார் ?
அவை ஐந்தறிவு படைத்தவையடீ,,,
ஆமாம்,,,ஐந்தறிவு படைத்தவை தான்,,,,
வெறும் வைக்கோலும்,புல்லும்,கழுநீரூம் தான் அளித்து வளர்த்தேன்,,,அதற்கே,,,
நான் செல்கிறேன் என்றதும்,,,
முகம்,,இத்தனை வாடி விட்டதே ?
இதே போலத்தானே ?
எனைப் பெற்றவர்களின் முகமும் வாடி இருக்கும்,,,
ஆறறிவு படைத்த,,,,நீயும்,,
நானும்,,இப்படி நடந்து கொள்ளலாமா ?
அடியே,,
அப்படியென்றால்,,,,?
நம் காதல் பொய்யா ?
மெய்யைத் தேடி அலைகின்ற மனிதர்களிடையே,,,
இந்தக் காதல்,,
தோன்றுமானால்,,,?
இந்த காதலும் பொய் தான்,,,,?
ஹாஹாஹா,,
ஆனால்,,,
இந்த ஆவினங்களை,,,
இந்த மாட்டுக் கூட்டத்த்திலே இருந்து ஒரு மாட்டினை திருமணம் செய்ய முடியாதடீ,,,,
ஆம்,,,
உண்மைதான்,,,,
ஆனால்,,,
இந்த ஆவினங்களைக் காதலிக்க முடியும்,,,
காதல் என்றால் என்னவென்று நினைத்தாய் ?
அன்பு காட்டுதல்,,,
இந்த ஆவினங்களிடம்,,
அன்பு காட்ட முடியும்,,,
எடு கையை,,,
விடு காதலை,,,
நான் செல்கிறேன்,,,,
வளமான வாழ்க்கை ,,
சிறப்பான எதிர்காலம்,,,
நமக்காகக் காத்திருப்பதனை மறந்து விடாதே ?
எது ?
வளமான வாழ்க்கை,,
அதோ,,பார்,,,
நீ
அழைத்துச் செல்கிற இடத்தினைப் பார்,,
அடர் கானகம்,,,
சிங்கமும்,புலியும்,கரடியும்,,
காத்திருக்கின்றன,,,,?
அவைகள்,,,
எல்லாம்,,,நம் நண்பர்கள்,,
நமக்காகக் காத்திருக்கிறார்கள் ?
நம்,,நண்பர்களா ?
இல்லையடா,,இல்லை,,
உன் நண்பர்களென்று சொல்,,,
அடேய்,,
பாதகா,,,,
நன்றாகப் பார்,,,
உன் நண்பனொருவன்,,,
சிங்கத்தின் தோலைப் போர்த்தியபடி,,,
நமக்காகக் காத்திருப்பதைப் பார்,,,
வேண்டாமடா,,வேண்டாம்,,,,
விட்டு விடு,,என்னை,,,
கட்டி விட வந்தவன்,,நான்,,
பெண்ணுன்னை
விட்டு விடுவேனா ?
தட்டி விட்டு வந்தவள்,,நானுன்னைக்
கொட்டிக் கவிழ்த்து விட,,
எத்தனை நேரமடா ? ஆகும்,,,
பெண்ணென்று
என்னை வீழ்த்த நினைக்காதே ?
பிடாரியாக மாற வெகு நேரம்,,,ஆகாது,,,,
பெண்ணுக்கு,,
இத்தனைத் திமிரா ?
உனைப் பெற்றவளும்,,
பெண் தானடா ? கிராதகா,,,
நாளைய வரலாறு,,
நம்மைப் புகழ வேண்டாமா ?
அதற்காகவாவது,,நாம் வாழ வேண்டாமா ?
வா !
வந்து விடு கண்மணீ,,,
நாளைய வரலாறு,,
நம்மைப் பார்த்து திருந்த வேண்டுமடா ?
அதற்காகவாவது,,,
இங்கேயே,,
இந்த கடல் மல்லைக் கரையிலுள்ள
இவ்வனத்துப் பாறையிலேயே,,
சிலையாக இருப்போம்,,,
கலையாக வாழ்வதனை விட்டுவிட்டு,,
சிலையாக வாழ்கிறேன் என்கிறாயே,,பிச்சி,,
வலையில் விழுந்து,,,கெட்டு,
உலையாகப் போகுமுன்னே,,,,
சிலையாக இருப்பதொன்றும் கேடில்லை,,, எத்தா,,
எவருக்குத் தெரியும்,,,
நம் கதை,,,,?
நம்மைப் பார்த்ததும்,,,
புரிந்து,,
எழுத்தாக்கப்,,,,,
பிள்ளையொருவன்,,
வராமலா போய் விடுவான்,,,,?
அது வரைக்கும்,,,
பிடித்த உன் கரத்தை,,
நான் விடப் போவதில்லை,,,,?
பெண் !
நானும்,,
உன்னுடன் வரப் போவதில்லை,,,,,?
என்பது,,தெரிந்திருந்தும்,,,கரம் பற்றி நிற்கிறாயே,,?
என் கால்,,
தரை பற்றி நின்று,,
என் மானம் காக்குமடா,,,,,
என் இன மானம் காக்குமடா,,,, !

சிதரால்