பேரறிஞர் அண்ணா நினைவு நாளுக்காக,,,
அண்ணா ! அண்ணா ! என்றழைக்கவொரு அண்ணன் இருந்தான் !
அண்ணா ! என்றதும், தம்பீ ! என்றே கரகரக்கவொரு மன்னன் இருந்தான் !

பல்லவர் கோட்டத்துக் காஞ்சியிலே தான் பிறந்திருந்தான் !
வல்லவர் கோட்டத்தைச் சாய்த்தேதான், கோட்டையிலே அமர்ந்தான் !

ஆங்கொரு தமிழ் ! ஈங்கொரு தமிழ் ! போதும், போதுமே தமிழ் ! என
பாங்கவர் சொல்லிய நாட்டினிலே ! பாரெங்கும் தமிழ் ! தமிழே என்றான் !

ஒன்றே குலம் ! என்றான் !. ஒருவனே தேவன் ! என்றான் !
நன்றே ’’தமிழ் நாடு ‘’ என்றே நானிலத்தார் அறிய வைத்தான் !

ஆளவொரு மொழி ! வாழவொரு மொழி ! ஆட்சி நடத்தவொரு மொழி !
ஆண்டவர்கள் சொன்னதெல்லாம் புறந்தள்ளி இருமொழி போதுமென்றான் !

கல் தோன்றி, மண் தோன்றி, வருமுன்னாலே, தோன்றி வந்த மொழியதற்கு,
சொல்லுக்குச் சுவை கொடுத்த தமிழுக்கு உலகத்தமிழ் மாநாடு கண்டான் !

சோற்றுக்கு அலைகின்றோம் பஞ்சமிங்கே ? என்றழுதவர்கள் மத்தியிலே,
நாற்றுவயல் எலிக்கறியைச் சாப்பிடுங்கள் என்ற சண்டாள மதியோர் முன்னால்,

மூன்றுபடி ரூபாய்க்கு ! லட்சியம் தான் ! ஒருபடி ரூபாய்க்கு நிச்சயம் தான் !
என்று சொல்லி வென்ற அண்ணா !ஒரு ரூபாய்க்கு படி அரிசி கொடுத்தவர்தான் !

தாலியொரு வேலி ! என்றே அறிந்தவர் தான் ! ஆதலினால்,,, மாலை மாற்றிய
சீர்திருத்த திருமணத்தையும் செல்லுகின்ற பெரிய சட்டமாக்கியவர் தான் !

நாட்களது எண்ணப்படுகிறதென்றே , திருக் கருத்திருமன் சபித்த போதும்,,
என்னடிகள் அளந்தே நடக்கின்றேன்!என்றபடி சட்டமன்ற மாண்பு காத்தவர்தான்

முத்துக்குளித்தது கொற்கையில் மட்டுமல்ல முத்துநகர் தூத்துக்குடியிலும் தான்!
சொத்தைக் காரணங்கள் கூறாமல் துறைமுகம் அமைத்திடுக ! என்றவர் தான் !

ஜாம்ஷெட்பூர் டாடாக்கள் போலே,,, சேலத்துத் தமிழர்களும் ஆதல் வேண்டும் !
ஜம்பத்தை விட்டுவிட்டு சேலம் உருக்காலைத் திறந்திடுக அரசே ! என்றவர்தான்!

பல் முளைக்கும் குழவி, முதல் பல் விழுந்த கிழவிவரை கரங்கூப்பி வணங்கிட, சொல்லுக்குச் சொல்லெடுத்த எங்கள் அண்ணாவின் ஆட்சித்திறன் சொல்ல இன்றொரு நாள் போதுமோ ?
அ.வேலுப்பிள்ளை
No comments:
Post a Comment