Thursday, 13 February 2020

பகிர்கின்ற பாலதிலே பாசத்தை தேக்கினையோ ?
நுகர்கின்ற காலதிலே வாசத்தை தேக்கினையோ ?
நகர்கின்ற ஞாலத்திலே நேசத்தை தேக்கினையோ ?
மிளிர்கின்ற சங்கதிலே ஒசையதை தேக்கினையோ ?
கைச்சங்கை ஒளித்து வைத்து,
பாற்சங்கை உறிஞ்சுகின்ற வைணவா !
காற்சதங்கை ஒலிகாட்டி கன்றதனை வரவைத்து
நகச்சங்கை உறியவைத்த மாதவா !
பூங்கரத்தாள் தந்த பாலில்,
பொங்கி வரும் பாசவலை அறிந்தாயா ?
பூச்சூடி நின்ற மகள், பூமியதில் அமர்ந்தபடி,
பூவைப் போலுனை அணைத்த கையில் மகிழ்ந்தாயா ?
ஓவியம் ; திரு.கேசவ் அவர்கள்

No comments:

Post a Comment